குமரன்

தனியயார் காணியில் இராணுவம் விவசாய செய்கை!

வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் இராணுவத்தினர் விவசாயம் செய்து வருவதாக வவுனியா நகரசபை மற்றும் வவனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவர்களிடம் காணி உரிமையாளர் முறையிட்டதையடுத்து குறித்த காணியை அவர்கள் பார்வையிட்டுள்ளனர். யுத்த காலத்தில் 5 ஏக்கர் வயல் காணியை பாதுகாப்புக் காரணங்களுக்காக தமது கட்டுப்பாட்டில் எடுப்பதாகவும் அதற்காகா 25 ஆயிரம் ரூபா தருவதாகவும் தெரிவித்து உரிமையாளரிடம் இருந்து குறித்த காணியை இராணுவம் அபகரித்ததாக தெரிவித்த நகரசபை தலைவர் தற்போது குறித்த காணியில் இராணுவத்தினர் நெல் விதைப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். ...

Read More »

மஹிந்தவின் அடுத்த நகர்வு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளார்.   கொழும்பு விஜயராம மாவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் முன்னிலையி‍லேயே அவர் இந்த உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளார். இதேவளை நாமல் ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Read More »

ஆஸ்திரேலிய ஆஸ்பத்திரியில் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்!

ஒட்டிப்பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் ராயல் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் டாக்டர் ஜோ கிராமெரி தலைமையில் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக பிரித்தனர். பூடான் நாட்டை சேர்ந்தவர் பூம்சு ஜாங்மோ. இந்த பெண்ணுக்கு 15 மாதங்களுக்கு முன்னர் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. ஆனால் அவை வயிற்றால் ஒட்டிப்பிறந்தன. நிமா, தவா என்று பெயரிட்டு வளர்க்கப்பட்டு வந்த இந்தக் குழந்தைகள், எதைச்செய்தாலும் சேர்ந்தே செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில், ஒரு தொண்டு ...

Read More »

தீவிர வலதுசாரி நாடாகும் பிரேசில்!

பிரேசிலின் புதிய அதிபராக 2019 தொடக்கத்தில் பதவியேற்கிறார் ஜெய்ர் பொல்சொனாரோ. ஒரு ஜனநாயக நாட்டில் பதவிக்கு வந்த வலதுசாரிகளிலேயே இவர்தான் அதிதீவிரமானவராக இப்போதைக்குக் கருதப்படுகிறார். பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, ஹங்கேரியைப் பின்பற்றி பிரேசிலிய மக்களும் வலதுசாரித் தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். பொல்சொனாரோவை, ‘பிரேசிலின் டிரம்ப்’ என்றே அழைக்கின்றனர். இதில் உண்மையும் இருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதார்தேவைப் போல இவரும், சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க வன்முறைதான் கை கொடுக்கும் என்று நம்புகிறார். அதிபர் தேர்தல் முடிவு வெளியான உடனேயே பிரேசில் நாட்டு ராணுவம் ...

Read More »

ஃபேஸ்புக் லேசோ ஆப் வெளியானது!

டிக்டொக் செயலிக்கு போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனம் லேசோ எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. டிக்டொக் (மியூசிக்கலி) செயலிக்கு போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனம் லேசோ என்ற பெயரில் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. புதிய லேசோ ஆப் நகைச்சுவை ஏற்படுத்தும் சிறிய வீடியோக்களை பதிவு செய்து அவற்றை செயலியில் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. புதிய செயலி மூலம் ஃபேஸ்புக் புதிய வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் நோக்கில் அறிமுகமாகி இருக்கிறது. லேசோ ஆப் கொண்டு பாடல்கள் மற்றும் வீடியோக்களுக்கு லிப்-சின்க் செய்யும் வசிதயும் வழங்கப்படுகிறது. வைன்ஸ் ...

Read More »

நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்பட வில்லை!-விஜேதாச ராஜபக்ஷ

நடைமுறையிலுள்ள நாடாளுமன்றத்துடன் நாட்டின் செயற்பாடுகளை தொடந்தும் முன்னெடுக்க முடியாது என ஜனாதிபதி கருதுவாராக இருந்தால் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் என தெரிவித்த  ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ , 19 அரசியலமைப்பில் எந்தவொரு இடத்திலும் நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்பட வில்லை எனவும்  தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Read More »

ஆஸ்திரேலியா- அமெரிக்கா அகதிகள் ஒப்பந்தம்: மீள்குடியேற்றத்தில் நிராகரிக்கப்படும் அகதிகள்

மனுஸ்தீவில் அமைந்திருக்கும் ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் உள்ள அகதிகள், கடந்த 2016ல் ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையே கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவில் மீள்குடியேறுவதற்காக விண்ணப்பித்து வருகின்றனர். சமீபத்தில், இப்படி விண்ணப்பித்த 72 சதவீதமான அகதிகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது. தற்போது விண்ணப்பித்த 32 அகதிகளில் 9 பேர் விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்த 9 பேரில் 4 ரோஹிங்கியா, 3 ஆப்கானியர், 2 பாகிஸ்தானியர் மற்றும் 1 ஈழத்தமிழர் எனக்கூறப்படுகின்றது. இதுவரை நவுரு முகாமிலிருந்து 300 அகதிகளும்  மனுஸ்தீவிலிருந்து 167 அகதிகளும் என 467 ...

Read More »

பொறுமையாக இருங்கள்!-மஹிந்த தேசப்பிரிய

மாகாண சபையை எதிர்பார்த்திருந்த எமக்கு நாடாளுமன்ற தேர்தலே கிடைத்துள்ளது. அதற்காக தேர்தலை நடத்தமால் விட இயலாது. எவ்வாறாயினும் தற்போது காணப்படுகின்ற நிலைமைகளை கவனத்தில் கொண்டு அரசியலமைப்பு சட்டத்தின் பிகாரமே நாடாளுமன்ற தேர்தலை நடத்தப்படும் என  சுயாதீன தேர்தல்கள்  ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.மேலும் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு சுமார் 500 கோடி வரை தேவைப்படும் . எதுவாக இருந்தாலும் பொறுமையாக தீர்மானிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். பொது தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனைகள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ...

Read More »

சூரியாவும் நானும் இணைந்து நடிக்கக் காத்திருக்கிறோம்!-ஜோதிகா

திருமணத்துக்குப் பிறகு, பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்துவருகிறார் ஜோதிகா. இந்தியில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தும்ஹாரி சுலு’ படத்தின் தமிழ் மறுஆக்கமான ‘காற்றின் மொழி’ படத்தில் நடித்திருக்கிறார் ஜோதிகா. மீண்டும் இயக்குநர் ராதாமோகனோடு கூட்டணி, சூர்யாவின் ஆதரவு எனப் பல விஷயங்கள் பற்றி ஜோதிகாவுடன் உரையாடியதிலிருந்து… ‘காற்றின் மொழி’யில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? அப்படத்தில் சொல்லப்பட்டு இருக்கும் மெசேஜ் பிடித்திருந்தது. பெண்களை மையப்படுத்தி நகரும் படங்கள் கனமான உள்ளடக்கத்துடன் இருக்கும். இது எளிய ஒன்றாக இருந்தது. கணவன் – மனைவி உறவை ...

Read More »

‘சென்னையில் சாதாரண வீட்டில்தான் வளர்ந்தேன், தரையில் படுத்து தூங்கினேன்’! கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை

என் இளமைக் காலத்தில் சென்னையில் சாதாரண வீட்டில்தான் வளர்ந்தேன், தரையில்தான் படுத்துத் தூங்கினேன் என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், இந்தியரும் தமிழகத்தைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, சென்னையில் பிறந்து வளர்ந்தவர். பள்ளிப்படிப்பை முடித்த சுந்தர் பிச்சை காரக்பூர் ஐஐடியில் பட்டப்படிப்பையும், அதன்பின் அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திலும் முதுநிலைப் பட்டம் பயின்றார். அதன்பின் பென்சில்வேனியா வார்டன் பள்ளியில் எம்.பி.ஏ. பட்டத்தையும் சுந்தர் பிச்சை பெற்றார். கடந்த 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த ...

Read More »