ஈழ தமிழ் மக்களின் தலைவிதி இருட்டில் இருந்த சந்தர்ப்பதில் எமது நிலையை விளக்கி ஆதரவை கேட்ட போது முழுமையான ஆதரவை வழங்கியதுடன் வடக்கு, கிழக்கு மக்களின் போராட்டத்திற்கு எப்போதும் அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆதரவளித்துள்ளார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தல் நேற்று அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தொண்டமான் குடும்பம் மலைநாட்டு தமிழ் மக்களை பிரிதிநிதிப்படுத்தியுள்ளது. மலைநாட்டு தமிழ் ...
Read More »குமரன்
அவுஸ்திரேலியால் இலங்கையர் ஒருவரின் மோசமான செயற்பாடு! பல சிறுமிகள் பாதிப்பு
அவுஸ்திரேலியா – மெல்பேர்ன் நகரில் வாழும் இலங்கையர் ஒருவர் மீது சிறுவர் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சிறு பிள்ளைகள் மற்றும் இளம் பெண்களிடம் தவறான புகைப்படம் பெற்றுக் கொள்வதோடு மேலும் பல புகைப்படங்களை அனுப்புமாறு மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுவர்களை தண்டிக்கும் வகையில் அவர்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் குறித்த இலங்கையர் அனுப்பியுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 12 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் 23 ...
Read More »தமிழ்தேசியம் தோற்கப்படவில்லை! -அரியநேத்திரன்
“தமிழ் தலைவர்களின் செயல்பாடுகளில் தடைகள், தாமதங்கள் இருப்பது என்பது உண்மைதான் இருந்தபோதும் தமிழ்தேசியம் தோற்கப்படவில்லை. அது வெற்றிக்கான படிகளை தாண்டுவதற்கு இன்னும் பல அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டும். அதற்கு தமிழ் இளைஞர்கள் சலுகை அரசியலுக்கு சோரம் போகாமல் எமது கடந்த கால வரலாறுகளையும் போராட்ட தியாக இழப்புகளையும் கேட்டறிந்து உண்மையான தமிழ் இளைஞர்களாக மாறும்போது தமிழ்தேசியம் பல வீச்சுக்களுடன் முன்னேறும்” என இலங்கை தமிழரசுகட்சி பட்டிருப்பு தொகுதித் தலைவரும் மட்டு. மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் அளித்த செவ்வியில் கூறினார். அந்தச் செவ்வியின் ...
Read More »5 மொழிகளில் உருவாகும் ஸ்ரேயாவின் ‘கமனம்’
5 மொழிகளில் உருவாகும் ஸ்ரேயாவின் ‘கமனம்’ படத்திற்கு, இளையராஜா இசையமைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழில், மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரௌத்ரம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரேயா. இந்தி, தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட ஸ்ரேயா, தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இவர் கைவசம் ...
Read More »இங்கிலாந்து – ஆஸ்திரேலியா மோதும் ஒரு நாள் கிரிக்கெட் இன்று நடக்கிறது
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலியா அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன்படி இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 20 ஓவர் தொடரில் சொதப்பிய ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவன் சுமித் ஒரு ...
Read More »மலையகமக்களின் உரிமைகளை வெல்வதற்கு நாம் ஆதரவு
மலையகமக்களின் உரிமைகளை வெல்வதற்கான முயற்சிகளுக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி தனது முழுமையான ஆதரவை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்றுஉரையாற்றிய கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை தெரிவித்துள்ளார். மலையகமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானோ அல்லது வேறு எந்த அமைச்சரோ மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தனது கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
Read More »அராலி இராணுவ முகாம் பகுதியில் குண்டுகள் வெடிப்பு
யாழ்ப்பாணம் அராலி இராணுவ முகாம் பகுதியில் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பாரிய வெடிச்சத்தங்கள் யாழ். மக்கள் பதற்றமடையச் செய்தன. எனினும், அப்பகுதியில் பயன்பாட்டிற்கு உதவாத வெடிப்பொருட்களை செயலிழக்க வைக்கும் நடவடிக்கை முன்னெடுப்பட்டதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் இவ்விடயம் குறித்து அச்சமடையத் தேவையில்லை எனவும் இராணுவ ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
Read More »13 வது திருத்தச் சட்ட நீக்கம் சாத்தியப்படுமா?
புதிய அரசுப் பொறுப்புக்களை ஏற்று இரண்டு வாரங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில் அரசுக்கு அழுத்தங்களை வழங்குவோர் ஒருபுறம், விமர்சிப்போர் இன்னொருபுறம், அரசுக்குள் நிலவும், அதிருப்தியாளர்களின் உளவியல் நிலையை பயன்படுத்தி அரசின் பெரும்பான்மைக்கு பங்கம் ஏற்படுத்தி அரசியல் அநுகூலங்களைப் பெற்றுக் கொள்ள திரைமறைவு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீவிரம் காட்டுவோர் மற்றொரு புறமுமாக நின்றுகொண்டு பிரச்சினைகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளமையானது நாட்டின் எதிர்காலத்திற்கு அவ்வளவு நல்ல சகுனமாக இல்லை. தேசிய ரீதியில் ஏராளம் பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நிற்கும் அதேவேளை சர்வதேச மட்டத்திலும் ...
Read More »அக்ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கும் பிரபல பாடகி
ட்ரெண்ட் லவுட் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் முதல் திரைப்படத்தில் நடிகை அக்ஷரா ஹாசனுக்கு பாட்டியாக பிரபல பாடகி நடிக்கிறார். ட்ரெண்ட் லவுட் நிறுவனம் நடிகை அக்ஷரா ஹாசன் முன்னனி பாத்திரத்தில் நடிக்க, தனது முதல் திரைப்படத்தை தயாரிப்பதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார்கள். இது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பும், வரவேற்பும் கிடைத்து வருகிறது. தற்போது அடுத்த ஆச்சர்யமாக, இப்படத்தில் இந்தியாவின் பெரும்புகழ்பெற்ற பாடகி உஷா உதுப் மிகபெரும் இடைவெளிக்கு பிறகு அக்ஷரா ஹாசனின் பாட்டியாக, இத்தமிழ்படம் வழியாக நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. பாடகி உஷா ...
Read More »ஆஸ்திரேலியாவில் உள்ள சீனர்களின் வீடுகளில் திடீர்ச் சோதனைகள் – சீனா கண்டனம்
ஆஸ்திரேலியாவில் உள்ள சீன அரசாங்க ஊடகச் செய்தியாளர்களின் வீடுகளில் திடீர்ச் சோதனைகள் நடத்தப்பட்டது நியாயமில்லாத செயல் என்று சீனா குறைகூறியுள்ளது. ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டுத் தலையீடு இருக்கிறதா என்பதை விசாரிக்கும் நோக்கில் அவர்களின் வீடுகள் சோதிக்கப்பட்டன. ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், சீன நிருபர்கள் நால்வரின் வீடுகளைக் கடந்த ஜூன் மாதம் சோதனையிட்டதாகச் சீன ஊடகங்கள் தெரிவித்தன. விசாரணையை அடுத்து அந்த நால்வரும் ஆஸ்திரேலியாவைவிட்டு வெளியேறினர். மேலும், இரண்டு சீனக் கல்விமான்களின் விசாக்களும் ரத்துசெய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட சீன நாட்டவர் 6 பேரும் வேவு பார்த்தல், ...
Read More »