குமரன்

நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசைப்படும் தீபிகா படுகோனே

இந்தி பட உலகின் முன்னணி ஹீரோயின் தீபிகா படுகோனே, நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்தி பட உலகின் முன்னணி ஹீரோயின் தீபிகா படு கோனேவிடம் அவர் மனம் திறந்து அளித்த பேட்டி…. “நான் சிவப்பாக மாற சிகிச்சை செய்து கொண்டதாக யாரோ சொல்கிறார்கள். எனக்கே தெரியாமல் அது என்ன சிகிச்சை என்பது அதிசயமாக இருக்கிறது. நான் மாடலிங் செய்து வாங்கிய முதல் சம்பளம் ரூ3 ஆயிரத்து 500. பெங்களூரில் நடந்த ‘பே‌ஷன் ஷோ’ ஒன்றில் ஒய்யாரமாக நடந்து வந்தேன். அதற்கு வெகுமதியாக ...

Read More »

புகலிடம் கோரும் தமிழ் மக்களை மனிதாபிமானத்துடன் நடத்துங்கள்! – அவுஸ்ரேலிய அமைச்சரிடம் கோரிக்கை

அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரும் தமிழ் மக்களை மனிதாபிமானத்துடன் அணுகுமாறு அவுஸ்திரேலியாவின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசுபிக் நாடுகளிற்கான அமைச்சரிடம் வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசுபிக் நாடுகளுக்கான அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் இன்று யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டு, வடமாகாண முதலமைச்சர் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உட்பட முதலமைச்சரின் செயலாளர்கள் குழுவினருடன் முதலமைச்சரின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர். இந்த கலந்துரையாடலின் போது, வடமாகாணத்தின் அபிவிருத்தி ...

Read More »

செவ்வாய் கிரகத்தில் பறக்கக்கூடிய ட்ரோன் ரக விமானம்

தற்போது கியூரியோசிட்டி ரோவர் விண்கலத்தினைப் பயன்படுத்தி செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சிகளை நாசா நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. எனினும் இவ் விண்கலம் 10 மைல் தூரத்தினைக் கடப்பதற்கு அரை ஆண்டுகள் வரை தேவைப்படுகின்றது. இதன் காரணமாக ஆராய்ச்சிகள் தாமதப்பட்டுக்கொன்று செல்கின்றன. எனிவே இத் தாமதத்தைத் தடுப்பதற்காக ட்ரோன் ரக விமானங்களைப் பயன்படுத்தி ஆராய்ச்சிகளை தொடர்வதற்கு நாசா நிறுவனம் தீர்மானித்துள்ளது.   இதன்படி செவ்வாய் கிரகத்தில் பறக்கக்கூடிய ட்ரோன் ரக விமானங்களை அந் நிறுவனம் தயார் செய்து வருகின்றது. முற்றுமுழுதாக மின்சாரத்தில் செயற்படத்தக்க இந்த விமானங்கள் செவ்வாய் ...

Read More »

தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் 2017 – மெல்பேர்ண்

பாரததேசத்திடம் இரண்டு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகரில் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில்  19-03-1988 முதல் 19-04-1988 வரையான முப்பதுநாட்கள் உண்ணாநோன்பிருந்து ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 29-வதுஆண்டு நினைவுநாளும் தாயக விடுதலைப் போராட்டத்தில் பின்புலமாக உழைத்து சாவைத் தழுவிக்கொண்ட நாட்டுப்பற்றாளர்களையும் நினைவு கூருகின்ற நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் இவ்வாண்டும் விக்ரோறியா மாநிலத்தில் மெல்பேர்ணில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. குடும்பவாழ்வியலில் ஈடுபட்டிருந்தபோதும் இடர்மிகுந்த நெடிய தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் உறுதுணையாக உழைத்து உயிர்நீத்த நாட்டுப்பற்றாளர்களை நினைவுகூருவது ஒவ்வொரு ஈழத்தமிழனதும் தலையாய கடமையாகும். அவுஸ்திரேலியாவில் தமிழ்த் ...

Read More »

மணப்பெண் கிடைக்காததால் ரோபோட்டை திருமணம் செய்த சீன வாலிபர்

சீனாவில் மணப்பெண் கிடைக்காததால் வாலிபர் ஒருவர் ரோபோட் எந்திரத்தை திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. சீனாவில் தம்பதியினர் ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ள வேண்டும் என்று சட்டம் இருந்தது. எனவே, பெரும்பாலான தம்பதியினர் ஆண் குழந்தைகளை மட்டுமே தேர்வு செய்து பெற்றுக்கொண்டனர். இதனால் பெண் குழந்தைகள் பிறப்பு மிக குறைவாக இருந்தது. அவர்கள் வளர்ந்து ஆளாகி உள்ள நிலையில் தற்போது ஆண்களுக்கு மணப்பெண்கள் கிடைக்கவில்லை. இதனால் பல ஆண்கள் அதிக வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். இப்படி ...

Read More »

டிரம்ப் மனைவி புகைப்படம் : அமெரிக்காவில் சர்ச்சை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி, மெலனியா டிரம்பின் அதிகாரப்பூர்வ புகைப்படம் தொடர்பாக, அந்நாட்டில் சர்ச்சை எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 70, மனைவி மெலனியா டிரம்பிற்கு, 46, அமெரிக்க அரசில், ‘முதல் குடிமகள்’ என்ற அரசு முறை அங்கீகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, மெலனியா டிரம்பின் அதிகாரப்பூர்வ புகைப்படத்தை, அரசு நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவதற்காக வெளியிட்டது. இதில், முன்னாள் மாடல் அழகியான மெலனியாவின் புகைப்படம், பாரம்பரிய முறையில் அல்லாமல், சற்று கவர்ச்சியாக இடம் பெற்றுள்ளது. இது குறித்து, ...

Read More »

இணைய உலகில் புதிதாக ஒரு தேடியந்திரம்

இணைய உலகில் புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகமாகியிருக்கிறது. புதிய தேடியந்திரம் என்றவுடன், கூகுளுக்குப் போட்டியாக இன்னொரு தேடியந்திரமா என்றெல்லாம் நினைக்க‌ வேண்டாம். இது முற்றிலும் வேறுவிதமான தேடியந்திரம். இணைய உலகம் இப்போது எதிர்கொண்டு வரும் முக்கியப் பிரச்சினையை அலசி ஆராய உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள தேடியந்திரம் இது. ஆம், ‘ஹோக்ஸி’ எனும் இந்தத் தேடியந்திரம், இணையத்தில் பொய்ச் செய்திகள் பரவும் விதத்தை அலசி ஆராய்ந்து தெளிவு பெற உதவுகிறது. அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்தில் உள்ள சமூக ஊடகத்திற்கான ஆய்வகம் சார்பில் இந்தத் தேடியந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. சுருக்கமாக‌ச் ...

Read More »

பாலிவுட் செல்கிறார் விஜய் சேதுபதி

பாலிவுட் பிரபலம் பாக்யஸ்ரீயின் மகன் அபிமன்யூ தசானி கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். `மைனே பியார் கியா’ என்ற படத்தில் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான பாக்யஸ்ரீ, தனது முதல் படத்தின் மூலமே 1979-ல் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதன்பின்னர் சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை கவனித்த அவர் பின்னர் மீண்டும் திரையில் தோன்றினார். அதன் பின்னர் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டினார். இந்நிலையில், பாக்யஸ்ரீயின் மகன் அபிமன்யூ தசானி, காஷ்யப் புரொடக்‌ஷன் கம்பெனி நிறுவனம் சார்பில் ...

Read More »

காப்பாற்றுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டிருந்தால் வீட்டோடு குடும்பமும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டிருக்கும்!

அவுஸ்ரேலியாவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு, மீட்புப் படையினரால் காப்பாற்றப்பட்ட குடும்பம் ஒன்றின் வீடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக அண்மைய தகவல்கள் குறிப்பிடுகின்றன. அவர்களை காப்பாற்றுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டிருந்தால் வீட்டோடு குறித்த குடும்பமும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டிருக்குமென தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பகுதிகளில் டெபீ சூறாவளி தாக்கியதைத் தொடர்ந்து குறித்த பகுதிகளில் அடைமழை பெய்து வந்ததாகவும் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் அனர்த்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த குயின்ஸ்லாந்து அவசர சேவையின் பேச்சாளர், “இந்த வெள்ளப்பெருக்கில் இருந்து ...

Read More »

அவுஸ்ரேலிய அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் இன்று கொழும்பு பயணம்

அவுஸ்ரேலியாவின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் கொன்சீற்றா பியராவன்ரி வெல்ஸ் இன்று சிறிலங்காவுக்குப் பயணம் செய்யவுள்ளார். இவர் அவுஸ்திரேலியாவின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சராகப் பொறுப்பேற்றபின்னர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவிருக்கும் முதலாவது பயணம் இதுவாகும். இவர் இன்றிலிருந்து எதிர்வரும் 7ஆம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருக்கவுள்ளார். இதன்போது வடக்கு மாகாணத்துக்குப் பயணம் செய்து அங்கு அவுஸ்திரேலியாவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களையும் மேற்பார்வை செய்யவுள்ளார். அத்துடன், இவர் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார் என சிறிலங்காவிலிருக்கும் அவுஸ்திரேலியத் தூதரகம் அறிவித்துள்ளது.

Read More »