மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் AMG GLC 43 4மேடிக் கூப் மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் GLC 43 நடுத்தர செயல்திறன் கொண்ட எஸ்.யு.வி. பதிப்பாகவும், 63 AMG சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
எனினும் இதன் கூப் போன்ற ரூஃப்லைன் இந்த மாடலின் அழகை கூட்டுகிறது. இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் GLC300 பெட்ரோல் இன்ஜின் மற்றும் GLC220d டீசல் இன்ஜின் கொண்டுள்ளது. மெர்சிடிஸ் AMG GLC 43 கூப் 4.8 நொடிகளிலேயே மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. தற்சமயம் GLC 43 ஆல்-வீல்-டிரைவ் மற்றும் 3-லிட்டர் V6 டர்போ இன்ஜின் கொண்டுள்ளது.
இந்த இன்ஜின் 362 bhp செயல்திறன் மற்றும் 9G-டிரானிக் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. GLC 43 மாடலில் ஏர்பாடி கண்ட்ரோல் மற்றும் 4.8 நொடிகளில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை தொடும் திறன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதன் அதிவேக ஸ்பீடு மணிக்கு 250 கிலோமீட்டர் வரை செல்லும் என்றும், இந்த திறன் மின்சார முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மெர்சிடிஸ் தெரிவித்துள்ளது.
புதிய மெர்சிடிஸ் GLC 43 இகோ, கம்ஃபர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ் மற்றும் இன்டிவிடிவல் என பல்வேறு டிரைவ் மோட்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு மோட்களும் அதற்கேற்ற தன்மைகளை கொண்டுள்ளது.
இத்துடன் AMG ஸ்போர்ட் லைன் வழங்கும் 19-இன்ச் வீல்ஸ் கொண்டுள்ளது. இது எஸ்.யு.வி. தோற்றத்தை அழகாக வெளிப்படுத்துகிறது. இதன் இன்டீரியர்களும் முழுமையான பிளாக் நிறத்தில் ரெட் ஸ்டிட்ச், ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல் மற்றும் ரெட் சீட் பெல்ட்களை கொண்டுள்ளது.
இதன் டேஷ்போர்டு மற்றும் சென்ட்ரல் கன்சோலில் கார்பன் ஃபைபர் ட்ரிம்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மெர்சிடிஸ் GLC 43 கூப் மாடலுக்கு போட்டியான கார் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும் ஸ்போர்ட் செடான் மாடல்களான ஆடி S5 மாடல்களுக்கு புதிய பென்ஸ் GLC 43 கூப் போட்டியாக அமையும்.
இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் GLC 43 4மேடிக் கூப் விலை ரூ.74.8 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.