அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் மாட்யூலர் ஸ்மார்ட்போன் சாதனத்தை தயாரிப்பதற்கான விண்ணப்பம் பேஸ்புக் சார்பில் சமர்பிக்கப்பட்டுள்ளது சமீபத்திய தகவல்களில் அம்பலமாகியுள்ளது.
ஸ்மார்ட்போன் சந்தையில் விரைவில் கால்பதிக்கும் நோக்கில் பேஸ்புக் நிறுவனத்தின் காப்புரிமை அமைந்துள்ளது. அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் பேஸ்புக் விண்ணப்பித்துள்ள தகவல்களில் மாட்யூலர் எலெக்ட்ரோமெக்கானிக்கல் சாதனத்தை உருவாக்குவதற்கான காப்புரிமை பதிவு செய்யப்பட்டுள்ளது.
காப்புரிமையில் பேஸ்புக் பதிவிட்டுள்ள தகவல்களில் புதிய சாதனத்தில் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஸ்பீக்கர், மைக்ரோபோன், ஜி.பி.எஸ். மற்றும் போன் போன்று இயங்கும் சாதனத்தை குறிப்பட்டுள்ளது. இந்த காப்புரிமையில் போன் மற்றும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் இடம்பெற்றிருக்கிறது.
2016-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ள காப்புரிமையில் மெயின் சேசிஸ், 3டி பிரின்டிங் மூலம் செய்யக் கூடிய மாட்யூல்கள் இடம்பெற்றுள்ளது. இந்த சாதனத்தில் பயன்படுத்தக் கூடிய மாட்யூல்களுக்கு ஏற்ப மென்பொருள்களை டவுன்லோடு செய்து அவற்றின் பயன்பாட்டை மாற்ற முடியும்.
காப்புரிமைக்கான விண்ணப்பம் பில்டிங் 8, கூகுளின் பிராஜக்ட் அரா குழுவினர் இடம்பெற்றிருந்த பேஸ்புக்கின் நுகர்வோர் வன்பொருள் ஆய்வு கூடத்தில் இருந்து சமர்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கூகுள் நிறுவனம் பிராஜக்ட் அரா என்ற பெயரில் மாட்யூலர் போன்களை தயாரித்து வந்து பின் அத்திட்டத்தை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.