குமரன்

இந்தியா தாக்கினால் தக்க பதிலடி கொடுங்கள்: இம்ரான்கான்

இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள் என்று பாகிஸ்தான் ராணுவத்துக்கு அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கான் கட்டளையிட்டு உள்ளார். கா‌ஷ்மீர் மாநிலம் புலவாமாவில் துணை ராணுவ படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 40 பேர் இறந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா மட்டுமின்றி உலக தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்‌ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு தான் காரணம் என இந்தியா குற்றம் சாட்டியது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் ...

Read More »

11 இளைஞர்கள் காணாமல் போன சம்பவம்! கடற்படை வீரர் கைது!

2008/2009ம் ஆண்டு காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் வீரர் ஒருவரே குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். ரத்கம பிரதேசத்தைச் ​சேர்ந்த 41 வயதுடைய கடற்படை வீரரரே கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட இளைஞர்களில் மூன்று இளைஞர்களை தடுத்து வைத்து சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் குறித்த கடற்படை வீரர் நேற்று இரவு கைது ...

Read More »

19வது திருத்தம் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாம்!

தூய்மையான அரச நிர்வாகத்திற்காக தன்னால் உருவாக்கப்பட்ட 19வது திருத்தம் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  தெரிவித்தார். 2015 ஜனவரி 08ஆம் திகதி தனது தேர்தல் பிரகடனத்தில் இந்த நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கு ஏற்ப மிகவும் தூய்மையான எண்ணத்துடனும் பல்வேறு எதிர்பார்ப்புகளுடனும் நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களில் 215 பேரின் ஆதரவுடன் அரசியலமைப்பின் 19வது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை மைத்ரி நினைவுகூர்ந்தார். நேறறு (21) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அரசியலமைப்பு சபை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே 2015 ஜனவரி 08ஆம் திகதி ...

Read More »

தமிழில் நகைச்சுவை எழுத்துக்குத் தேவை இருக்கிறது!- பேயோன்

பேயோன்! தமிழ் எழுத்தாளர்களின் மறைத்துவைக்கப்பட்ட அல்லது புதைத்துவைக்கப்பட்ட மனசாட்சி என்று அவர் நம்புகிறார் என்று நமக்குத் தோன்றலாம். ஆனால், தான் யாருடைய பேயோனும் (Ghost-writer) இல்லை; என்னுடைய பேயோன்தான் என்று சொல்லக் கூடியவர். ‘பேயோன் 1000’ என்ற இவரது நூல்தான் அநேகமாக ட்விட்டர் பதிவுகளின் தொகுப்பாக வெளிவந்த முதல் நூலாக இருக்கக் கூடும். இவரது எதிர்கவிதைகள்(!) ‘வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை’ என்ற பெயரில் முழுத் தொகுப்பாக வந்திருக்கின்றன. பேயோன் கணிசமான மின்னூல்களும் வெளியிட்டிருக்கிறார். பேயோனின் வலைப்பூ முகவரி: www.writerpayon.com யாருடைய பேயோன் (ghost-writer) ...

Read More »

‘எனக்கும் கிராமத்து வாழ்க்கை நல்லா தெரியும்!-உதயநிதி ஸ்டாலின்

அரசியல் களத்தில் தீவிரமாகப் பணியாற்றி வரும் வேளையிலும் சீனு ராமசாமி இயக்கத்தில் தான் நடித்துள்ள ‘கண்ணே கலைமானே’ படத்தை விளம்பரப்படுத்தும் ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். அடுத்த கட்ட அரசியல் பிரச்சாரத்துக்குத் தயாராகி கொண்டிருந்தவரிடம் பேசியதில் இருந்து தொடங்குகிறது வெளிச்ச உரையாடல். ‘கண்ணே கலைமானே’ படத்தின் மூலம் என்ன சொல்லியுள்ளீர்கள்? இது அழுத்தமான கிராமத்து கதை. அழகான அன்பை, குடும்ப உறவு களின் உன்னதத்தை சொல்லும். கமலக் கண்ணன் என்ற விவசாயியாக, மண் புழு உற்பத்தி செய்பவராக வருகிறேன். நிஜத்தில் நான் ...

Read More »

உலகின் தலைசிறந்த ஆசிரியராக அவுஸ்ரேலிய தமிழ் பெண்!

உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்தமிழச்சியான யசோதை செல்வக்குமாரன் தெரிவாகி உலகத் தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக 179 நாடுகளிலிருந்து பத்தாயிரத்துக்கும் அதிகமான பரிந்துரைகளின்படி ஒரு மில்லியன் அமெரிக்க டொடலர் பரிசுத் தொகையானது யசோதைக்கு கிடைத்துள்ளது. மேலும் அவரது மாணவர்களுக்கு ‘MS Selva’ என இவர் நன்கு அறியப்படுவதாக சர்வதேச ஊடகமொன்றில் கூறப்பட்டுள்ளது.

Read More »

தாய் மொழி இல்லையேல் தாய் நாடுமில்லை!

மாசி 21, உலக தாய் மொழி தினம் இன்றாகும். தாய்மொழி மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வரும் ஈழத் தமிழர்களுக்கு இது மிக முக்கியமானதொரு நாளாகும். தாய் மொழி என்பது ஒவ்வொரு மனிதரதும் பிறப்புரிமை. அதனை அதனை மனிதர்கள் தம் தாய் வழி சமூகத்திடமிருந்து கற்றுக்கொள்ளுகின்றனர். மொழியற்று பிறக்கும் ஒரு குழந்தை தன் தாயிடமிருந்து மொழியை பெறுகிறது. தாய் மொழியின் ஊடாக தன்னுடைய பண்பாட்டை, வரலாற்றை, வாழ்வை கற்றுக்கொள்வது எளியது என்பதால் ஒவ்வொருவருக்கும் தாய்மொழி மிக முக்கியமாகிறது. தாய்மொழியை எவரும் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த ...

Read More »

அகதிகளின் மருத்துவ உதவிகள் தொடர்பாக புதிய அறிவிப்பு !

அகதிகளின் மருத்துவ உதவிகள் தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் Peter Dutton வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் நவுறு மற்றும் மனுஸ் தீவுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகள் தங்கள் மருத்துவ உதவிகளை மேற்கொள்ள அவுஸ்திரேலியாவின் சில நகரங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவ உதவிகள் தொடர்பாக இனிமேல் கிறிஸ்துமஸ் தீவுக்கு அவர்கள் செல்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக 1 பில்லியன் டொலர் செலவில் கிறிஸ்துவ முகாமில் வசதிகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவ உதவிகளையும் தாண்டி மேற்கொண்டு வசதிகள் ஏதும் தேவைப்பட்டால் ...

Read More »

கைதானவர்களிடமிருந்து ஆயுதம் மீட்பு!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை கைது செய்துள்ள யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு விசேட காவல் துறை  அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் மீட்டுள்ளனர். கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வாள்வெட்டுக் கும்பலொன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாக்குதல் நடத்துயிருந்தது. இதன் போது அங்கிருந்த வாகனங்களும் எரிந்து நாசமாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் காவல் துறை விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இந் நிலையில் யாழ். மாவட்ட விசேட குற்ற ...

Read More »

சி.ஆர்.டி. மையத்திற்கு சிறிலங்கா இராணுவத் தளபதி விஜயம்!

பாதுகாப்பு அமைச்சினால், பாதுகாப்பு தொடர்பான நவீன இராணுவ ஆயுத தயாரிப்பு, புதிய தொழில்நுட்ப பொருட்கள் மற்றும் அனைத்து பிற உபகரணங்களின் உற்பத்திக்களுடன் ஹோமகம, பிட்டிபணயில் அமைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்திற்கு (சி.ஆர்.டி), இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க நேற்றைய தினம் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். சி.ஆர்.டி மையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற முன்னாள் பிரிகேடியர் டிரான் டி சில்வா, இராணுவ தளபதிக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய இராணுவ தளபதி இந்த நிலையத்தை பார்வையிடுவதற்கு வருகை தந்தார். மின்னணு பிரிவு, தொழில்நுட்ப ...

Read More »