குமரன்

யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்கும் ஓவியா

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான ஓவியா, அடுத்ததாக யோகிபாபு உடன் ஜோடி சேர உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது இவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த கோலமாவு கோகிலா, கூர்கா, மண்டேலா போன்ற படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் யோகிபாபு அடுத்ததாக முதன்மை கதாபாத்திரத்தில் ...

Read More »

காணாமல் போனோரை கொன்று விட்டனரா?

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணச்சான்றிதழை வழங்க இலங்கை ஜனாதிபதி முன்வந்திருப்பதன் மூலம் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனரென்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளாராவென கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிறேமசந்திரன். யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துவெளியிட்ட அவர் இலங்கை ஜனாதிபதி ஜநா பொதுச் செயலர் உடனான சந்திப்பின் போது காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணச்சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளதாக ஊடக அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.. முதலில் அவர் இலங்கை திரும்பியதும் இத்தகைய அறிவிப்பினை முதலில் திட்டவட்டமாக பகிரங்கமாக அறிவிக்கவேண்டும். இலங்கை அரசின் தகவல்படி ...

Read More »

ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். ஆஸ்திரேலியாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. மெல்போர்ன் நகரில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மன்ஸ்பீல்டு பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. கட்டிடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். அங்குள்ள சேப்பல் தெருவில் உள்ள ஒரு கட்டிடம் சேதம் ...

Read More »

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தீர்வாகாது!-ஆஸ்திரேலிய மாநிலம்

ஆஸ்திரேலியாவில் கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், அங்குள்ள மாநிலங்கள், பிரதேசங்கள் ஊரடங்கினால் தொற்றினை ஒழிக்க முடியாது எனும் எண்ணத்திற்கு வந்துள்ளன. இதனை தொற்று பரவலுக்கு இடையில் வாழ்க்கையை நடத்துவது குறித்து ஆஸ்திரேலிய மாநில அரசுகள் சிந்திக்கத் தொடங்கியுள்ளன. ஆஸ்திரேலியாவின் 25 மில்லியன் மக்கள் தொகையில் 25 சதவீதமானோரை கொண்டுள்ள விக்டோரியா மாநிலம், 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 70 சதவீதமானோர் முழுமையான தடுப்பூசி செலுத்திய பின்னர், ஊரடங்கினை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. வரும் அக்டோபர் 26ம் தேதிக்குள் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா ...

Read More »

19 வருட கனவு நனவானது – நடிகர் ஜெய் நெகிழ்ச்சி

நடிகர் ஜெய், பிரேக்கிங் நியூஸ், எண்ணித் துணிக, பார்ட்டி, குற்றமே குற்றம், சிவ சிவா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘பகவதி’ படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஜெய். இதையடுத்து சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார். இதுவரை 25 படங்களில் நடித்துள்ள ஜெய், தற்போது இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘சிவ ...

Read More »

விமானத்தில் நாயை அழைத்து வர பெண் செய்த காரியம்

சமீபத்தில் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பெண் ஒருவர் தனது செல்ல நாயை அழைத்து வர செய்த காரியம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விமானங்களில் நாய், பூனை போன்ற செல்ல வளர்ப்புப் பிராணிகளையும் அழைத்து வர அனுமதிக்கப்படுகிறது. இவை 5 கிலோ எடைக்கும் கீழ் இருந்தால் அவற்றை அதற்கான விசே‌ஷ காற்றோட்ட வசதி உள்ள பையில் அடைத்துக் கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் சரக்கு கேபின் மூலமாகவும் இவற்றை கொண்டு வரலாம். இதற்காக தனி டிக்கெட் கட்டணம் செலுத்த வேண்டும். சமீபத்தில் மும்பையில் ...

Read More »

மீண்டும் அரியணை ஏறுவாரா ட்ரூடோ?

கனடாவில் இன்று பொதுத்தேர்தல் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. இரண்டு வருடகாலப்பகுதியில் இரண்டாவது தடவை கனடாவில் பொதுமக்கள் பொதுதேர்தலில் வாக்களிக்கின்றனர். குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாக தேர்தலை ( இரண்டு வருடகாலத்திற்கு முன்பாக ) தேர்தலை அறிவித்த கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகஸ்ட் மாதம் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் – மூன்றாவது முறையாக அரியணை ஏறுவதே அவரது நோக்கம். ஐந்து வாரகாலமாக தீவிரமாக இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து தலைவர்களும் வாக்காளர்களை நோக்கி தங்கள் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தனர். இரண்டு முன்னணி வேட்பாளர்கள் மத்தியிலான கடுமையான போட்டி தொற்றுநோயிலிருந்து ...

Read More »

இரு அமைச்சர்களின் வற்புறுத்தல் காரணமாக நான் இராஜினாமா செய்கிறேன் – துஷான் குணவர்தன

இரு அமைச்சர்களின் வற்புறுத்தல் காரணமாக நான் இராஜினாமா செய்கிறேன் என நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார். சதொச நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட மோசடி மற்றும் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயற்பட்டமைக்கு இரண்டு அமைச்சர்கள் பிரச்சினைக்குள்ளாகி என்னைப் பதவிலிருந்து விலக்கத் திட்டமிட்டுள்ளனர் என நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித் துள்ளார். எனது உயிருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனது உயிரைக் காப்பாற்றப் பதவியை இராஜினாமா செய்வதாகவும் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். வெள்ளைப் பூடு ...

Read More »

அரசாங்கத்துக்குள் பனிப்போர்!

கெரவலப்பிட்டியவில் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியமை தொடர்பில் அரசாங்கத்தின் பங்காளிகளில் பத்து பங்காளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசு தேவ நாணயக்கார உள்ளிட்டோர் தலைமையிலான பங்காளிகளே, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் கெரவலப்பிட்டிய யுகதானவி மின்நிலையத்தில் 40 சதவீதத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றும் தீர்மானத்துக்கே அந்த 10 பங்காளிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

Read More »