அரசியல் கைதிகளில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இதுவரை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாதவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். மேலும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாத அரசியல் கைதிகளை விடுதலை செய்யும்போது அவர்கள் தொடர்பில் தேடிப்பாரக்கும் பொறுப்பை காவல் துறைக்கு வழங்க வேண்டும். அவர்கள் காவல் துறை நிலையத்துக்கு வந்து தங்களை உறுத்திப்படுத்தவேண்டும் போன்ற நிபந்தனைகளை விதிக்கலாம். எனினும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம் பெற்றுக்கொண்டிருப்பவர்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கு எந்த ...
Read More »குமரன்
தியாகி திலீபனின் 31ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!
தன்னுடலை வருத்தி நீர்கூட அருந்தாது, தன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின் 31ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு, செப்ரம்பர் மாதம் 28ஆம் நாள் வெள்ளிக்கிழமை மெல்பேணில் இடம்பெறவுள்ளது. ஆயுதந்தரித்து களமாடிய விடுதலைப் போராளியான திலீபன், காந்தி தேசத்திடம் தமிழீழ மக்களுக்காக நீதிகோரி சாத்வீக வழியில் போராடினான். அடிப்படையான ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் மேற்கொண்ட பயணம் எமது விடுதலைப் போராட்டத்தில் உன்னதமான அர்ப்பணிப்பாகியது. பன்னிருநாட்கள் தன்னை உருக்கி உருக்கி எரிந்தணைந்த அந்தத் தியாக தீபத்தின் நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். ஆண்டுதோறும் ...
Read More »குறும்படத்தில் நடிக்கும் விஜய் மகன் சஞ்சய்!
வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு வந்து நடனமாடிச் சென்ற விஜய்யின் மகன் சஞ்சய் தற்போது குறும்படம் ஒன்றில் நடித்து வருகிறார். விஜய்யின் மகன் சஞ்சய் விரைவில் நடிகராக களம் இறங்குவார் என்று தகவல் வெளியானது. அதை உண்மையாக்கும் வகையில் சஞ்சய் நடித்த குறும்படம் ஒன்றின் டீசர் வெளியாகி உள்ளது. விஜய் தான் நடித்த வேட்டைக்காரன் படத்தில் தனது மகன் சஞ்சய்யை ஒரு பாடலுக்கு நடனமாட வைத்தார். திரையுலகில் மகனைக் களமிறக்கும் முயற்சி என்று அப்போது அது பேசப்பட்டாலும் தொடர்ந்து அவர் படங்களில் நடிக்கவில்லை. தனது ...
Read More »மஹிந்தவுக்கு முளைத்திருக்கும் சிக்கல்!
ஒன்றுமட்டும் உறுதியாகத் தெரிகிறது, கூட்டு எதிரணி மஹிந்த ராஜபக் ஷ என்ற ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைந்திருந்தாலும், கோத்தா விசுவாசிகள், பசில் விசுவாசிகள், என்று மாத்திரமன்றி, ராஜ பக்ஷ குடும்ப அரசியலுக்கு எதிரானவர்களும் கூட அதனுள் அடங்கியிருக்கிறார்கள். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிரணி அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் யார் என்ற விவகாரம் இப்போது முன்னையதை விடவும் சிக்கலானதாக மாறியிருக்கிறது. மஹிந்த ராஜபக் ஷ தனது சகோதரர்களில் ஒருவரை போட்டியில் நிறுத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, ...
Read More »அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறும் 5 நாடுகள்!
ஈரான் மீது விதித்துள்ள பொருளாதார தடையை மீறி அந்நாட்டுடன் வர்த்தகம் செய்ய புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியா உள்ளிட்ட 5 நாடுகள் முடிவு செய்துள்ளன. ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்த அமெரிக்கா, அந்நாட்டின் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்தது. மேலும், ஈரான் உடன் எந்த நாடுகளும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட வர்த்தகங்களை நவம்பர் மாதத்துக்கு பின் மேற்கொள்ள கூடாது என எச்சரிக்கையும் விடுத்தது. இந்நிலையில், ஐநா சபை பொதுக்கூட்டத்தின் ஒரு பகுதியாக ...
Read More »தியாகி திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி!
தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நிறுத்தும்படி யாழ். காவல்துறையினர் தாக்கல் செய்திருந்த கோரிக்கை மனுவை யாழ்.நீதிவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது எனவும் திட்டமிட்டபடி நாளை நல்லூரில் தியாக தீபம் திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல் இடம்பெறவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் , ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். நல்லூரில் அமைந்துள்ள தியாகி தீபம் திலீபனின் நினைவு தூபியை சூழவுள்ள சுற்றுவேலிகள் மற்றும் நினைவேந்தலுக்காக போடப்பட்டுள்ள கொட்டகைகள் மற்றும் உருவப்படங்களை அகற்றும்படியும், நினைவேந்தலை நிறுத்தும்படியும் மாநகரசபை ஆணையாளருக்கு அவசர உத்தரவினை வழங்குமாறு யாழ். ...
Read More »ஆஸ்திரேலிய விவசாயிகளைப் பாதித்த விபரீத விளையாட்டு!
ஆஸ்திரேலியாவின் உணவுத்துறை, வேளாண்மை போன்றவற்றில் சமீபகாலத்தில் எழுந்துள்ள மிகப்பெரிய பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது இது ஸ்ட்ராபெர்ரி பழம் சாப்பிடும் அனைவரையும் அச்சுறுத்தியிருக்கிறது கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் நடந்த சம்பவம் ஒன்று. ஆஸ்திரேலியாவின் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் உலகம் முழுக்க பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுபவை. அப்படித்தான் நியூசிலாந்துக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. அங்கிருந்து பல்வேறு சூப்பர் மார்க்கெட்களுக்கும் சென்றிருக்கின்றன. வாடிக்கையாளர் ஒருவர் நியூசிலாந்தின் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஸ்ட்ராபெர்ரி பழம் வாங்கியிருக்கிறார். அதனை வீட்டுக்குச் சென்று சாப்பிடப் பார்த்தவருக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. அந்தப் பழத்தைக் கடித்தபோது அதனுள்ளே ...
Read More »லெப்.கேணல் தியாகி திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவு வணக்க ஒழுங்கு!
தியாகி திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நாளுக்கான ஏற்பாடுகள்குறித்து முன்னாள் போராளிகள், துயிலுமில்ல நடவடிக்கையில் ஈடுபடுவோர், பல்கலைக்கழக சமூகத்தினர் ,ஊடகவியலாளர்கள் அடங்கலாக உள்ள தமிழ் உணர்வாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் பின்வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன என திலீபன் நினைவு நாள் நிகழ்வுகள் தொடர்பில் முன்னாள் மூத்த போராளி மனோகர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது. மாவீர்ர் குடும்பத்தைச் சேர்ந்த மாறனின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுகளின் முதன்மைச் சுடரை தீவகத்தைச் சேர்ந்த இரு மாவீர்ர்களின் தந்தை ஏற்றுவார். தொடர்ந்து அங்கு ...
Read More »எனக்கு ஒரு பென்சிலே போதும்!- எழுத்தாளன் மன்டோ
உலகின் மிகப்பெரிய மக்கள் புலம்பெயர்தலை இரத்தமும் சதையுமாக தன் படைப்புகளில் படைத்த எழுத்தாளன் மன்டோ. ஓர் அரசியல்வாதியின் வாழ்க்கையை, விளையாட்டுவீரரின் வாழ்க்கையை, நடிகரின் வாழ்க்கையை `பயோபிக்’ திரைப்படமாக மாற்றுவதைவிட எழுத்தாளனின் வாழ்க்கையை சினிமாவாக மாற்றுவது சவாலானது. சினிமாவுக்குப் பொருந்தும் மற்ற துறைகளின் சாதனையாளர்களின் வாழ்க்கை, எழுத்தாளனுக்குப் பொருந்தாது. எழுத்தாளனைப் பாதிக்கும் நிகழ்வுகளையும், அவை வார்த்தைகளாக உயிர் பெறும் நேரங்களையும் எந்த கேமராவாலும் பதிவுசெய்ய முடியாது. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்து 70 ஆண்டுகளைக் கடந்தும், இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை தேசப்பற்றின் ...
Read More »இம்ரான் கானை தகுதிநீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி!
இம்ரான் கான் மீதான தகுதிநீக்க மனுவை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவரும், தற்போதைய பிரதமருமான இம்ரான் கானை தகுதிநீக்கம் செய்யுமாறு கடந்த ஆண்டு மே மாதம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அவர் எம்.பி.யாக இருந்தார். அந்த மனுவில் எம்.பி. மனுத்தாக்கலின் போது அவர் தனது பிள்ளையின் பெயரை குறிப்பிடவில்லை இதனால் அவர் அரசின் விதிமுறைகளுக்கு உண்மையாக இல்லை என குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி இஜாசுன் அஹ்சான் ...
Read More »