ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்ரேலியாவுக்கான மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையில் நேற்று இரவு நாடு திரும்பியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 24ஆம் திகதி அவுஸ்ரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, அந்த நாட்டுப் பிரதமர் மெல்கம் டேன்புல் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் முக்கிய கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார்.
இதன்போது, அந்த நாட்டு பிரதமருடன் முக்கிய சில உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டிருந்துடன், அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்களையும் மைத்திரி சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal