அவுஸ்திரேலியாவின் மனுஸ் தீவிலுள்ள தடுப்புமுகாம், ஒக்டோபர் 31ம் திகதியுடன் மூடப்படவுள்ளது.
இந்நிலையில் உண்மையான அகதிகள் என இனங்காணப்படாதவர்கள், விரைவில் தமது நாடுகளுக்கு திருப்பியனுப்பப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
உண்மையான அகதிகள் என இனங்காணப்பட்டவர்கள் விரும்பினால் நவுறுவுக்கு செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் உண்மையான அகதிகள் என இனங்காணப்படாதவர்கள், தாமாகவே முன்வந்து தமது நாடுகளுக்குச் செல்லவேண்டும்.
அவ்வாறு அவர்கள் செல்லவில்லையெனில் வலுக்கட்டாயமாகத் திருப்பியனுப்பும்பணி விரைவில் ஆரம்பிக்கப்படுமெனவும் அமைச்சர் Michaelia Cash தெரிவித்தார்.