கலாம்…. கலாம்… சலாம்… சலாம்’ என்ற வரிகளில் கவிப்பேரரசு வைரமுத்து எழுத்தில் உருவாகியுள்ள இசை அல்பம் அப்துல்கலாம் மணிமண்டப திறப்பு விழாவில் வெளியிடப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் புகழ்பாடும் பாடலை கவிப்பேரரசு வைரமுத்து இயற்றி இருக்கிறார். இதை இயக்குனர் வசந்த் இசை அல்பமாக தயாரித்துள்ளார். இசை அமைப்பாளர் ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். பாடல் வரிகள் வருமாறு:-
கல்லும் முள்ளும் புல்லும் சொல்லும்
நேர்மை என்பது நெஞ்சில் விளைந்தால்
தூங்க விடாததே கனவு என்றாயே
இந்த இசை அல்பம் பற்றி இயக்குனர் வசந்த் கூறியதாவது:-
காந்திக்கு பிறகு ஒரு மாபெரும் தலைவரை இந்த தேசம் கண்டது. அவரது சிந்தனைகளை மறவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆல்பம் தயாரிக்கப்பட்டுள்ளது.
கலாமை நேசிக்கும் இளைஞர் ஒருவர் அவரது நினைவுகளுடன் பயணித்து ஜோத்பூர், ஜெய்ப்பூர், மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் கலாம் நினைவலைகளை தாங்கிய சில காட்சிகளை படமாக்கி இருக்கிறோம்.
இந்த இசை ஆல்பம் ராமேசுவரத்தில் 27-ந்திகதி கலாம் மணிமண்டப திறப்பு விழாவில் வெளியிடப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Eelamurasu Australia Online News Portal