களை எடுக்கும் ரோபோ!

விவசாயத் துறையில் விதைத்தல், அறுவடை செய்தல் போன்ற பல வேலைகளுக்கு தானியங்கி ரோபோக்களை மேற்கு நாடுகளில் விற்க ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில், வீடுகளில் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு, மிகப் பெரிய தலைவலியாக இருக்கும் களை எடுத்தல் வேலையை செய்ய வந்திருக்கிறது, ‘டெர்ட்டில்.’அமெரிக்காவிலுள்ள பிராங்ளின் ரோபாடிக்ஸ் இதை தயாரித்திருக்கிறது.

வீட்டுத் தோட்டத்தில் இந்த இரு சக்கர ரோபோவை விட்டுவிட்டால், அதுவே, களைகளை வெட்டி சாய்த்துவிடும். தக்காளி, மிளகாய், பூச் செடிகளை அது ஒன்றும் செய்யாது. செடிகளை விட்டு, களைகளை மட்டும் வெட்டும்படி டெர்ட்டில் ரோபோவில் இருக்கும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளும், உணரிகளும் பார்த்துக்கொள்கின்றன.

அதேபோல, தோட்டப் பகுதியை விட்டு இந்த ரோபோ தவறுதலாக வேறுபக்கமும் போகாது. சூரிய ஒளித் தகடுகள் பொறுத்தியிருப்பதால், இதற்கு மின் தேவையும் இல்லை. 2017 இறுதியில் சந்தைக்கு வரவிருக்கும், 18,000 ரூபாய் மதிப்புள்ள டெர்ட்டில் ரோபோவுக்கு இப்போதே ஆர்டர்கள் குவிய ஆரம்பித்துள்ளன.