எல்ஜி X500 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

எல்ஜி நிறுவனத்தின் X500 எனும் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 9-ந்தேதி முதல் விற்பனைக்கு வரும் எல்ஜி X500 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

தென்கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான எல்ஜி புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. எல்ஜி X500 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக தென்கொரியாவில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூன் 9-ந்தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட X பவர் 2 ஸ்மார்ட்போனின் கொரிய பதிப்பாக X500 இருக்கிறது. தென் கொரியாவில் புதிய எல்ஜி ணX500 KRW 319,000 அதாவது இந்திய மதிப்பில் ரூ.18,357 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எல்ஜி X500 சிறப்பம்சங்கள்:
* 5.5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 1280×720 பிக்சல் ரெசல்யூஷன்
* 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
* 2 ஜிபி ரேம்
* 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 5 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி பிளாஷ்
* 4500 எம்ஏஎச் பேட்டரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம்
டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள எல்ஜி X500 ஸ்மார்ட்போனில் 4ஜி எல்டிஇ, ப்ளூடூத், ஜி.பி.எஸ்.,யு.எஸ்.பி. 2.0, வைபை, 3.5 எம்எம் ஆடியோ ஜாக் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.