சிறிலங்காவில் இதுவரை காலமும் அனைத்து மக்களுக்குமான அரசியலமைப்பு உருவாக்கப்படாததாலேயே யுத்தம் ஆரம்பித்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் நேற்று (20) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்து பேச்சு நடாத்தினார். இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார்.
இச்சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சம்பந்தன், நாட்டில் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பு இதுவரை உருவாக்கப்படவில்லை. அதன் காரணமாகவே யுத்தம் மூண்டது.
ஆகவே, ஒரே நாட்டுக்குள் ஒற்றுமையாக இருக்கும் வகையில் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான, புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
இதற்கு அனைத்துலக சமூகம் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்’ என்று அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
Eelamurasu Australia Online News Portal