குமரன்

தாலாட்டு பாடி தூங்க வைக்கும் ரோபோ தலையணை

வேலைப்பளு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் இன்றைய அவசரகால வாழ்வில் தூக்கமின்மையால் பலர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்காக தூக்க மாத்திரைகளை சிலர் உட்கொள்வது உண்டு. இதற்கு தீர்வு காணும் விதமாக ரோபோ தலையணை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. வேர்க்கடலை வடிவத்தில் வளைவான இந்த ரோபோ, நீங்கள் மூச்சுவிடுவதை சீராகக் கண்காணிக்கிறது. அதன்மூலம் உங்கள் தூக்கத்தையும் சீராக்க இது உதவுகிறது. சோம்நாக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோவை தூங்கும் போது அருகில் வைத்து பயன்படுத்துவதால் சுவாசத்தைக் கட்டுப்படுத்தி அமைதியான மற்றும் ஆழமான தூக்கப் பெறலாம் என்கிறது ஆய்வு. ...

Read More »

யுத்த குற்ற விசாரணைகள் தொடர்பில் அவுஸ்ரேலியாவின் கோரிக்கை

யுத்த குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகள் மற்றும் வழக்கு தொடுனர்கள் சேவைக்கு அமர்த்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொறுப்புக்கூறலை உரிய முறையில் முன்னெடுக்க முடியும் என அவுஸ்ரேலிய மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் இயக்குனர் எலைனி பியர்சன்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான விசாரணைகள் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகள் குறித்தும் அவர் பிரஸ்தாபித்துள்ளார்.

Read More »

அவுஸ்ரேலியா சிறப்பாக விளையாடினாலும் தொடரை இழப்பது உறுதி

அவுஸ்ரேலிய அணி இந்தியாவுடன் 4 டெஸ்டுகளில் சிறப்பாக விளையாடினாலும் தொடரை இழப்பது உறுதி என்று இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் கூறியுள்ளார். இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் அளித்த ஒரு பேட்டியில், ‘ஆஸ்திரேலிய அணி இந்தியாவுடன் 4 டெஸ்டுகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் அவுஸ்ரேலியா  சிறப்பாக விளையாடும் பட்சத்தில், இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றும். அந்த அணி நன்றாக ஆடினால் தான் இந்த நிலைமை. இல்லாவிட்டால் இந்திய அணி 4-0 ...

Read More »

மீண்டும் களத்தில் இறங்கும் நோக்கியா 3310

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் களமிறங்க இருப்பதாக கூறப்படும் நோக்கியா 3310 ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது. நோக்கியா ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியிடப்பட இருக்கும் நிலையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் பல்வேறு கான்செப்ட் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அவ்வப்போது இணையத்தில் கிடைக்கும் தகவல்களை வைத்து நோக்கியா ஸ்மார்ட்போன்கள் இப்படித் தான் இருக்கும் என்ற வகையில் ஸ்மார்ட்போன்கள் லீக் ஆகின. அப்படியாக சில தினங்களுக்கு முன் நோக்கியா 3310 பீச்சர்போன் மீண்டும் வெளியிடப்படலாம் என்ற தகவல் ...

Read More »

3000 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் ரூ. 2000 கோடி இழப்பீடு வழங்க கோரிக்கை

அவுஸ்ரேலியாவில் கிறிஸ்துவ அமைப்புகள் மற்றும் தேவாலயங்களில் பாதிரியார்களால் சுமார் 3000 குழந்தைகள் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1980 முதல் 2015ம் ஆண்டு வரை அவுஸ்ரேலியா கிறிஸ்தவ அமைப்புக்கள் மற்றும் தேவாலயங்களில் பணிபுரிந்த பாதிரியார்கள், சுமார் 3000 குழந்தைகளிடம் பாலியல் ரீதியான தாக்குதல் நடத்தியதாக பொதுவிசாரணை அமைப்ப கண்டறிந்ததுள்ளது. இந்த விசாரணையின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக சுமார் 2000 கோடி ரூபாய் இழப்பீடாகப் பெற்றுத்தரப்பட்டுள்ளதாக பொதுவிசாரணை அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேய அதிக ...

Read More »

வடசென்னை பெண்ணாக நடிக்கும் தமன்னா

விக்ரம் படத்தில் நடிக்கும் தமன்னா, அப்படத்தில் வடசென்னை பெண்ணாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விக்ரம் – தமன்னா நடிக்கும் புதிய படம் வடசென்னை கதை களத்தில் உருவாகி வருகிறது. இதில் வடசென்னை குப்பத்து பெண்ணாக தமன்னா நடிக்கிறார். இந்த படத்தின் கதையை கேட்டு அதில் ஒன்றி விட்டார். இதன் கிளைமாக்சை கேட்டு அவர் கண்கலங்கி விட்டார் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். வழக்கமாக கவர்ச்சி நாயகியாக வரும் தமன்னா, இந்த படத்தில் எந்தவித ஆடம்பரமும் இல்லாத அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுபற்றி கூறிய அவர், “பாகுபலி ...

Read More »

அவுஸ்ரேலியா சிறப்பாக விளையாடினால் 0-3 என தோற்கும்: ஹர்பஜன் சொல்கிறார்

இந்தியாவிற்கு எதிரான அவுஸ்ரேலியா சிறப்பாக விளையாடினால் 0-3 என தோல்வியடையும். இல்லையெனில் 0-4 என தோல்வியடையும். இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 23-ந்திகதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் அவுஸ்ரேலியா அணி எப்படி விளையாடும் என்பதுதான் கிரிக்கெட் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இந்தியா அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்த ஹர்பஜன் சிங் இதுகுறித்து கூறுகையில் ‘‘அவுஸ்ரேலியா சிறப்பாக விளையாடினால், இந்தியா தொடரை 3-0 என வெல்லும். அவுஸ்ரேலியா சிறப்பாக விளையாடினால் மட்டுமே. இல்லையெனில் ...

Read More »

பரபரப்பான ஆட்டத்தில் கடைசி பந்தில் அவுஸ்ரேலியா வீழ்த்தியது இலங்கை

முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் கடைசி பந்தில் அவுஸ்ரேலியாவை வீழ்த்தி இலங்கை அணி பெற்றுள்ளது. அவுஸ்ரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று மெல்போர்னில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் செய்தது. அதன்படி அவுஸ்ரேலியா முதலில் பேட்டிங் செய்தது. கப்டன ஆரோன் பிஞ்ச் 43 ரன்னும், கிளிங்கர் 38 ரன்னும், ட்ரேவிஸ் ஹெட் 31 ரன்னும் சேர்க்க, அந்த அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் ...

Read More »

ஸ்மித்-மார்ஷ் சதத்தால் அவுஸ்ரேலியா முதல் நாளில் 327 ரன்கள் குவிப்பு

இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் அவுஸ்ரேலியா அணி ஸ்மித் சதத்தால் முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்துள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியா அணி இந்தியா வந்துள்ளது. முதல் டெஸ்ட் வருகிற 23-ந்திகதி புனேயில் நடக்கிறது. இதற்கு முன்பாக அவுஸ்ரேலியா இந்தியா ‘ஏ’ அணிக்கெதிராக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த பயிற்சி ஆட்டம் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா ...

Read More »

தமிழகத்தில் யார் ஆட்சியமைத்தாலும் அவர்கள் ஈழத் தமிழர்களின் நலனை மீறி செயற்படுவார்களாயின் அவர்களை தமிழக மக்கள் தூக்கி எறிவார்கள்!

தமிழகத்தில் யார் ஆட்சியமைத்தாலும் அவர்கள் ஈழத் தமிழர்களின் நலனை மீறி செயற்படுவார்களாயின் அவர்களை தமிழக மக்கள் தூக்கி எறிவார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, தமிழகத்தின் அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். ஈழத் தமிழர்கள் மீது தமிழக மக்கள் ஆழமான கரிசனை கொண்டவர்கள் எனத் தெரிவித்த கஜேந்திரகுமார், இதனை மீறி செயற்பட்ட ஆட்சியாளர்கள் கடந்த காலங்களில் தூக்கியெறியப்பட்டனர் என சுட்டிக்காட்டினார். ...

Read More »