கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான ஓவியா, அடுத்ததாக யோகிபாபு உடன் ஜோடி சேர உள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது இவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த கோலமாவு கோகிலா, கூர்கா, மண்டேலா போன்ற படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகர் யோகிபாபு அடுத்ததாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, அப்படத்தை அன்கா மீடியா நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.

இப்படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிகை ஓவியா நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் பூஜை வருகிற செப்டம்பர் 24-ந் தேதி நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகை ஓவியா, யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
										
									 Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				