தன்னுடலை வருத்தி நீர்கூட அருந்தாது, தன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின் 31ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு, செப்ரம்பர் மாதம் 28ஆம் நாள் வெள்ளிக்கிழமை மெல்பேணில் இடம்பெறவுள்ளது.
ஆயுதந்தரித்து களமாடிய விடுதலைப் போராளியான திலீபன், காந்தி தேசத்திடம் தமிழீழ மக்களுக்காக நீதிகோரி சாத்வீக வழியில் போராடினான். அடிப்படையான ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் மேற்கொண்ட பயணம் எமது விடுதலைப் போராட்டத்தில் உன்னதமான அர்ப்பணிப்பாகியது.
பன்னிருநாட்கள் தன்னை உருக்கி உருக்கி எரிந்தணைந்த அந்தத் தியாக தீபத்தின் நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். ஆண்டுதோறும் நடைபெறுவதைப் போல் இம்முறையும் தியாகதீப கலைமாலை என்ற தாயகப்பாடல்களின் இசைநிகழ்வும் இடம்பெறும்.
இடம்: St Judes Hall, 49 George St, Scoresby,
காலம்: 28/09/2017 (Public Holiday) வெள்ளிக்கிழமை மாலை 6 மணி.
தொடர்பு: 0433 002 619 நிகழ்வு ஏற்பாட்டுக்குழு, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – விக்ரோறியா.