குமரன்

அவுஸ்ரேலிய பெண் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலகிய பெண் காவல் துறை தலைமை அதிகாரி!

அமெரிக்காவின் மினேசோடா மாநிலத்தில் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த பெண் தவறுதலாக சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தார்மீக பொறுப்பேற்று அம்மாநில பெண் காவல் துறை தலைமை அதிகாரி பதவி விலகியுள்ளார். அமெரிக்காவின் மினேசோடா மாநிலத்தில் உள்ள மின்னேபொலிஸ் நகரில் கடந்த 15-ம் திகதி அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த 40 வயது யோகா ஆசிரியரான ஜஸ்டின் டாமண்ட், அந்நகர காவல் துறை தவறுதலாக சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்வபம் இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவில் அதிர்வை ஏற்படுத்தியது. ஜஸ்டின் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்குஅவுஸ்ரேலிய பிரதமர், மற்றும் ஜஸ்டினின் குடும்பத்தினர் கடும் ...

Read More »

`கோலி சோடா 2′ படக்குழுவில் இணைந்த தேசிய விருது நடிகர்

`கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் தேசிய விருது வென்ற நடிகர் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல வெற்றி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜய் மில்டன் தமிழில் `அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’, `கோலிசோடா’, `பத்து என்றதுக்குள்ள’ `கடுகு’ உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். அவரது இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `கோலிசோடா’. அந்த படத்தில் கிஷோர், ஸ்ரீ ராம், பாண்டி, முருகேஷ், சாந்தினி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரிலீசான சமயத்தில் நல்ல ...

Read More »

அவுஸ்ரேலியா : ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம்

ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக தபால் வாக்களிப்பு முறையை நடத்தலாம் என அவுஸ்ரேலியா நாட்டின் மூத்த அமைச்சர் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவில் ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. இதைதொடர்ந்து, அந்த திருமணங்களை அரசு அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பொதுமக்களின் இந்த கோரிக்கைக்கு அமைச்சர்கள் சிலரும் ஆதரவு அளித்து வருகின்றனர். கடந்த ஆண்டு பொதுமக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில், ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்துக்கு 61 சதவீதத்தினர் தங்களது ஆதரவை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவுஸ்ரேலிய பாராளுமன்றத்தில் ...

Read More »

`வேலையில்லா பட்டதாரி 2′ க்கு கிடைத்த ஒரு கோடி

சௌவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் – அமலாபால் – கஜோல் இணைந்து நடித்திருக்கும் `வேலையில்லா பட்டதாரி-2′ படத்தின் டிரைலரை இதுவரை சுமார் ஒரு கோடி பேர் பார்த்து ரசித்திருக்கின்றனர். வேலையில்லாப் பட்டதாரி’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் 2-வது பாகம் தற்போது தயாராகி உள்ளது. ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில், தனுஷ் பிறந்தநாளான ஜுலை 28-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு நடிகர் தனுஷ் கதை, வசனம் எழுதியிருக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் ...

Read More »

“இன்னும் இரு பௌர்ணமி பின்னர் பெரும் அதிர்ச்சி காத்திருக்கின்றது.!” – மஹிந்த ராஜபக் ஷ

தேசிய அரசாங்கத்தில் இருந்து மிகப்பெரிய குழுவொன்று விரைவில் எம்முடன் இணையவுள்ளது. இன்னும் இரு பௌர்ணமி முடிந்த பின்னர் அதிர்ச்சி காத்திருக்கின்றது. அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் ஒரு குழு இணையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். ஒரு அணி அரசியல் அமைப்பு சபையில் இருந்துகொண்டும் ஒரு அணி வெளியேறியும் புதிய அரசியல் அமைப்பை தடுப்பதே தமது திட்டம் எனவும் குறிப்பிட்டார். கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் இல்லத்தில் பொது எதிரணி கட்சி தலைவர்கள் ...

Read More »

4.9 நொடிகளில் 0-100 வேகம் பிடிக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் AMG GLC 43 4மேடிக் கூப் மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் GLC 43 நடுத்தர செயல்திறன் கொண்ட எஸ்.யு.வி. பதிப்பாகவும், 63 AMG சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. எனினும் இதன் கூப் போன்ற ரூஃப்லைன் இந்த மாடலின் அழகை கூட்டுகிறது. இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் GLC300 பெட்ரோல் இன்ஜின் மற்றும் GLC220d டீசல் இன்ஜின் கொண்டுள்ளது. மெர்சிடிஸ் AMG GLC 43 கூப் 4.8 நொடிகளிலேயே மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. தற்சமயம் ...

Read More »

சண்டை காட்சியில் விபத்து: கங்கனா ரணாவத்துக்கு தீவிர சிகிச்சை

நடிகை கங்கனா ரணாவத் சண்டை காட்சியில் நடித்தபோது நெற்றியில் வாள் குத்தி படுகாயம் அடைந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ‘தாம் தூம்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கங்கனா ரணாவத். இவர் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ‘குயின்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். தற்போது ஜான்சி ராணி வரலாற்றை மையமாக வைத்து தயாராகும் மணிகர்னிகா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தமிழில் வானம் படத்தை எடுத்த கிரிஷ் டைரக்டு செய்கிறார். ...

Read More »

டெங்கு ஒழிப்பிற்காக அவுஸ்திரேலியாவால் சிறிலங்காவிற்கு உதவி!

இலங்கையில் டெங்கு ஒழிப்பு திட்டத்திற்காக உலக சுகாதார நிறுவனம் ஊடாக 475,000 அவுஸ்திடரேலிய டொலர்களை (ரூபா 58 மில்லியன்) அவுஸ்திரேலியா உடனடியாக வழங்கும் என்று அவுஸ்திரேலிய அமைச்சர் ஜூலி பிசப் தெரிவித்தார்.  ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் கூறியுள்ளது. டெங்கு நோய் சவாலில் இருந்து மீள்வதற்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு அவுஸ்திரேலியா முடிந்தளவு உதவி வழங்கும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் தெரிவித்தார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் ...

Read More »

அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப்- சம்பந்தன் சந்திப்பு!

சிறிலங்காவில் இதுவரை காலமும் அனைத்து மக்களுக்குமான அரசியலமைப்பு உருவாக்கப்படாததாலேயே யுத்தம் ஆரம்பித்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் நேற்று (20)  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்து பேச்சு நடாத்தினார். இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார். இச்சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சம்பந்தன், நாட்டில் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பு இதுவரை உருவாக்கப்படவில்லை. அதன் காரணமாகவே யுத்தம் மூண்டது. ஆகவே, ஒரே ...

Read More »

அகதிகளுக்கு தடை விதியுங்கள், உறவினர்களுக்கு கட்டுப்பாடுகள் வேண்டாம்: அமெரிக்கா

அகதிகளுக்கு கட்டுப்பாடு விதியுங்கள், உறவினர்களுக்கு தடை வேண்டாம்: அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அதிபர் டொனால்டு டிரம்ப் கொண்டு வந்துள்ள 6 இஸ்லாமியன் நாடுகள் மீதான தடை தொடர அனுமதி அளித்துள்ள அமெரிக்க சுப்ரீம் கோர்ட், உறவினர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ரத்து செய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தார். இது பல்வேறு போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்க கோர்ட்டுகளில் பல்வேறு ...

Read More »