குமரன்

அவுஸ்திரேலியா சென்ற மைத்திரி சிறீலங்கா திரும்பினார்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்ரேலியாவுக்கான மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையில் நேற்று இரவு நாடு திரும்பியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 24ஆம் திகதி அவுஸ்ரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, அந்த நாட்டுப் பிரதமர் மெல்கம் டேன்புல் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் முக்கிய கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார். இதன்போது, அந்த நாட்டு பிரதமருடன் முக்கிய சில உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டிருந்துடன், அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்களையும் மைத்திரி  சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »

அவுஸ்ரேலியாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேற விரும்பும் அகதிகள்!

அவுஸ்ரேலியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் இருப்பவர்கள் 1600 ற்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவில் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக் காலக்கட்டத்தின் இறுதி நேரத்தில் அவுஸ்திரேலியா- அமெரிக்கா இடையே கையெழுத்தான ஒரே முறை அகதிகளை குடியமர்த்துவதற்கான ஒப்பந்தத்தின் படி, அவுஸ்திரேலியாவின் மனுஸ் மற்றும் நவுரு தடுப்பு முகாம்களிலிருந்து 1,250 அகதிகள் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஆயத்த பணிகள் நடந்து வரும் நிலையில், இதற்கு 1600 ற்கும் மேற்பட்ட அகதிகள் ஆர்வம் காட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. மனுஸ் மற்றும் ...

Read More »

பிரியங்கா சோப்ராவின் ‘பேவாட்ச்’ படம் தமிழில்!

இந்தியாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் நடித்த முதல் ஹாலிவுட் படம் ‘பேவாட்ச்’. இது தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தை தமிழில் ஹியு பாக்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிடுகிறது. பிரியங்கா சோப்ரா, விஜய் நடித்த `தமிழன்’ படத்தின் மூலம் முதன்முதலாக திரையுலகில் அறிமுகமானார். இந்தியில் பெரிய நடிகையாகி தற்போது ‘பேவாட்ச்’ ஆங்கில படத்தில் நடித்திருக்கிறார். இதில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர் வெய்ன் ஜான்சன், ஜாக் எப்ரான், அலெக்ஸான்டர் டட்டாரியோ உள்ளிட்ட ...

Read More »

நான்கு கமரா கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்!

சீனாவில் நடைபெற்ற விழாவில் ஜியோணி S10 எனும் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் இரட்டை, டூயல் கமரா அமைப்பினை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜியோணி நிறுவனத்தின் S10 எனும் புதிய ஸ்மார்ட்போனினை சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜியோணி ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் இரட்டை டூயல் கமரா அமைப்பினை வழங்கியுள்ளது. முன்னதாக இரட்டை டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்திருந்தது. புதிய ஜியோணி ஸ்மார்ட்போன் S10, S10B மற்றும் S10C என மூன்று மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ...

Read More »

வடக்கு- கிழக்கு காணிப் பிரச்சினையை தீர்க்க விசேட வேலைத்திட்டம்: கயந்த

வடக்கு- கிழக்கு காணிப் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட வேலைத்திட்டங்கள் வகுக்கப்படும் என காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னர் அமைச்சரின் நாடாளுமன்ற அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவிலாளர்கள் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவமைச்சர், காணி அமைச்சை பெற்றுக் கொண்டமை தொடர்பில் நான் பெருமை கொள்கிறேன். இந்த அமைச்சின் மூலம் நாடெங்கும் சென்று மக்களுக்கு சேவையாற்றக் கூடியதாக இருக்கும். வடக்கு- கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு ...

Read More »

அவுஸ்ரேலியாவை அதிர வைத்த இந்திய திருமணம்!

அவுஸ்ரேலியாவில் வாழும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஜோடிக்கு பிரம்மாண்டமான முறையில் திருமணம் அரங்கேறியுள்ளது. சிட்னியில் வசித்து வருபவர் Divya Dhingra. இவருக்கும் இந்தியாவில் நிதித்துறையில் வேலை பார்க்கும் Gurjab Sigh Kohli என்னும் நபருக்கும் நாடே திரும்பி பார்க்கும் வகையில் அவுஸ்ரேலியாவில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த Rosehill கார்டனுக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய Divya மற்றும் Gurjab தம்பதிகளுக்கு வாண வேடிக்கைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதே போல எல்லோரும் கேக்-ஐ சிறிய கத்தியால் தானே வெட்டுவார்கள். ஆனால் இந்த ...

Read More »

14-வயது மகளை 20-வயது மூத்தவருக்கு திருமணம் செய்து வைத்த தாய்!

அவுஸ்திரேலியாவில் பெற்ற தாயே தனது மகளை விட 20-வயது மூத்த நபருக்கு திருமணம் செய்து வைப்பதற்கு சம்மதம் தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ஆம் திகதி திருமணம் ஒன்று நடந்துள்ளது. அதில் திருமணப் பெண்ணாக 14-வயது சிறுமியும், அச்சிறுமியை திருமணம் செய்துகொள்பவர் சிறுமியை விட 20-வயது மூத்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இத்திருமணத்தை அந்த மசூதியில் உள்ள Imam Ibrahim Omerdic(62) என்பவர் நடத்தி வைத்துள்ளார். இந்த திருமணம் அச்சிறுமியின் தாயின் சம்மதத்துடனே ...

Read More »

அப்பிள் ஐ.ஒ.எஸ். 10.3.2 வெளியானது!

அப்பிள் நிறுவனத்தின் ஐ.ஒ.எஸ். இயங்குதளத்தின் 10.3.2 பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதிய அப்டேட் செய்தவர்கள் மற்ற ஐபோன் வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளனர். அப்பிள் நிறுவனம் ஐ.ஒ.எஸ். இயங்குதளத்திற்கு 10.3.2 அப்டேட் வழங்கியுள்ளது. இந்த அப்டேட் ஐபோன் 5, நான்காம் தலைமுறை ஐபேட் மற்றும், ஆறாம் தலைமுறை ஐபாட்களுக்கு இந்த அப்டேட் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் பிழைகளை மாற்றம் செய்யும். அப்பிள் செக்யூரிட்டி பக்கத்தின் படி ஐ.ஓ.எஸ். 10.3.2 அப்டேட் சஃபாரி, AVEவீடியோ என்கோடர், கோர்ஆடியோ, ஐபுக்ஸ், ஐஓசர்ஃபேஸ், கெர்னல், ...

Read More »

`காலா’ படத்தில் 4 தேசிய விருது பிரபலங்கள்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் `காலா’ படத்தில் தேசிய விருது பெற்ற 4 பிரபலங்கள் இணைகின்றனர். `கபாலி’ பட வெற்றியை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளியானது. `காலா’ கரிகாலன் என்ற பெயரில் போஸ்டர்கள் வெளியாகி இருந்தது. படத்தில் ரஜினியின் பெயர் கரிகாலன். படத்தில் அவரை `காலா’ என்று அழைப்பார்கள் என்று ரஞ்சித் தெரிவித்துள்ளார். மும்பை தாராவியில் வாழும் ஒரு தமிழனின் வாழ்க்கையை படமாக எடுக்க உள்ளதாக இயக்குநர் ரஞ்சித் தெரிவித்திருக்கிறார். ...

Read More »

‘காலச் சுவடு’ ஆசிரியர் கண்ணனின் இலக்கியச் சந்திப்பு!

அவுஸ்ரேலியாவில் ‘காலச் சுவடு’ ஆசிரியர் கண்ணனுடன் இலக்கியச் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது. காலம்: 27 மே 2017  மாலை 5:30 இடம்: யாழ் பங்ஷன் சென்ரர், பெண்டில் கில், ரயில் நிலையத்துக்கு முன்பாக. தொடர்பு: 046 9849 125 (ஆசி கந்தராஜா), 0424 669 165 (ரஞ்சகுமார்)

Read More »