ஆஸ்திரேலியாவின் கடல் பகுதியில் உயிரிழந்த இந்தோனேசிய மற்றும் சோமாலிய தஞ்சக்கோரிக்கையாளர்களின் உடல்களை மீட்டெடுக்க வேண்டிய பணியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய கடற்படையின் முன்னாள் மாலுமி ஒருவர், 10 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த மோசமான நினைவுகளால் துன்புறுவதாகத் தெரிவித்திருக்கிறார்.
அகதிகளின் நிலையையும் துன்பத்தையும் அவர்களை ஆஸ்திரேலிய அரசு நடத்திய விதத்தையும் கண்ட பிறகு, தஞ்சம் கோருபவர்கள் பற்றி தனது மனப்பான்மை முழுமையாக மாறிவிட்டதாக அந்த மாலுமி குறிப்பிட்டிருக்கிறார்.