வடக்கு- கிழக்கு காணிப் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட வேலைத்திட்டங்கள் வகுக்கப்படும் என காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னர் அமைச்சரின் நாடாளுமன்ற அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவிலாளர்கள் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவமைச்சர், காணி அமைச்சை பெற்றுக் கொண்டமை தொடர்பில் நான் பெருமை கொள்கிறேன். இந்த அமைச்சின் மூலம் நாடெங்கும் சென்று மக்களுக்கு சேவையாற்றக் கூடியதாக இருக்கும்.
வடக்கு- கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணிப் பிரச்சினை காணப்படுகின்றது. அவற்றை தீர்ப்பது தொடர்பில் நாம் அவதானம் செலுத்தி வருகின்றோம்.
அந்தவகையில் நான் பதவியை பொறுப்பேற்றவுடன், முதல் பணியாக வடக்கு- கிழக்கில் காணப்படும் காணிப் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட வேலைத்திட்டங்களை வகுக்கவுள்ளேன்.
Eelamurasu Australia Online News Portal