ஃபேஸ்புக் லேசோ ஆப் வெளியானது!

டிக்டொக் செயலிக்கு போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனம் லேசோ எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.

டிக்டொக் (மியூசிக்கலி) செயலிக்கு போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனம் லேசோ என்ற பெயரில் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.
புதிய லேசோ ஆப் நகைச்சுவை ஏற்படுத்தும் சிறிய வீடியோக்களை பதிவு செய்து அவற்றை செயலியில் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. புதிய செயலி மூலம் ஃபேஸ்புக் புதிய வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் நோக்கில் அறிமுகமாகி இருக்கிறது.
லேசோ ஆப் கொண்டு பாடல்கள் மற்றும் வீடியோக்களுக்கு லிப்-சின்க் செய்யும் வசிதயும் வழங்கப்படுகிறது. வைன்ஸ் போன்று செயலியில் சிறிய வீடியோக்களையும் பதிவு செய்யலாம். ஐ.ஓ.எஸ். மற்றும் ஆன்ட்ராய்டு இயங்குதளங்களில் இந்த செயலி கிடைக்கிறது.
லேசோ செயலியில் இன்ஸ்டாகிராம் மூலம் சைன்-இன் செய்தோ அல்லது ஃபேஸ்புக் மூலம் புதிய அக்கவுன்ட் ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். செயலியை பயன்படுத்த ப்ரோஃபைல் பக்கம், புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை பயன்படுத்த செயலிக்கு அனுமதி வழங்க வேண்டும்.
விரைவில் லேசோ வீடியோக்களில் ஃபேஸ்புக் ஸ்டோரி, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் உள்ள வீடியோக்களை பயன்படுத்தும் வசதி விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயலியில் உங்களது ப்ரோஃபைலை பிரைவேட் ஆக வைக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.