குமரன்

கற்றலில் உதவும் காணொளிகள்!

இணையத்தில் பொழுதுபோக்கு வீடியோக்கள் மட்டுமல்ல, பாடங்களைக் கற்றுக்கொள்ள உதவும் கல்வி வீடியோக்களும் அநேகம் இருப்பது தெரிந்த விஷயம்தான். இத்தகைய கல்வி சார்ந்த வீடியோக்களைத் தேடித் தரும் இணையதளங்களும் இருக்கின்றன. ‘கிளாஸ்ஹுக்’ தளமும், கல்வி சார்ந்த வீடியோக்களைத் தேடித் தருகிறது என்றாலும், முற்றிலும் புதுமையான முறையில் இதை நிறைவேற்றுகிறது. இந்தத் தளம், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவும் திரைப்பட கிளிப்களை அடையாளம் காட்டுகிறது. திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் கணிதம், அறிவியல், உலக நடப்புகள் சார்ந்த உரையாடல்கள் இடம்பெறுவது உண்டல்லவா? இத்தகைய உரையாடல் கொண்ட வீடியோக்களை ...

Read More »

கற்றலுக்குக் காலம் கிடையாது – ‘வனமகன்’ சாயிஷா

வனமகன்’ திரைப்படம் வெளியாகும் முன்பே, டிரெய்லர் மற்றும் பாடல் காட்சிகளைப் பார்த்துப் பல்வேறு முன்னணி இயக்குநர்கள் தங்களுடைய படத்தின் நாயகி கதாபாத்திரத்துக்கு சாயிஷா சைகலிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள். தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகவுள்ள சாயிஷா சைகலிடம் பேசியதிலிருந்து… பொதுவாக நடிகைகள் தெற்கே இருந்து இந்தித் திரையுலகில்தான் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், நீங்களோ தமிழ்ப் படங்களில் அதிகக் கவனம் செலுத்திவருகிறீர்களே? ‘வனமகன்’ படத்தில் விஜய் எனக்கு மிக அற்புதமான கதாபாத்திரத்தை வழங்கியுள்ளார். அந்தக் கதாபாத்திரம் மிகவும் கனமானது. இப்படி ஓர் அறிமுக வாய்ப்பு யாருக்கும் ...

Read More »

என்னுடைய அப்பா சிறந்த விமர்சர்!

என்னுடைய அப்பா சிறந்த விமர்சகர் என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்திருக்கிறார். நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஹிந்தி படம் ‘பெஹன் ஹோகி தேரி’. இந்த படத்தின் சிறப்பு காட்சியை தன்னுடைய தந்தைக்காகவும், தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்காகவும் சென்னையில் திரையிட்டார் ஸ்ருதிஹாசன். படம் முடிந்ததும் பேசிய ஸ்ருதிஹாசன்,‘ இந்த படத்தை என்னுடைய தந்தைக்காகவும், என்னுடைய பள்ளிக்காலத்திலிருந்து என்னுடன் தொடர்பில் இருக்கும் நண்பர்களுக்காகவும் சென்னையில் திரையிடப்பட்டது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. படத்தைப் பார்த்த பின்னர் படத்தைப் பற்றி என்னிடம் நிறைய பேசினார் அப்பா. அவர் ...

Read More »

‘சே’ என்னும் மந்திரச் சொல்! -ஜூன் 14 பிறந்த தினம்!

‘‘சாவைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. நான் இறந்துபோனால் எனது கைத்துப்பாக்கியை தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும், அதிலிருந்து தோட்டாக்கள் சீறிப்பாயும்’’ என்று முழங்கியவர் சேகுவேரா. . அப்போது ‘சே’வுக்கு 27 வயதுதான். கியூபா தனது சொந்த நாடு என்ற காரணத்தினால் ஃபிடல் காஸ்ட்ரோ போராட வேண்டிய அவசியம் இயல்பானது. ஆனால், ‘சே’வுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாத ஒரு தேசத்தில் அந்த நாட்டு மக்களின் விடுதலைக்காகத் தன் உயிரைப் பணயம்வைத்து ஆயுதம் எடுப்பது என்பது, உலக வரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந்திராத ...

Read More »

வடமாகாண முதலமைச்சராக சி.வி.கே.சிவஞானம்?

விசாரணைக்குழு அறிக்கையின்படி வடமாகாண அமைச்சர்கள் நான்குபேருக்கெதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தநிலையில் இருவரை பதவி விலகுமாறும், மற்றைய இருவரையும் கட்டாய விடுமுறையில் செல்லுமாறும் முதலமைச்சர் பணிப்புரை விடுத்திருந்தார். முதலமைச்சரின் இச்செயற்பாடானது, குற்றம் சாட்டப்பட்டவர்களின் நியாயத்தைக் கேக்காது தன்னிச்சையாக கட்டாய விடுப்புவழங்கியுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதலமைச்சரின் இந்நடவடிக்கை அரசியல் மட்டத்தில் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. முதலமைச்சரின் இந்நடவடிக்கையையடுத்து தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் வடமாகாண முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்காக ஆளுனரின் அனுமதி கோரி 20இற்கு மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்டு மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதனடிப்படையில் ...

Read More »

ஹூவாய் ஹானர் 9 வெளியானது!

ஹூவாயின் ஹானர் பிரான்டு புதிய ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹானர் 9 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள். ஹூவாய் ஹானர் 9 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனும் ஹூவாய் ஏற்கனவே வெளியிட்ட ஹூவாய் பி10 ஸ்மார்ட்போனும் ஒன்று தான். இந்த ஸ்மார்ட்போனில் ஹானர் பிரான்டிங் மற்றும் செய்கா லென்ஸ் வழங்கப்படவில்லை. ஹானர் பி10 ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஹூவாய் கிரின் 960 மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டிருந்தது. ஹானர் 9 ஸ்மார்ட்போன் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ...

Read More »

ரூ.5 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த நடிகை!

கவர்ச்சி காட்டச்சொன்னதால் ரூ.5 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த இளம் நடிகையின் துணிச்சலை பலர் பாராட்டியுள்ளனர். இந்தி படங்களில் நடிப்பவர் ஊர்வசி ராதேலா. 23 வயதே ஆன இவர் பல அழகி பட்டங்களை வென்றவர். ‘அப்ராவதா’ என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார். இவரை ‘ஹேட் ஸ்டோரி-4’ என்ற இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. இதில் நடிக்க ரூ.5 கோடி சம்பளம் கொடுக்கவும் தயாரிப்பாளர் தயாராக இருந்தார். ஆனால், ஊர்வசி ராதேலா அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன ...

Read More »

பதவியை காப்பாற்ற மைத்திரி காலில் வீழ்ந்தார் சத்தியலிங்கம்!

தனது அமைச்சுப்பதவியினை காப்பாற்றுமாறு இலங்கை ஜனாதிபதியின் கால்களினில் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் வீழ்ந்துள்ளார்.நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடமே வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் காலில் வீழ்ந்துள்ளார்.இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் சத்தியலிங்கத்தின் நண்பரான வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே செய்துவழங்கியுள்ளார். வடமாகாண அமைச்சர்களது ஊழல்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கையினை தொடர்ந்து முதலமைச்சர் அமைச்சரவையினை கலைப்பது பற்றி சிந்தித்துவருவதாக நம்பப்படுகின்றது.இந்நிலையினில் தனது அமைச்சு பதவியினை காப்பாற்றிக்கொள்ள இலங்கை ஜனாதிபதியின் காலில் சத்தியலிங்கம் வீழ்ந்துள்ளார்.தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஏதும் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் குடியுரிமை தொடர்பில் கூடுதல் அதிகாரம்!

குடியுரிமை தொடர்பிலான புதிய சட்ட முன்வடிவில் குடிவரவு அமைச்சருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் அதிகாரம் குடிவரவு அமைச்சர் Peter Dutton-க்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்படி Tribunal எனப்படும் தீர்ப்பாயத்தின் முடிவுடன் உடன்படவில்லையாயின், அந்த முடிவினை மாற்றியமைக்கும் அதிகாரம் குடிவரவு அமைச்சருக்கு உண்டு. குறித்த சட்டமுன்வடிவு நாடாளுமன்றில் அறிமுகப்படுத்தப்பட்டு செனற் அவையின் ஒப்புதலைப்பெறவேண்டிய பின்னணியில், இந்த அதிகாரம் அவசியமானது என குடிவரவு அமைச்சர் கூறியுள்ளார். Permanent residency எனப்படும் நிரந்தர வதிவிட உரிமை பெற்றபின்னர், ஒரு ஆண்டு நாட்டில் வாழ்ந்தால் அவர்கள் குடியுரிமை பெற தகுதி ...

Read More »

மலைப்பாம்பு பாதுகாப்பாக கடந்து செல்ல வீதியில் படுத்த அவுஸ்ரேலிய வாலிபர்!

அவுஸ்ரேலியாவில் மலைப்பாம்பு ஒன்று பத்திரமாக சாலையை கடக்க வேண்டும் என்பதற்காக நபர் ஒருவர் சாலையின் குறுக்கே படுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்ரேலியாவை சேர்ந்த மேத்யூ என்பவர் கடந்த புதன்கிழமை டம்பியர் போர்ட் எனும் பகுதியில் தன் நண்பருடன் சாலையில் பேசிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது சாலையின் நடுவே சுமார் 2.5 மீட்டர் நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று கிடந்துள்ளது. அது போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் அந்த மலைப்பாம்பை ஏற்றிவிடும், இதனால் பாம்பு உயிரிழக்க நேரிடும் என்று எண்ணிய அவர், ...

Read More »