நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஆரி, வரும் சட்ட மன்ற தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
தமிழக தேர்தல் ஆணையத்துடன் இணைந்து நடிகரும், சமூக ஆர்வலருமான ஆரி அர்ஜுனன் தேர்தல் பிரச்சாரம் விழிப்புணர்வு காணொளி ஒன்றில் நடித்துள்ளார்.
இதில் ஓட்டு கேட்டு வரும் அனைவரும் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று கட்சி வேட்பாளர் முதல் தொண்டர்கள் அனைவருக்கும் அறிவுரை கூறுவது போல் இந்த விழிப்புணர்வு காணொளி அமைந்துள்ளது.

நாட்டுக்காக ஓட்டு போடுங்க. உங்களுக்காக மாஸ்க் போடுங்க எனும் வாசகத்தோடு வரும் இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஓட்டு போடுவது எப்படி நமது கடமையோ, அதேபோல் சமூக இடைவெளி யோடு மாஸ்க் அணிந்து ஓட்டு போடுவது நமது கடமையாகும் என்கிறார் நடிகரும், சமூக ஆர்வலரும் ஆன ஆரி அர்ஜுனன்.
Eelamurasu Australia Online News Portal