இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ இவ்வாண்டுத் தொடக்கத்தில் அவுஸ்ரேலியாவுக்கு வருகையளிக்கும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக Sydney Morning Herald நாளேடு தெரிவித்துள்ளது.
இருநாட்டுக்கிடையே நிலவிய ராணுவப் பயிற்சிப் பொருட்கள் தொடர்பான சர்ச்சை இருதரப்பு உறவை பெரிதாய் பாதிக்கவில்லை என்பதை விடோடோவின் பயணம் புலப்படுத்துவதாக அது கூறியது.
இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்துக்கொள்ளும் வகையில் ஏற்புடைய குறிப்பிட்ட ஒரு திகதி ஆராயப்பட்டு வருவதாக இந்தோனேசிய வெளியுறவு அமைச்சு கூறியது.
Eelamurasu Australia Online News Portal