ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் அவுஸ்திரேலியாவுக்கு அங்கத்துவம் கிடைத்துள்ளது.
ஜெனீவாவைத் தளமாகக் கொண்ட 47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைகள் சபைக்கு அவுஸ்ரேலியா, காங்கோ ஜனநாயக குடியரசு உட்பட 15 நாடுகள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன.
UNHRC இல் அங்கத்துவம் பெற்ற முதலாவது பசுபிக் நாடு அவுஸ்திரேலியா என்றும் அவுஸ்ரேலியாவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும் வெளிவிவகார அமைச்சர் Julie Bishop தெரிவித்துள்ளார்.