மலேசியாவின் 1MDB நிதி விவகாரத்தில் தொடர்புடைய ஆஸ்திரேலிய நிறுவனங்கள் குறித்து அனைத்துலகச் சட்ட அமைப்புகளுடன் இணைந்து விசாரணை நடத்துவதாக அவுஸ்ரேலிய மத்தியப் காவல்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.
மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் உருவாக்கிய 1MDB நிதியின் தொடர்பில் குறைந்தது 6 வெளிநாடுகளில் விசாரணை நடைபெறுகிறது.
சுவிட்சர்லந்து, சிங்கப்பூர், அமெரிக்கா போன்றவை அவற்றில் அடங்கும்.
அதன் தொடர்பில் மூன்றரை பில்லியன் டாலருக்கும் மேலான தொகை முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க நீதித் துறை வழக்குப் பதிவுசெய்துள்ளது.
அதில் ஒரு பில்லியன் டாலருக்கும் மேல் நியூயார்க், பெவர்லி ஹில்ஸ், லண்டன் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள சொகுசு வீடுகள், விலைமதிப்புமிக்க ஓவியங்கள், தனியார் விமானங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்தச் சொத்துகளை முடக்குவதற்கு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.