அவுஸ்ரேலியாவில் மின்சக்தி மற்றும் எரிசக்தியில் பாரிய மாற்றம்!

‘National Energy Guarantee’ எனப்படும் மின்சக்தி மற்றும் எரிசக்தி தொடர்பிலான கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. உத்தியோகப்பூர்வமாக அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

இதேவேளை அவுஸ்ரேலியாவில் மின்சக்திப் பயன்பாடு தொடர்பில் பாரியளவிலான மாற்றத்தை இது கொண்டுவருமென பிரதமர் தெரிவித்துள்ளார்.

அரசின் இந்த திட்டமானது, எதிர்வரும் 2020ஆம் ஆண்டு முதல் அடுத்துவரும் 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு குடும்பமும் வருடத்துக்கு 115 டொலர்கள் வரை தமது மின் கட்டணத்தில் சேமிக்கமுடியமென அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் தனியார் நிறுவனங்கள் நுகர்வோருக்கு ஒரு சிறந்த ஒப்பந்தத்தை வழங்குகிறது. அதேவேளை எரிவாயுவை ஏற்றுமதி செய்வதற்கு முன்னர் அவுஸ்ரேலியர்களுக்கு தாராளமாக வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட இது வழி செய்வதாகவும் அரசு தெரிவித்துள்ளது.