இந்தியாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் நடித்த முதல் ஹாலிவுட் படம் ‘பேவாட்ச்’. இது தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் வெளியாகிறது.
இந்த படத்தை தமிழில் ஹியு பாக்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிடுகிறது.
பிரியங்கா சோப்ரா, விஜய் நடித்த `தமிழன்’ படத்தின் மூலம் முதன்முதலாக திரையுலகில் அறிமுகமானார். இந்தியில் பெரிய நடிகையாகி தற்போது ‘பேவாட்ச்’ ஆங்கில படத்தில் நடித்திருக்கிறார். இதில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர் வெய்ன் ஜான்சன், ஜாக் எப்ரான், அலெக்ஸான்டர் டட்டாரியோ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சேத் கோர்டன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா முக்கிய வேடத்தில் அறிமுகமாகியிருக்கிறார். இந்த படத்தை உலகமெங்கும் பாரமவுண்ட் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. இந்த படம் ஹாலிவுட்டில் கடந்த 26-ம் தேதி வெளியானது. இந்தியா முழுவதும் வருகிற ஜூன் 2 ஆம் தேதி வெளியாகிறது.
“பேவாட்ச்’ படத்தில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகளும், காமெடியும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும். கமர்ஷியல் பொழுது போக்கு படமான இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா, விக்டோரியா லீட்ஸ் என்ற போதை மருந்து கடத்தும் கும்பலைச் சேர்ந்த பெண்ணாக அற்புதமாக நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் கலக்குகிறார். இதனால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
Eelamurasu Australia Online News Portal