ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இரண்டு பாகங்களாக வெளியாகும் இந்த படத்தின் முதல் பாகத்தில் சிம்புவுடன் ஸ்ரேயா, தமன்னா நடித்துள்ளனர். வருகிற ரம்ஜான் பண்டிகைக்கு இந்த படம் வெளியாகிறது.
மேலும், இந்த படத்திற்காக யுவன் ஷங்கர் ராஜா இசையில் இளையராஜா பாடிய ரோட்டுல வண்டி ஓடுது என்ற பாடலை பாடியிருக்கிறார். இந்த பாடல் நேற்று இளையராஜாவின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தில் சிம்பு நடித்து வரும் மைக்கேல் கேரக்டர் சம்பந்தப்பட்ட வசன காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது ஒரு பாடல் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த பாடலில் மைக்கேல் கேரக்டரில் தோன்றும் சிம்பு 1980 காலகட்டத்து நடிகர்கள் போன்ற கெட்டப்பில் இருப்பதோடு, அந்த காலகட்டத்து நடிகர்கள் ஆடியதை போன்ற நடன அசைவுகளையும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்.
Eelamurasu Australia Online News Portal