நான்கு கமரா கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்!

சீனாவில் நடைபெற்ற விழாவில் ஜியோணி S10 எனும் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் இரட்டை, டூயல் கமரா அமைப்பினை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜியோணி நிறுவனத்தின் S10 எனும் புதிய ஸ்மார்ட்போனினை சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜியோணி ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் இரட்டை டூயல் கமரா அமைப்பினை வழங்கியுள்ளது. முன்னதாக இரட்டை டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்திருந்தது.
புதிய ஜியோணி ஸ்மார்ட்போன் S10, S10B மற்றும் S10C என மூன்று மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஜியோணி S10B மற்றும் S10C ஜூன் 9-ந்தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக S10 விற்பனை ஏற்கனவே துவங்கிவிட்டது. ஜியோணி S10 ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பு வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜியோணி S10 சிறப்பம்சங்கள்:
 
* 5.5 இன்ச் ஃபுல் எச்டி இன்-செல் டிஸ்ப்ளே
* மீடியாடெக் ஹீலியோ P25 பிராசஸர்
* 16 எம்பி, 8 எம்பி பிரைமரி கேமரா, 6P லென்ஸ் f/1.8 அப்ரேச்சர்
* 20 எம்பி, 8 எம்பி செல்ஃபி கேமரா
* 6 ஜிபி ரேம்
* 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 3450 எம்ஏஎச் பேட்டரி
கடந்த ஆண்டு ஜியோணி வெளியிட்ட S9 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலான S10 ஸ்மார்ட்போன் எந்த ஆண்ட்ராய்டு பதிப்பு கொண்டிருக்கும் என்பது குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில் இதன் விலை CNY 2,599 அதாவது இந்நிய மதிப்பில் ரூ.24,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய ஸ்மார்ட்போனின் மெமரியை நீட்டிக்கும் வசதி குறித்தும் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
ஜியோணி S10B சிறப்பம்சங்கள்:
* 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே
* மீடியாடெக் ஹூலியோ P10 பிராசஸர்
* 13 எம்பி, 5 எம்பி பிரைமரி கேமரா
* 16 எம்பி செல்ஃபி கேமரா
* 4 ஜிபி ரேம்
* 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 3700 எம்ஏஎச் பேட்டரி
ஜியோணி S10B ஸ்மார்ட்போன் CNY 2,199 அதாவது இந்திய மதிப்பில் ரூ.20,700 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜியோணி S10C சிறப்பம்சங்கள்:
* 5.2 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
* ஸ்னாப்டிராகன் 427 பிராசஸர்
* 16 எம்பி பிரைமரி கேமரா
* 13 எம்பி செல்ஃபி கேமரா
* 4 ஜிபி ரேம்
* 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 3100 எம்ஏஎச் பேட்டரி
ஜியோணி S10C ஸ்மார்ட்போன் சீனாவில் CNY 1,599 அதாவது இந்திய மதிப்பில் ரூ.15,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூன்று ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படவுள்ள கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் சார்ந்து எவ்வித தகவலையும் ஜியோணி வழங்கவில்லை.