குமரன்

ஜல்லிக்கட்டை நடத்த பார்த்திபன் கூறும் புதிய யோசனை!

ஜல்லிக்கட்டை தமிழகத்தில் நடத்துவதற்கு நடிகர் பார்த்திபன் புதிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கவேண்டும் என்று தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், நடிகர் பார்த்திபன் ஜல்லிக்கட்டை தமிழகத்தில் நடத்துவதற்கு புதிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் கூறும் யோசனையாவது, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ் ஊராட்சிகள் தோறும் பொது கிராம சபையில் சிறப்பு ...

Read More »

கரோலினா, ஜோகன்னா 3-வது சுற்றுக்கு தகுதி!

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கரோலினா, ஜோகன்னா ஆகியோர் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம். கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் 9-ம் நிலை வீராங்கனையான ஜோகன்னா கோன்டா 2-வது சுற்றில் நமோமி ஒசாவை (ஜப்பான்) எதிர்கொண்டார். இதில் ஜோகன்னா 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 17-வது ...

Read More »

5 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் – கொலையாளி பிடிபட்டார்!

கடந்த 2009ம் ஆண்டு சிட்னி North Epping-இல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆஸ்திரேலியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இவ்வழக்கில் கொலையாளி எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டார் என்ற தகவல்கள் தற்போது பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளன. ஜுலை 09 2009 அன்று தமது இல்லத்தில் தூங்கிக்கொண்டிருந்த Min Lin  உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். அடுத்த நாள் காலை அந்த வீட்டுக்குச் சென்ற Min Lin -இன் சகோதரி Kathy Lin இக்கொலைகள் பற்றி பொலிஸாருக்கு அறிவித்திருந்தார். ...

Read More »

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த உயர் ரக ஸ்மார்ட்போன்

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கண்டறிந்தவர்களில் ஒருவரான ஆன்டி ரூபின், செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் புதிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறார். உலகின் பிரபல ஸ்மார்ட்போன் இயங்குதளமாக இருக்கும் ஆண்ட்ராய்டு-ன் இணை நிறுவனரான ஆன்டி ரூபின் செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் உயர் ரக ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவல்களில் ஆன்டி ரூபின் தனது புதிய நிறுவனத்தை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. எசென்ஷியல்ஸ் என்ற பெயரில் ஆன்டி ரூபின் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சாதனங்களை ...

Read More »

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ்: நடால் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றில் ரஃபேல் நடால், ப்ளோரியன் மேயரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டியான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது. நேற்று முதல் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்துவருகிறது. முதல் சுற்று ஆட்டங்களில் முன்னணி வீரர்களான பெடரர், வாவ்ரிங்கா ஆகியோர் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நிலையில் மற்றொரு நட்சத்திர வீரரான ஸ்பெயினைச் சேர்ந்த ரஃபேல் நடால் இன்று ஜெர்மனியைச் சேர்ந்த ப்ளோரியன் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் சீக்கிய மாணவனுக்கு அநீதி!

அவுஸ்ரேலியாவில் டர்பன் அணிந்ததால் சீக்கிய மாணவனை பள்ளியில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த சீக்கியர்கள் இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர்.  தங்களது டர்பன் அணியும் கலாச்சாரத்தை கடைபிடிப்பதில் சீக்கியர்கள் மற்ற நாடுகளில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், அவுஸ்ரேலியாவில் டர்பன் அணிந்ததால் சீக்கிய மாணவனை பள்ளியில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. சகர்தீப் சிங் அரோரா என்ற பெண்மணி தன்னுடைய மகனை அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மெல்டான் ...

Read More »

துயிலெழுப்பும் ‘பார்கோடு’

செயலிகள் உலகில் துயிலெழுப்புவதற்கான செயலிகள்தான் அதிகம் இருக்கின்றன. ஆனாலும் இந்தப் பிரிவில் புதிய செயலிகள் அறிமுகம் ஆகிக்கொண்டேதான் இருக்கின்றன. எனினும் ஒவ்வொரு செயலியும் சின்னதாகவேனும் ஒரு புதுமை செய்து நம்மைக் கவர்ந்திழுக்கின்றன. அந்த வகையில் ‘பார்கோடு அலாரம்’ செயலி, காலையில் கண் விழிப்பதற்காக அலாரம் ஒலிக்கும் போது, ஏதேனும் பொருட்களின் பார்கோடை ஸ்கேன் செய்ய வைக்கிறது. இப்படிச் செய்வதன் மூலம் மட்டுமே அலாரமை நிறுத்த முடியும். காபி கோப்பை அல்லது பல்பசை போன்ற பொருட்களைத் தேடி ஸ்கேன் செய்வதன் மூலம் தூக்கம் கலைந்து போகும் ...

Read More »

கோத்தபாயவுக்கு அவுஸ்ரேலியாவில் நெருக்கடி!

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் என அவுஸ்ரேலியாவில் உள்ள லசந்த விக்ரமதுங்கவின் மகள் வாக்குமூலமளித்துள்ளார். கொலை இடம்பெற சில தினங்களுக்கு முன்னர் தனது தந்தை தன்னிடம் தெரிவித்த விடயங்களை வெளிப்படுத்தியே அவுஸ்திரேலியாவில் வைத்து அவர் இவ்வாறு தமது விசாரணையாளர்களிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா கல்கிஸ்ஸ நீதிவான் நீதிமன்றுக்கு நேற்று அறிவித்தார். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க ...

Read More »

மணிரத்னம் படத்தில் நடிக்க மாட்டேம்ப்பா – பார்த்திபன் மகள்

தனது மகள் கீர்த்தனா மணிரத்னத்தின் இரண்டு படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு வந்தும் ஏற்க மறுத்ததாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இயக்குனரும், நடிகருமான பார்த்திபனின் மகள் கீர்த்தனா இயக்குனர் மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்துவிட்டார் கீர்த்தனா. மணிரத்னத்தின் எந்தெந்த படங்களை கீர்த்தனா நிராகரித்தார் என்பதை பார்த்திபன் தெரிவிக்கவில்லை. மணியின் படத்தை கீர்த்தனா நிராகரித்ததற்கு முக்கிய காரணம் உள்ளது. கீர்த்தனாவுக்கு மணியின் படத்தில் நடிக்க விருப்பம் இல்லையாம். மணிரத்னமாக ஆக வேண்டும் என்பதே ...

Read More »

விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு

விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளரான சி.வி.குமார் திடீர் முடிவு எடுத்துள்ளார். ‘அட்டக்கத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘இறுதிச்சுற்று’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் என்ற தனது நிறுவனம் மூலம் பல வெற்றிப் படங்களை கொடுத்த பெருமை இவருக்கு உண்டு. அதேநேரத்தில் பல வெற்றி இயக்குனர்களையும் அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இந்நிலையில், தற்போது சி.வி.குமார் இயக்குனராகவும் மாறியுள்ளார். ‘மாயவன்’ என்ற படத்தை இயக்கி வரும் சி.வி.குமார் தமிழகத்தில் விவசாயிகள் படும் கடும் துன்பங்களை கண்டு ஒரு புதிய முடிவை ...

Read More »