குமரன்

அவுஸ்ரேலிய குடிவரவு திணைக்களத்தின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் தீக்குளித்துள்ளார்!

அவுஸ்ரேலிய குடிவரவு திணைக்களத்தின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து சிட்னியில் நபர் தனக்குத்தானே எரியூட்டிக்கொண்டுள்ளார் சிட்னியில் குடிவரவு திணைக்களத்திற்கு அருகில் குறிப்பிட்ட நபர் தனக்குத்தானே எரியூட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திணைக்களத்திற்கு அருகில் உள்ள லீ வீதியில் 30 வயது மதிக்கத்தக்க நபர் தன்மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட நபர் மருத்துவமனையில் கடும் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் சுமார் பத்து நிமிடங்களிற்கு மேல் அந்த நபருடன் பேச்சுவார்த்தைகைள மேற்கொண்டதாகவும் எனினும் பின்னர் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அதிகாரிகள் ...

Read More »

அரசியல் கட்சி தொடங்குவதற்கு என்னை கட்டாயப்படுத்த வேண்டாம்: கமல்ஹாசன்

அரசியல் கட்சி தொடங்குவதற்கு என்னை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று மனதில் பட்டதை சொல்வதாக தந்தி டி.வி.க்கு நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார். தந்தி டி.வி.யில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். கமல்ஹாசன் அளித்த பதில்களின் முக்கிய அம்சங்கள் வருமாறு:- நான் சிறுவயதாக இருக்கும் போதே எங்கள் வீட்டில் பலவிதமான கருத்துக்கள் பற்றி விவாதம் நடக்கும். பரந்த மனதுடன் கருத்துக்களை பரிமாறிக் கொள்வோம். அதில் ஆத்திகம், நாத்திகம் எல்லாம் இடம் பெறும். அதன் மூலம்தான் எனக்கு தமிழ் மீது ...

Read More »

புதிய நோட் ஸ்மார்ட்போன் வெளியிட லெனோவோ திட்டம்

லெனோவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டிற்கான அறிவிப்பு புதிய டீசர் மூலம் அந்நிறுவனத்தின் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. புதிய வெளியீடு சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். லெனோவோ நிறுவனம் புதிய கில்லர்நோட் டீசரை தொடர்ந்து ஆகஸ்டு 9-ம் தேதி புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லெனோவோ பதிவிட்டுள்ள புதிய ஜிஃப் புகைப்படத்தில் எண் 8 பிரகாசமாக தெரிவதை போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய கில்லர் நோட் ஆகஸ்டு 9-ம் தேதி வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக லெனோவோ ...

Read More »

உலகின் மிக பெரிய மின் சேமிப்பு கலன்!

தெற்கு அவுஸ்ரேலிய மாநிலத்திற்கென, மிகப்பெரிய மின் சேமிப்புக் கலனை நிறுவும் பணிகளில் இறங்கி உள்ளது, டெஸ்லா. மின் கார் தயாரிப்பாளரான, டெஸ்லாவின் அதிபர் எலான் மஸ்க், இதற்கான ஒப்பந்தத்தை, அந்த மாநில அரசுடன் கையெழுத்திட்டு உள்ளார். டெஸ்லா நிறுவனம், ‘பவர் வால்’ என்ற வீட்டு மின் சேமிப்புக் கலன்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், 2016ல் புயல், வெப்ப அலை ஆகியவற்றால், தெற்கு அவுஸ்ரேலிய மாநிலத்தில் மின் அமைப்புகள் சேதமடைந்தன. அப்பகுதி மக்கள், மின்சாரமின்றி பல நாட்கள் அவதிப்பட்டனர். எனவே தான், அம்மாநில முதல்வர், ...

Read More »

கஷ்டத்தை நினைவு கூறிய சச்சின்!

ஷார்ஜாவில் அவுஸ்ரேலியாவிற்கு எதிராக 143 ரன்களும், 134 ரன்களும் விளாசியபோது ஏற்பட்ட கஷ்டத்தை கிரிக்கெட் ஜாம்பவான் நினைவு கூர்ந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவனாக திகழ்ந்தவர் சச்சின் தெண்டுல்கர். ஷார்ஜா கிரிக்கெட் போட்டி என்றாலே சச்சின் விளாசிய 143 ரன்களும், 134 ரன்களும்தான் நினைவுக்கு வரும். 1998-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கோககோலா கோப்பைக்கான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. 22-ந்தேதி இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெறுவதுடன், குறிப்பிட்ட ஓவருக்குள் அதிக ரன்கள் ...

Read More »

`சங்கமித்ரா’ பிரம்மாண்ட படத்தில் சத்யராஜ்?

`பாகுபலி’ படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் `சங்கமித்ரா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாகி தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் `பாகுபலி’-2. வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள `பாகுபலி’ படத்தின் இரண்டாவது பாகம் உருவாகுவதற்கு சத்யராஜின் கட்டப்பா கதாபாத்திரம் முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில், `பாகுபலி’ படத்தின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த சத்யராஜ், மற்றுமொரு வரலாற்றுக் கதையில் நடிக்க இருக்கிறாராம். சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக ...

Read More »

இரட்டை பிரஜாவுரிமை! அவுஸ்திரேலிய அரசியல் கட்சிகளிற்கு நெருக்கடி நிலை!

அவுஸ்திரேலிய அரசியல் கட்சிகளிற்கு கடந்த சில வாரங்களில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள இரட்டை பிரஜாவுரிமை விவகாரத்தில் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஓருவர் சிக்குண்டுள்ளதை தொடர்ந்து பிரதமர் மல்கம் டேர்ன்புல் அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிஸ்கோம் யூலியா பாங்ஸ் இரட்டை பிராஜவுரிமையை கொண்டுள்ளார் என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிரேக்க பிரஜாவுரிமைக்குரியவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படும் பட்சத்தில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய நிலை ...

Read More »

ஆட்சிக் கவிழ்ப்புக்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்காது! – சம்­பந்­தன்

ஆட்­சி­யைக் கவிழ்க்­கத் துடிக்­கும் மகிந்த அணி­யின் முயற்­சிக்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஒரு­போ­தும் ஒத்­து­ழைப்பு வழங்­காது என நேற்­றுச் சபை­யில் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­தார் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்­தன். தன்­னை­யும், எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யை­யும் கடு­மை­யாக விமர்­சித்த மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தினேஷ் குண­வர்­த­ன­வுக்கு சம்­பந்­தன் உட­ன­டி­யா­கவே பதி­லடி கொடுத்­தார். நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நடை­பெற்ற அத்­தி­யா­வ­சிய பொதுச் சே­வை­கள் சட்­டத்­தின்­கீழ், எரி­பொ­ருள் வழங்­கல் மற்­றும் விநி­யோ­கம் ஆகி­ய­வற்றை அத்­தி­யா­வ­சிய சேவை­யாக அறி­விக்­கும் பிர­க­ட­னம் மீதான விவா­தத்­தில் கலந்­து­கொண்டு ...

Read More »

உலகின் மிக கூர்மையான லேசர்!

லேசர் கதிர்கள், அறுவை முதல் அளவை வரை பலவற்றிற்கு பயன்படுகின்றன. சமீபத்தில், உலகிலேயே மிகவும் கூர்மையான லேசர் கதிர்களை, விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இந்த லேசர் கதிர்களின் அலைவரிசை, வெறும், 10 மெகாஹெர்ட்ஸ் மட்டுமே. லேசர் கதிர்கள் துல்லியத்திற்கு பெயர் போனவை என்றாலும், அவற்றின் அலைவரிசை அடிக்கடி மாறுபடும் தன்மையுடையவை. இதனால் தான், மிகக் கூர்மையான, சிறிய லேசர் கதிர்களை உருவாக்க, விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். இந்த புதிய லேசரை, ஜெர்மனி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ந்து உருவாக்கி உள்ளனர். இவர்களது கூரிய ...

Read More »

அவுஸ்திரேலிய அரசாங்கம் கொள்கை ரீதியில் மனித உரிமைகளிற்கு எதிரானது !

அவுஸ்திரேலியாவின் தற்போதைய அரசாங்கம் கொள்கை ரீதியில் மனித உரிமைகளிற்கு எதிரானது என அந்நாட்டின் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கிலியன் டிரிக்ஸ் (Gilion Tricks ) தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து இந்த வாரத்துடன் ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். பெண்களின் மனித உரிமை, பூர்வீகக்குடிகளின் மனித உரிமை, அகதிகளின் மனித உரிமை என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களது மனித உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை விவகாரங்களில் அவுஸ்திரேலியா பின்னோக்கி ...

Read More »