குமரன்

ஆஸ்திரேலியாவில் பாதுகாப்புக் கிடைத்தும், அகதிகள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாத நிலை

ஆஸ்திரேலிய அரசால் தஞ்சக்கோரிக்கை ஏற்கப்பட்ட சுமார் 1,200க்கும் மேற்பட்ட அகதிகளுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இதுவரை பயண விலக்கு கிடைக்காததால் அவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எஸ்பிஎஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. 2014-ல் Qaraqosh எனும் கிறிஸ்துவ மக்கள் அதிகமுள்ள ஈராக்கிய நகரத்திற்குள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு நுழைந்தபோது, முக்லெஸ் ஹபாஷும் அவரது குடும்பத்தினரும் தங்கள் உயிருக்கு அந்நகரை விட்டு வெளியேறி இருக்கின்றனர். கடந்த 2016ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் அகதிகளாக தஞ்சமடைந்து அங்கு நிரந்தரமாக குடியேறியிருக்கின்றனர். இந்த நிலையில், தன்னைப் போல ...

Read More »

6 மொழிகளில் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன ரம்பா

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்பா, ரசிகர்களுக்கு ஆறு மொழியில் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் ’உள்ளத்தை அள்ளித்தா’ என்ற திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானவர் ரம்பா. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சரத்குமார் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்தார். முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்பாவுக்கு தற்போது 2 மில்லியன் பாலோயர்கள் கிடைத்துள்ளனர். ...

Read More »

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அகதிகள்

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் குடிவரவுத் தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ள 14 அகதிகள் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் உள்ள அகதிகள் சிலர் சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட 2 அகதிகள் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். “இந்த அரசாங்கம் எங்களை ஒன்பது ஆண்டுகளாக சித்ரவதை செய்வது ஏன்? எங்களுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்ட அகதிகளுக்கும் என்ன வித்தியாசம்? எங்களால் இனியும் தடுப்பு முகாமில் இருக்க முடியாது,” ...

Read More »

பொசன் நாடகம்?

கடந்த12 ஆண்டுகாலத் தமிழ் அரசியலின் இயலாமையை வெளிக்காட்டும் குறிகாட்டிகளில் ஒன்று தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம். கடந்த12 ஆண்டுகளாக தமிழ் மக்கள் வினைத்திறன் மிக்க விதத்தில் போராடவில்லை என்பதற்கு அது ஒரு குறிகாட்டி. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக தமிழ் அரசியல் தலைமைகள் பொருத்தமான வெற்றிகள் எதனையும் பெறத் தவறி விட்டார்கள் என்பதற்கு அது ஒரு குறிகாட்டி. தமிழ்க் கட்சிகளில் துருத்திக்கொண்டு தெரியும் பலரும் சட்டத்துறை ஒழுக்கத்தை சேர்ந்தவர்கள்.ஆனால் கடந்த12 ஆண்டுகளில் அரசியல் கைதிகளுக்காக போராடுவதற்கென்று சட்ட உதவிக் கட்டமைப்பு எதையும் இன்று வரையிலும் எந்த ...

Read More »

கொரோனாவை எதிர்கொள்ளும் நடவடிக்கையில் உலகம் தவறு செய்கிறது

எச்.ஐ.வி. நெருக்கடியின்போது நடந்ததைப்போல கொரோனாவை எதிர்கொள்ளும் நடவடிக்கையிலும் உலகம் தவறு செய்கிறது என உலக சுகாதார அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேஸ், ஜெனீவாவில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “கொரோனா வைரசை எதிர் கொள்ளும் நடவடிக்கையை பொறுத்தமட்டில், 1980-களில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் நெருக்கடியின்போது செய்த அதே தவறை உலக நாடுகள் இப்போதும் செய்கின்றன். எச்.ஐ.வி., எய்ட்ஸ் சிகிச்சையானது வளர்ச்சி அடைந்த நாடுகளில் பரவலாக ஆன பின்னர், குறைவான வருமானம் கொண்ட நாடுகளை சென்றடைய ...

Read More »

கொரோனாவால் யாழில் மேலும் ஐவர் பலி

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொவிட்-19 நோயாளிகள் ஐவர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன் தினம் இருவர் உயிரிழந்துள்ளனர் என்றும் நேற்று மூவர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைநகரைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவரும் மன்னாரைச் சேர்ந்த 24 வயதுடைய ஆண் ஒருவருமே நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இருவரினதும் சடலங்களும் உரிய சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மின் தகனம் செய்யப்பட்டன. மேலும் மூவர் நேற்று உயிரிழந்துள்ளனர்.அதன்படி வடமராட்சி துன்னாலையைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று ...

Read More »

அரசியல் கைதி தீடீர் மரணம்

2006ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தில் தற்போதைய ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்சவை கொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையான அரசியல் கைதியொருவர் இன்று தீடீரென உயிரிழந்துள்ளார். யாழ்.புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சந்திரபோஸ் செல்வச்சந்திரன் என்பவரே இவ்வாறு மயக்கமுற்று விழுந்த நிலையில் தனது 41வது வயதில் உயிரிழந்துள்ளார். இவர் 2006ம் ஆண்டு பயங்கரவாதத் தடைப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசாவின் வாதத்தையடுத்து கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டிருந்தார். 2006 ம் ...

Read More »

சிட்னி நகர் இரண்டு வாரங்களுக்கு முடக்கம்

அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரின் அனைத்து பாகங்களிலும் இரண்டு வாரங்களுக்கு முடக்கநிலை அமுலாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா வைரஸ் திரிபு பரவல் நிலையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இதற்கமைய, நேற்று மாலை 6 மணிமுதல், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு முடக்கநிலை அமுலாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் இதுவரையில் 650,000 க்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. 10,700 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

தாமதமாகும் ‘பொன்னியின் செல்வன்’- நடிகர்கள் மற்ற படங்களில் மும்முரம்

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தாமதமாவதால், நடிகர்கள் மற்ற படங்களில் மும்முரமாகி உள்ளனர். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். சுமார் 70% படப்பிடிப்பு முடிந்துள்ளது. ...

Read More »

மீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி?

சேகர் கம்முல்லா இயக்கவுள்ள படத்தில் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, ரோபோ ஷங்கர், டோவினோ தாமஸ், வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாரி 2’. இந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், தனுஷ் – சாய் பல்லவி ஜோடி பலரது கவனத்தையும் ஈர்த்தது. தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. ...

Read More »