குமரன்

மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகளை ஏற்க அவுஸ்ரேலியா ஒப்புதல்!

அமெரிக்காவுடன் ஏற்பட்ட உடன்பாட்டினை அடுத்து, எல்-சால்வடார் (El salvador) உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகளை ஏற்றுக் கொள்ள அவுஸ்ரேலியா ஒப்புக் கொண்டுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஓபாமா ஆட்சிக் காலத்தில் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த ஆயிரத்து 200 அகதிகளை ஏற்றுக் கொள்ள அவுஸ்ரேலியா ஒப்புக் கொண்டிருந்தது. இவர்களுக்கு பப்புவா நியூகினியா, நவ்ரு தீவுகளில் வாழ்விடங்களை அமைக்கவும் ஒப்புதல் அளித்திருந்தது. இவர்களைத் தொடர்ந்து தற்போது கோஸ்டாரிகா, எல் சால்வடார் நாடுகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றுக் கொள்ள அவுஸ்ரேலியா ஒப்புக் கொண்டுள்ளது. ...

Read More »

மேஜை மேல் உலோக பட்டறை!

பிளாஸ்டிக் முதல் உயிரிப் பொருட்கள் வரை பலவற்றை மூலப் பொருட்களாகக் கொண்டு முப்பரிமாண அச்சு இயந்திரங்கள் மூலம் புதிய பொருட்களை வடிவமைக்க முடியும். ஆனால், உலோகங்களை வைத்து பொருட்களை முப்பரிமாண அச்சியந்திரம் மூலம் தயாரிப்பது அண்மையில்தான் சாத்தியமாகியுள்ளது. இதில் முன்னணியில் இருப்பது, ‘டெஸ்க்டாப் மெட்டல்’ என்ற இயந்திரம் தான்.அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தில் ஆராய்ச்சியாளர்களாக இருந்த சிலர் சேர்ந்து, 2013ல் துவங்கிய டெஸ்க்டாப் மெட்டல், ஏற்கனவே, ‘ஸ்டூடியோ’ என்ற உலோக முப்பரிமாண அச்சியந்திரத்தால் அறிமுகப்படுத்தியது. இதை பி.எம்.டபிள்யு., போன்ற வாகன நிறுவனங்கள் வாங்கிப் பயன்படுத்தி ...

Read More »

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் ஐஸ்வர்யாராய் – வித்யாபாலன்

இந்தியா 70-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நிலையில், அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்தியா-70 என்ற பெயரில் இந்திய திரைப்பட விழா நடக்கயிருக்கிறது. இதில் தரமான இந்திய படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் ஹிந்தி நடிகைகளான ஐஸ்வர்யாராய், வித்யாபாலன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவில், ஐஸ்வர்யா ராய், இந்திய தேசிய கொடியை அசைத்து திரைப்பட விழாவை தொடங்கி வைக்கிறாராம். அந்த வகையில், இந்திய தேசிய கொடியை அவுஸ்ரேலியாவில் பறக்க விடும் முதல் இந்திய பெண் பட்டியலில் இடம் ...

Read More »

யாழ்ப்பாணத்தில் பலமுனையில் ஆர்ப்பாட்டங்களும், பணிப்புறக்கணிப்புகளும் இடம்பெறுகின்றன

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து வடமாகாண சட்டத்தரணிகள் மற்றும் வட மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள், முச்சக்கரவண்டி ஊர்தி உரிமையாளர் சங்கத்தினர் பணிப் புறக்கணிப்புகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிகப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தை கண்டித்து வட மாகாண தனியார் பேரூந்துகள் இன்று (24) திங்கட்கிழமை பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் வழமை போன்று உள்ளூர் மற்றும் ...

Read More »

மட்டக்களப்பில் துப்பாக்கி சூடு!

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முந்தல்குமாரவேலியார் கிராமம் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிசூடு நடத்திய போது, தப்பிச் செல்ல முற்பட்ட ஒருவர் ஆற்றில் குதித்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மணல் ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களை கைது செய்ய விசேட அதிரடிப்படையினர் சென்று எச்சரிக்கை விடுத்து துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட போது இரு இளைஞர்கள் ஆற்றில் பாய்ந்துள்ளனர். குறித்த இரண்டு இளைஞர்களும் சகோதரர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவரும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொம்மாதுறை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் கரடியனாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதில் எஸ்.மதுசன் ...

Read More »

மிஸ் வேர்ல்ட் அவுஸ்ரேலியாவாக முஸ்லிம் பெண் தெரிவு!

அவுஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நடந்த உலக அழகிப் போட்டியில் Esma Voloder எனும் இளம் பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் அகதி முகாமில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.போஸ்னியா எனும் நாட்டில் சண்டை நடந்தபோது அதன் காரணமாக அகதியாக மாறிய அவரின் பெற்றோர் அகதி முகாமில் தங்கியிருந்தபோது அங்கு பிறந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை தான் Miss World Australia அழகியாக தெரிவு செய்யப்பட்டதும், சில நிற வெறியர்கள் தன்னை ஒரு முஸ்லிம் பெண் என்பதால் இழிவுபடுத்துவது கவலைக்குரியது என தெரிவித்தார்.  

Read More »

எச்பி பெவிலியன் X360, ஸ்பெக்டர் X360 லேப்டாப் அறிமுகம்

எச்பி நிறுவனத்தின் புதிய கன்வெர்டிபிள் லேப்டாப்கள் வெளியிடப்பட்டுள்ளது. எச்பி பெவிலியன் X360 மற்றும் எச்பி ஸ்பெக்டர் X360 என அழைக்கப்படும் நோட்புக் சாதனங்களின் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். கணினி மற்றும் டேப்லெட் விற்பனையில் முன்னணியில் உள்ள எச்பி நிறுவனம் இரண்டு புதிய சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. மாணவர்கள் மற்றும் பணியில் உள்ளவர்களுக்கு ஏற்ற வசதிகளை கொண்டுள்ள புதிய சாதனங்களுடன் எச்பி ஆக்டிவ் பென் ஸ்டைலஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது. எச்பி-யின் புதுவரவு சாதனங்கள் லேப்டாப் சந்தையில் மற்ற நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் சிறப்பம்சங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டு ...

Read More »

‘கலாம்…. கலாம்… சலாம்… சலாம்’ அப்துல்கலாம் இசை அல்பம்

கலாம்…. கலாம்… சலாம்… சலாம்’ என்ற வரிகளில் கவிப்பேரரசு வைரமுத்து எழுத்தில் உருவாகியுள்ள இசை அல்பம் அப்துல்கலாம் மணிமண்டப திறப்பு விழாவில் வெளியிடப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் புகழ்பாடும் பாடலை கவிப்பேரரசு வைரமுத்து இயற்றி இருக்கிறார். இதை இயக்குனர் வசந்த் இசை அல்பமாக தயாரித்துள்ளார். இசை அமைப்பாளர் ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். பாடல் வரிகள் வருமாறு:- கல்லும் முள்ளும் புல்லும் சொல்லும் நேர்மை என்பது நெஞ்சில் விளைந்தால் தூங்க விடாததே கனவு என்றாயே இந்த இசை அல்பம் பற்றி இயக்குனர் வசந்த் கூறியதாவது:- காந்திக்கு ...

Read More »

மனுஸ் தீவு தடுப்பிலுள்ள அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றம்?

அவுஸ்திரேலியாவில் தஞ்சம்கோரியவர்களில் மனுஸ் தீவில் தடுப்பில் உள்ள அகதிகள் எதிர்வரும் அக்டோபர் மாதம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை உத்தியோகப்பூர்வமாக குடிவரவு அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா – அமெரிக்கா இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி அகதிகள் அமெரிக்காவில் குடியமர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் குறித்த தடுப்பு முகாமிலுள்ள அகதிகளை உடனடியாக அமெரிக்கா அனுப்பிவைப்பதற்கே தமது அரசு விரும்புகிறது என தெரிவித்துள்ளார். அமெரிக்கா வருடமொன்றுக்கு உள்வாங்கும் அகதிகளின் எண்ணிக்கை, அரைவாசியாகக் குறைக்கப்பட்டதால், அக்டோபர் வரை காத்திருக்கவேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். ...

Read More »

மாட்யூலர் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் பேஸ்புக்

அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் மாட்யூலர் ஸ்மார்ட்போன் சாதனத்தை தயாரிப்பதற்கான விண்ணப்பம் பேஸ்புக் சார்பில் சமர்பிக்கப்பட்டுள்ளது சமீபத்திய தகவல்களில் அம்பலமாகியுள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில் விரைவில் கால்பதிக்கும் நோக்கில் பேஸ்புக் நிறுவனத்தின் காப்புரிமை அமைந்துள்ளது. அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் பேஸ்புக் விண்ணப்பித்துள்ள தகவல்களில் மாட்யூலர் எலெக்ட்ரோமெக்கானிக்கல் சாதனத்தை உருவாக்குவதற்கான காப்புரிமை பதிவு செய்யப்பட்டுள்ளது. காப்புரிமையில் பேஸ்புக் பதிவிட்டுள்ள தகவல்களில் புதிய சாதனத்தில் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஸ்பீக்கர், மைக்ரோபோன், ஜி.பி.எஸ். மற்றும் போன் போன்று இயங்கும் சாதனத்தை குறிப்பட்டுள்ளது. இந்த காப்புரிமையில் ...

Read More »