சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் அவுஸ்ரேலியா – வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 5-வது ஆட்டம் லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில், குரூப் ஏ பிரிவில் உள்ள அவுஸ்ரேலியா, வங்காளதேசம் அணிகள் விளையாடின. முதலில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக தமீம் இக்பால், சவுமியா சர்க்கார் ஆகியோர் களமிறங்கினர். தமீம் இக்பால் அவுஸ்ரேலிய பந்துவீச்சை சமாளித்து நேர்த்தியாகவும், அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும் ...
Read More »குமரன்
வங்காளதேசத்தை 182 ரன்களில் சுருட்டியது அவுஸ்ரேலியா!
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அவுஸ்ரேலிய அணி, வங்காளதேச அணியை 182 ரன்களுக்குள் சுருட்டியது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 5-வது ஆட்டம் லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், குரூப் ஏ பிரிவில் உள்ள அவுஸ்ரேலியா, வங்காளதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக தமீம் இக்பால், சவுமியா சர்க்கார் ஆகியோர் களமிறங்கினர். தமீம் இக்பால் அவுஸ்ரேலிய பந்துவீச்சை சமாளித்து நேர்த்தியாகவும், அடிக்க வேண்டிய பந்துகளை ...
Read More »களை எடுக்கும் ரோபோ!
விவசாயத் துறையில் விதைத்தல், அறுவடை செய்தல் போன்ற பல வேலைகளுக்கு தானியங்கி ரோபோக்களை மேற்கு நாடுகளில் விற்க ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில், வீடுகளில் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு, மிகப் பெரிய தலைவலியாக இருக்கும் களை எடுத்தல் வேலையை செய்ய வந்திருக்கிறது, ‘டெர்ட்டில்.’அமெரிக்காவிலுள்ள பிராங்ளின் ரோபாடிக்ஸ் இதை தயாரித்திருக்கிறது. வீட்டுத் தோட்டத்தில் இந்த இரு சக்கர ரோபோவை விட்டுவிட்டால், அதுவே, களைகளை வெட்டி சாய்த்துவிடும். தக்காளி, மிளகாய், பூச் செடிகளை அது ஒன்றும் செய்யாது. செடிகளை விட்டு, களைகளை மட்டும் வெட்டும்படி டெர்ட்டில் ரோபோவில் இருக்கும் ...
Read More »எல்ஜி X500 ஸ்மார்ட்போன் அறிமுகம்!
எல்ஜி நிறுவனத்தின் X500 எனும் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 9-ந்தேதி முதல் விற்பனைக்கு வரும் எல்ஜி X500 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். தென்கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான எல்ஜி புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. எல்ஜி X500 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக தென்கொரியாவில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூன் 9-ந்தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட X பவர் 2 ஸ்மார்ட்போனின் கொரிய பதிப்பாக X500 இருக்கிறது. தென் கொரியாவில் புதிய ...
Read More »‘காலா’ பட ரகசியத்தை வெளியிட்ட ஹூமாகுரேஷி!
பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘காலா’ ரகசியத்தை அப்படத்தில் நடிக்கும் நடிகையான ஹூமாகுரேஷி வெளியிட்டுள்ளார். ரஜினியின் ‘காலா’ படப்பிடிப்பு கடந்த 28-ந்தேதி தொடங்கியது. பா.ரஞ்சித் இயக்கும் இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ந்து நடைபெறுகிறது. தினமும் ரஜினியை பார்க்க பெரும் கூட்டம் வருவதால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. முதலில் ரஜினி, சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் நடித்த புகைப்படங்கள் வெளியாகின. அடுத்து ரஜினி பேசிய பஞ்ச் வசனம் வெளியானது. இந்த படத்தின் நாயகியாக நடிக்கும் இந்தி நடிகை ஹூமாகுரேஷி பற்றி ...
Read More »சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: அவுஸ்ரேலியா – வங்காளதேசம் இன்று மோதல்
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் லண்டனில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் ஆட்டத்தில் ஸ்டீவன் சுமித் தலைமையிலான அவுஸ்ரேலியாவும், மோர்தசா தலைமையிலான வங்காளதேசமும் (ஏ பிரிவு) மோதுகின்றன. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் லண்டனில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் ஆட்டத்தில் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலியாவும், மோர்தசா தலைமையிலான வங்காளதேசமும் (ஏ பிரிவு) மோதுகின்றன. அவுஸ்ரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி அதில் மழையால் தோல்வியில் இருந்து தப்பித்து தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொண்டது. வங்காளதேச அணி தனது தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு ...
Read More »கொதிக்கும் தண்ணீரால் உயிரிழந்த குழந்தை!
அவுஸ்திரேலியாவில் இரண்டு வயது மகளை கொதிக்கும் நீரில் குளிக்க வைத்த காரணத்தால் அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் Brisbane நகரை சேர்ந்தவர் Shane David Stokes (30) இவர் மனைவி Nicole Betty More (23). இவர்களுக்கு Maddilyn-Rose (2) என்னும் மகள் உள்ளார். சில தினங்களுக்கு முன்னர் Maddilynயின் பெற்றோர் அவரை கொதிக்கும் தண்ணீர் உள்ள தொட்டியில் குளிக்க வைத்துள்ளனர். இதில் சூடு தாங்காமல் திணறிய Maddilynக்கு கால், முதுகு என உடலில் பல இடங்களில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. ...
Read More »திருமணத்திற்கு எந்த உடை அணியலாம்? – 93 வயதாகும் சில்வியா
அவுஸ்திரேலியாவில் 93 வயது மணப்பெண் ஒருவர் திருமணத்திற்கு எந்த உடை அணியலாம் எனக் கேட்டு பதிவேற்றியுள்ள பேஸ்புக் பதிவு தற்போது வைரலாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் பகுதியில் குடியிருந்து வருபவர் 93 வயதாகும் சில்வியா. இவர் தற்போது தமது நீண்ட நாள் நண்பரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதனையடுத்து திருமண நாளில் எந்த உடை அணியலாம் என சில புகைப்படங்களை தமது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இணையவாசிகளிடம் வினவியுள்ளார். 93 வயதாகும் சில்வியா 88 வயதாகும் பிராங்க் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். ...
Read More »அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் செயற்கை செவிச் சவ்வை உருவாக்கியுள்ளார்கள்!
காதுகளின் உட்புறத்தில் ஏற்படும் நாள்பட்ட தொற்றுக்களால் கடும் வலியும், காது கேட்கும் திறன் இழப்பும் ஏற்படலாம். இந்த தொற்றுக்களை நீக்கி காதை சரி செய்ய, நோயாளிகள் பல முறை அறுவை சிகிச்சை செய்து கொள்ள நேர்கிறது. இந்த அவஸ்தைகளை போக்க, அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ‘கிளியர் ட்ரம்’ என்ற செயற்கை செவிச் சவ்வை உருவாக்கியிருக்கின்றனர். 8 ஆண்டு ஆராய்ச்சிகளுக்குப் பின், பட்டு இழைகளால் உருவாக்கப்பட்டுள்ள கிளியர் ட்ரம், கண்ணாடிக் காகிதம் போலத் தோற்றமளிக்கிறது. இதைப் பொருத்தியதும், நோயாளிக்கு முன் போல தெளிவாக ஒலிகளைக் கேட்கும் ...
Read More »1980 பாணியில் நடனமாடும் சிம்பு!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இரண்டு பாகங்களாக வெளியாகும் இந்த படத்தின் முதல் பாகத்தில் சிம்புவுடன் ஸ்ரேயா, தமன்னா நடித்துள்ளனர். வருகிற ரம்ஜான் பண்டிகைக்கு இந்த படம் வெளியாகிறது. மேலும், இந்த படத்திற்காக யுவன் ஷங்கர் ராஜா இசையில் இளையராஜா பாடிய ரோட்டுல வண்டி ஓடுது என்ற பாடலை பாடியிருக்கிறார். இந்த பாடல் நேற்று இளையராஜாவின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த படத்தில் சிம்பு நடித்து வரும் மைக்கேல் கேரக்டர் சம்பந்தப்பட்ட வசன ...
Read More »