தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுப்பினர்களை நியமித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் எண்.12 இன் விதிகளின்படி இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஒய்வு பெற்ற நீதிபதியான உபாலி அபேரத்ன ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜகத் பண்டார லியனாராச்சி, கிஷாலி பின்டோ ஜயவர்தன, ஒய்வு பெற்ற நீதிபதி ரோஹினி வல்கம மற்றும் கலாநிதி அதுலசிறி குமார சமரகோன் ஆகியோர் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாவர்.
Eelamurasu Australia Online News Portal