குமரன்

UNHRC இல் அங்கத்துவம் பெற்ற முதல் பசுபிக் நாடு அவுஸ்ரேலியா!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் அவுஸ்திரேலியாவுக்கு அங்கத்துவம் கிடைத்துள்ளது. ஜெனீவாவைத் தளமாகக் கொண்ட 47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைகள் சபைக்கு அவுஸ்ரேலியா, காங்கோ ஜனநாயக குடியரசு உட்பட 15 நாடுகள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன. UNHRC இல் அங்கத்துவம் பெற்ற முதலாவது பசுபிக் நாடு அவுஸ்திரேலியா என்றும் அவுஸ்ரேலியாவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும் வெளிவிவகார அமைச்சர் Julie Bishop தெரிவித்துள்ளார்.

Read More »

அவுஸ்ரேலியாவில் மின்சக்தி மற்றும் எரிசக்தியில் பாரிய மாற்றம்!

‘National Energy Guarantee’ எனப்படும் மின்சக்தி மற்றும் எரிசக்தி தொடர்பிலான கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. உத்தியோகப்பூர்வமாக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. இதேவேளை அவுஸ்ரேலியாவில் மின்சக்திப் பயன்பாடு தொடர்பில் பாரியளவிலான மாற்றத்தை இது கொண்டுவருமென பிரதமர் தெரிவித்துள்ளார். அரசின் இந்த திட்டமானது, எதிர்வரும் 2020ஆம் ஆண்டு முதல் அடுத்துவரும் 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு குடும்பமும் வருடத்துக்கு 115 டொலர்கள் வரை தமது மின் கட்டணத்தில் சேமிக்கமுடியமென அரசு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் தனியார் நிறுவனங்கள் நுகர்வோருக்கு ஒரு சிறந்த ஒப்பந்தத்தை வழங்குகிறது. அதேவேளை எரிவாயுவை ஏற்றுமதி செய்வதற்கு முன்னர் ...

Read More »

வேலையைத் தூக்கியெறிந்த தொகுப்பாளினி!

அவுஸ்திரேலியாவில் ஆண்களுக்கு நிகரான ஊதியம் பெண்களுக்கும் வழங்கப்படவேண்டுமென்ற கோரிக்கைகள் வலுவடைந்துள்ளது. இந்நிலையில் சக ஆண் ஊழியருக்கு நிகரான ஊதியம் தனக்கு வழங்கப்படவில்லை என்பதை காரணம் காட்டி பிரபல பெண் தொலைக்காட்சித் தொகுப்பாளர் Lisa Wilkinson தனது வேலையை இராஜினாமா செய்துள்ளார். குறித்த தொகுப்பாளினி Channel 9 தொலைக்காட்சியில் காலை நிகழ்ச்சியை (Today Show) Karl Stefanovic உடன் இணைந்து Lisa Wilkinson தொகுத்து வழங்கி வந்தார். ஆண் தொகுப்பாளர் Karl ற்கு $2 மில்லியன் ஊதியமும் Lisa இற்கு $1.1 மில்லியன் ஊதியமும் வழங்கப்பட்டு ...

Read More »

சூரிய அடுப்பு

சூரிய சக்தியை பயன்படுத்தி தண்ணீரை கொதிக்கவைக்கவும் உணவு சமைக்கவும் புதிய வகை அடுப்பை வடிவமைத்துள்ளனர். ஒரு குழாயுடன் சூரிய தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் தண்ணீரை ஊற்றி சுட வைத்துக் கொள்ளமுடியும். மேலும் காய்களையும் வேகவைக்கமுடியும்.

Read More »

எல்லை நிர்­ணயம் குறித்து யோசனைகள் பெறு­வ­தற்கு ஆணைக்­குழு நட­வ­டிக்கை

மாகா­ண­ச­பை­க­ளுக்கு நிர்­வாக மாவட்­டங்­களின்  கீழ் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­ட­வுள்ள உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை அடிப்­ப­டையில் தேர்தல் தொகு­தி­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யான யோச­னைகள் மற்றும் கருத்­துக்­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கு எல்லை நிர்­ணய ஆணைக்­குழு தீர்­மா­னித்­துள்­ளது. 2017 ஆம் ஆண்டு   17ஆம் இலக்க மாகா­ண­சபை தேர்தல் வாக்­கெ­டுப்பு திருத்த சட்­ட­மூ­லத்தின் அடிப்­ப­டை­யிலே இந்த தேர்தல் தொகு­திகள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­க­ஆ­ணைக்­கு­ழுவின் செய­லாளர் சமன் ஸ்ரீ ரத்­நா­யக்க  அறி­வித்­துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரி­விக்­கையில், மாகா­ண­ச­பை­க­ளுக்கு குறிப்­பிட்ட நிர்­வாக மாவட்­டத்தின் கீழ் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­ட­வுள்ள முழு உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையில் நூற்­றுக்கு 50 க்கு ஈடான தொகையை தெரிவு ...

Read More »

பணமதிப்பு நீக்கத்தை அவசரப்பட்டு ஆதரித்தமைக்கு வருந்துகிறேன்: கமல்ஹாசன்

 சில திட்டங்கள் நல்ல எண்ணத்துடன் செய்யப்பட்டாலும் நடைமுறையில் தோல்வியுறும் என்று நினைத்துக் கொண்டேன். தற்போது யோசனையே கபடமானது என்பது போன்ற உரத்த குரல்களுக்கு அரசிடமிருந்து பலவீனமான பதில்களே வரும்போது சந்தேகம் வலுக்கிறது. பணமதிப்பு நீக்கத்தை அவசரப்பட்டு ஆதரித்தமைக்கு வருந்துவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், பணமதிப்பு நீக்கம் தவறென்பதை பிரதமர் மோடி ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழ் பத்திரிகை ஆனந்த விகடனில் எழுதிவரும் பத்தியில் கமல்ஹாசன் இதனைத் தெரிவித்துள்ளார். அந்தப் பத்தியில், “பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அவசரப்பட்டு ஆதரித்தமைக்கு வருந்துகிறேன். பணமதிப்பு ...

Read More »

கிளிநொச்சியில் இராணுத்தினரின் பிரசன்னம் அதிகரிப்பு!

கிளிநொச்சி நகரில் தற்பொழுது இராணுத்தினரின் பிரசன்னம் அதிகரித்துள்ள நிலையில், அந்த பகுதி இராணுவத்தினரின் முற்றுகைக்குள் காணப்படுவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பொருட்கள் கொள்வனவில் அதிகளவிலான இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், ஏடிஎம் இயந்திரங்களை பயன்படுத்துவதற்கும் இராணுவத்தினரின் பின்னால் நீண்ட நேரம் காத்து நிற்க வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும், இராணுவத்தினர் மக்கள் நடமாட்டமுள்ள பொது இடங்களில் பிரசன்னமாகியிருப்பதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Read More »

உணவின்றி காட்டில் மகனுடன் பத்து நாட்கள் சிக்கி கொண்ட பெண்!

காட்டுக்குள் சென்று வெளியே மீண்டும் வர வழித்தெரியாமல் பத்து நாட்கள் அங்கேயே உணவின்றி வெறும் தண்ணீர் மட்டும் குடித்து தாயும், மகனும் உயிர்வாழ்ந்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர் மிச்சலே ஸ்மால் (40), இவர் மகன் டைலன் டீனே (9) இருவரும் Hunter Valley பகுதியில் அமைந்திருக்கும் மவுண்ட் ராயல் தேசிய பூங்காவுக்கு கடந்த 2-ஆம் திகதி சென்றுள்ளனர். அது மிகப்பெரிய காட்டு பகுதி என்பதால் வெகுதூரம் உள்ளே சென்ற ஸ்மால் மற்றும் டீனேவுக்கு மீண்டும் வெளியில் வருவதற்கான வழி தெரியவில்லை. ...

Read More »

அகதிகள் அல்லாதவர்கள் நாடுகடத்தப்படுவர்: அவுஸ்ரேலியா

அவுஸ்திரேலியாவின் மனுஸ் தீவிலுள்ள தடுப்புமுகாம், ஒக்டோபர் 31ம் திகதியுடன் மூடப்படவுள்ளது. இந்நிலையில் உண்மையான அகதிகள் என இனங்காணப்படாதவர்கள், விரைவில் தமது நாடுகளுக்கு திருப்பியனுப்பப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. உண்மையான அகதிகள் என இனங்காணப்பட்டவர்கள் விரும்பினால் நவுறுவுக்கு செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் உண்மையான அகதிகள் என இனங்காணப்படாதவர்கள், தாமாகவே முன்வந்து தமது நாடுகளுக்குச் செல்லவேண்டும். அவ்வாறு அவர்கள் செல்லவில்லையெனில் வலுக்கட்டாயமாகத் திருப்பியனுப்பும்பணி விரைவில் ஆரம்பிக்கப்படுமெனவும் அமைச்சர் Michaelia Cash தெரிவித்தார்.

Read More »

வயதான பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் மரியாதை இல்லை: அலியா பட்

பிரபல இந்தி நடிகை அலியா பட், வயதான பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் மரியாதை இல்லை என்று கூறியிருக்கிறார். பிரபல இந்தி பட இயக்குனர் மகேஷ்பட் மகள் அலியாபட். இவர் நடித்த பல படங்கள் விருதுகளை பெற்றுள்ளன. இவருக்கும் பல விருதுகள் கிடைத்துள்ளன. படங்களில் நடிப்பது பற்றி கூறிய அலியாபட்… “ஆண்களுக்கு மட்டும் முதிர்ந்த வயது வரை நடிப்பது போன்ற கதைகளை தயார் செய்து கொடுக்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு அப்படி அல்ல. இளம் வயது என்றால் கதாநாயகியாக நடிக்க வேண்டும். அதன்பிறகு ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடிக்க ...

Read More »