Home / குமரன் (page 10)

குமரன்

19 வருட கனவு நனவானது – நடிகர் ஜெய் நெகிழ்ச்சி

நடிகர் ஜெய், பிரேக்கிங் நியூஸ், எண்ணித் துணிக, பார்ட்டி, குற்றமே குற்றம், சிவ சிவா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘பகவதி’ படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஜெய். இதையடுத்து சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார். இதுவரை 25 படங்களில் நடித்துள்ள ...

Read More »

விமானத்தில் நாயை அழைத்து வர பெண் செய்த காரியம்

சமீபத்தில் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பெண் ஒருவர் தனது செல்ல நாயை அழைத்து வர செய்த காரியம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விமானங்களில் நாய், பூனை போன்ற செல்ல வளர்ப்புப் பிராணிகளையும் அழைத்து வர அனுமதிக்கப்படுகிறது. இவை 5 கிலோ எடைக்கும் கீழ் இருந்தால் அவற்றை அதற்கான விசே‌ஷ காற்றோட்ட வசதி உள்ள பையில் அடைத்துக் கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் சரக்கு கேபின் மூலமாகவும் இவற்றை ...

Read More »

மீண்டும் அரியணை ஏறுவாரா ட்ரூடோ?

கனடாவில் இன்று பொதுத்தேர்தல் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. இரண்டு வருடகாலப்பகுதியில் இரண்டாவது தடவை கனடாவில் பொதுமக்கள் பொதுதேர்தலில் வாக்களிக்கின்றனர். குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாக தேர்தலை ( இரண்டு வருடகாலத்திற்கு முன்பாக ) தேர்தலை அறிவித்த கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகஸ்ட் மாதம் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் – மூன்றாவது முறையாக அரியணை ஏறுவதே அவரது நோக்கம். ஐந்து வாரகாலமாக தீவிரமாக இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து தலைவர்களும் வாக்காளர்களை நோக்கி தங்கள் ...

Read More »

இரு அமைச்சர்களின் வற்புறுத்தல் காரணமாக நான் இராஜினாமா செய்கிறேன் – துஷான் குணவர்தன

இரு அமைச்சர்களின் வற்புறுத்தல் காரணமாக நான் இராஜினாமா செய்கிறேன் என நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார். சதொச நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட மோசடி மற்றும் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயற்பட்டமைக்கு இரண்டு அமைச்சர்கள் பிரச்சினைக்குள்ளாகி என்னைப் பதவிலிருந்து விலக்கத் திட்டமிட்டுள்ளனர் என நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித் துள்ளார். எனது உயிருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனது உயிரைக் காப்பாற்றப் ...

Read More »

அரசாங்கத்துக்குள் பனிப்போர்!

கெரவலப்பிட்டியவில் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியமை தொடர்பில் அரசாங்கத்தின் பங்காளிகளில் பத்து பங்காளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசு தேவ நாணயக்கார உள்ளிட்டோர் தலைமையிலான பங்காளிகளே, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் கெரவலப்பிட்டிய யுகதானவி மின்நிலையத்தில் 40 சதவீதத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றும் தீர்மானத்துக்கே அந்த 10 பங்காளிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

Read More »

ஆஸி.யில் ஊரடங்கை எதிர்த்து மக்கள் போராட்டம்- பெப்பர் ஸ்பிரே தெளித்து விரட்டியடித்த காவல் துறை

ஊரடங்கிற்கு எதிரான போராட்டங்களின்போது பொது மக்களுக்கும், காவல் துறைக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. ஆஸ்திரேலியாவில் சிட்னி, கான்பெர்ரா, மெல்போர்ன் போன்ற நகரங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அந்த நகரங்களில் மட்டும் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய காரணங்கள் இன்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளால் மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்துவதுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ...

Read More »

ஸ்பெயின் தீவில் எரிமலை வெடித்து சிதறியது

ஸ்பெயினுக்கு சொந்தமான தீவில் எரிமலை வெடித்து சிதறிய நிலையில் அப்பகுதி மக்கள் வெளியேறி இருந்ததால் உயிரிழப்பு ஏற்படவில்லை. மேற்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோ அருகே கேனரி தீவு உள்ளது. இந்த தீவு ஸ்பெயின் நாட்டுக்கு சொந்தமானது ஆகும். இங்கு 80 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இந்த தீவில் 8 எரிமலைகள் உள்ளன. அவை தற்போதும் அவ்வப்போது வெடித்து சிதறி வருகிறது. இந்த எரிமலைகளில் ஒன்று ‘கும்ப்ரே வியாஜே’ 1971-ம் ஆண்டு ...

Read More »

அரசாங்கம், ஐநாவை… கையாளத் தொடங்கி விட்டதா?

ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல மீளாய்வு அறிக்கை எதிர்பார்க்கப்பட்டது போலவே வெளிவந்திருக்கிறது. அது சிங்கள கூட்டு உளவியலை ஒப்பீட்டளவில் அதிகம் பயமுறுத்தாதவிதத்தில் இலங்கை முழுவதுக்குமான மனித உரிமைகள் தொடர்பான ஓர் அறிக்கை என்ற வெளித்தோற்றத்தை காட்டுகிறது. இந்த அறிக்கை இவ்வாறு அரசாங்கம் சுதாகரித்துக் கொள்வதற்கு ஒப்பீட்டளவில் அதிகரித்த வாய்ப்புக்களைக் கொண்ட ஓர் அறிக்கையாக வெளிவருவதற்கு உரிய வேலைகளை அரசாங்கம் கடந்த சில மாதங்களாக தீவிரமாகச் செய்துவந்தது. இந்த அரசாங்கம் ...

Read More »

அரசியல் நிகழ்ச்சி நிரலை அடைய ஈஸ்டர் தாக்குதல்களை அரசாங்கம் பயன்படுத்துகிறது!

அரசாங்கம் தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை அடைய 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைப் பயன்படுத்தியதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு குரல் கொடுக்கும் கத்தோலிக்க ஆர்வலர்களை ஒடுக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கத்தோலிக்க சமூகத்தினரிடையே அரசாங்கம் பொய்யான கூற்றுகளை பரப்புகிறது எனவும் அவர் தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பான ...

Read More »