குமரன்

ரோலர் கோஸ்டரில் சிக்கித்தவித்த 20 பேர் பத்திரமாக மீட்பு

அவுஸ்ரேலியாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ரோலர் கோஸ்டரில் சிக்கித்தவித்த 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலியா நாட்டின் மூவி வேர்ல்ட் பொழுதுபோக்கு பூங்காவைச் சேர்ந்த ரோலர் கோஸ்டரில் 20 பேர் பயணம் செய்தனர். சங்கிலியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரோலர் கோஸ்டர் திடீரென நடுவழியில் நின்றுவிட்டது. இதனால் தரையிலிருந்து 20 மீட்டர் உயரத்தில் ரோலர் கோஸ்டரின் உள்ளே 20 பேரும் சிக்கிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து மீட்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரோலர் கோஸ்டரில் சிக்கித்தவித்த 20 பேரையும் பத்திரமாக மீட்டனர். ...

Read More »

5000mAh பேட்டரி திறன் கொண்ட ஆசஸ் ஜென்ஃபோன் பெகாசஸ் 3எஸ் ஸ்மார்ட்போன்

ஆசஸ் நிறுவனம் சீனாவில் அதன் புதிய ஜென்ஃபோன் பெகாசஸ் 3எஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆசஸ் ஜென்ஃபோன் பெகாசஸ் 3 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தல் பதிப்பே ஆகும். இந்த ஆசஸ் ஜென்ஃபோன் பெகாசஸ் 3எஸ் ஸ்மார்ட்போன் 32ஜிபி மற்றும் 64ஜிபி ஆகிய இரண்டு உள்ளடங்கிய சேமிப்பு வகைகளில் வருகிறது. 64ஜிபி வகை கொண்ட ஆசஸ் ஜென்ஃபோன் பெகாசஸ் 3எஸ் ஸ்மார்ட்போன் CNY 1,999 (சுமார் ரூ.19,600) விலையில் கிடைக்கும். மற்றும் 32ஜிபி வகை கொண்ட ஆசஸ் ஜென்ஃபோன் பெகாசஸ் 3எஸ் ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் ...

Read More »

ஜல்லிக்கட்டு மிருக வதையல்ல… மனித வதை – பாரதிராஜா

ஜல்லிக்கட்டு மிருக வதையல்ல, அது மனித வதை என்று இயக்குனர் பாரதிராஜா ஆவேசமாக கூறியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா கலைஞர்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜாவும் ஜல்லிக்கட்டுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 4000 ஆண்டுகளாக விளையாடி வரும் தமிழர்களின் வீர விளையாட்டைத் தடை செய்வது எந்த வகையில் நியாயம்? இது மிருக வதையல்ல, மனித வதையென்று ...

Read More »

1MDB விசாரணைக்கு உதவும் அவுஸ்ரேலிய காவல்துறை

மலேசியாவின் 1MDB நிதி விவகாரத்தில் தொடர்புடைய ஆஸ்திரேலிய நிறுவனங்கள் குறித்து அனைத்துலகச் சட்ட அமைப்புகளுடன் இணைந்து விசாரணை நடத்துவதாக அவுஸ்ரேலிய மத்தியப் காவல்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் உருவாக்கிய 1MDB நிதியின் தொடர்பில் குறைந்தது 6 வெளிநாடுகளில் விசாரணை நடைபெறுகிறது. சுவிட்சர்லந்து, சிங்கப்பூர், அமெரிக்கா போன்றவை அவற்றில் அடங்கும். அதன் தொடர்பில் மூன்றரை பில்லியன் டாலருக்கும் மேலான தொகை முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க நீதித் துறை வழக்குப் பதிவுசெய்துள்ளது. அதில் ஒரு பில்லியன் டாலருக்கும் மேல் நியூயார்க், பெவர்லி ஹில்ஸ், லண்டன் ...

Read More »

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள சிறீலங்கா அரசாங்கம் இணக்கம்

சிறீலங்காவில் பங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள சிறீலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. புதிதாக கொண்டு வரப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான வரைவு ஆவணம் கடந்த செப்ரெம்பரில் சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த வரைவு ஆவணம், வெளியே கசிந்துள்ள நிலையில் அதற்கு பல தரப்பினரிடமிருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. இந்த நிலையிலேயே, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட மூல வரைபில் திருத்தங்களைச் செய்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த திருத்தங்கள் தொடர்பாக, நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடந்த ...

Read More »

அட்டவணையை விமர்சித்த வார்னர்

அவுஸ்ரேலியாவில் டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த அடுத்த நாளில் இந்தியாவில் டெஸ்ட் தொடர் தொடங்குவதால் அட்டவணையை வார்னர் விமர்சித்துள்ளார். இலங்கை அணி அவுஸ்ரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி அடுத்த மாதம் 17-ந்திகதி தொடங்குகிறது. 2-வது போட்டி 19-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 22-ந்திகதியும் நடக்கிறது. அடுத்த நாள் 23-ந்திகதி இந்தியாவில் முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலியா அணி விளையாட இருக்கிறது. அந்த அணி இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. ...

Read More »

ஐஃபோன் பிறந்த கதை

அப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆகின்றன. ஐஃபோன் வைத்திருப்பது சமூக அந்தஸ்தைக் காட்டும் விஷயமாகக் கருதப்படும் நிலையில் அது கடந்த வந்த பாதையை அலசுகிறது இந்தக் கட்டுரை. ”ஸ்டீவ் என்னிடம் இது ஒரு மிகவும் முக்கியமான ரகசிய விஷயம் என்று கூறியிருந்தார். இதைப்பற்றி வெளியில் சொன்னால் வேலையிலிருந்து நீக்கிவிடப்போவதாக கூறியிருந்தார்.” ”நான் மிகவும் பதற்றமானேன்.” உலகின் மிகவும் வெற்றிகரமான தொழில்நுட்ப தயாரிப்பாகவிருக்கும் அப்பிள் ஐஃபோனின் முன் மாதிரி தொலைந்துவிட்டது என்பதை ஸ்டீவ் ஜாப்ஸிடம் எப்படி விளக்கிக்கூறுவது என்பதை டோனி ஃபெடெல் யோசித்து ...

Read More »

போராடி கிடைத்த புகழ் வாழ்க்கை

துபாயின் முதல் பெண் திரைப்பட தயாரிப்பாளர் என்ற பெருமைக்குரியவர் நைலா அல் காஜா. திரைப்பட துறையில் சாதிக்க வேண்டும் என்பதுதான் இவருடைய சிறுவயது கனவாக இருந்திருக்கிறது. அந்த கனவை நிஜமாக்க இவர் பெரும் போராட்டம் நடத்தியிருக்கிறார். துபாயில் வசித்து வரும் இவர், தன்னுடைய போராட்ட வாழ்க்கை கதையை பகிர்ந்து கொள்கிறார். ‘‘என் இளமை பருவம் மிகவும் மகிழ்ச்சியானது. அப்பா அடிக்கடி வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் சென்று விடுவார். அவருக்கு திரைப்படங்கள் பிடிக்கும். அதனால் அவரிடம் நிறைய திரைப்படங்களின் தொகுப்பு இருந்தது. அவைகளுள் இந்திய திரைப்பட ...

Read More »

சம்பந்தனுடன் அமெரிக்க தூதுவர் கலந்துரையாடல்

அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றுள்ளார். அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், உதவித் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் மற்றும் தூதரக அதிகாரிகளும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பில், சிறிலங்காவின் அனைத்தும் மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான நல்லிணக்கம் மற்றும் அமைதி தொடர்பான தனது பார்வையை, இரா.சம்பந்தன் பகிர்ந்து கொண்டார் என்று, அமெரிக்கத் தூதுவர் அதுல் ...

Read More »

அவுஸ்ரேலியாவுக்குப் பயணம் – இந்தோனேசிய அதிபர் விருப்பம்

இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ இவ்வாண்டுத் தொடக்கத்தில் அவுஸ்ரேலியாவுக்கு வருகையளிக்கும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக Sydney Morning Herald நாளேடு தெரிவித்துள்ளது. இருநாட்டுக்கிடையே நிலவிய ராணுவப் பயிற்சிப் பொருட்கள் தொடர்பான சர்ச்சை இருதரப்பு உறவை பெரிதாய் பாதிக்கவில்லை என்பதை  விடோடோவின் பயணம் புலப்படுத்துவதாக அது கூறியது. இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்துக்கொள்ளும் வகையில் ஏற்புடைய குறிப்பிட்ட ஒரு திகதி ஆராயப்பட்டு வருவதாக இந்தோனேசிய வெளியுறவு அமைச்சு கூறியது.

Read More »