நடிகர் தினேஷ் நடிகை ஆனந்தி இயக்குனர் அதியன் ஆதிரை இசை டென்மா ஓளிப்பதிவு கிஷோர் மகாபலிபுரம் பீச்சில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று கரை ஒதுங்குகிறது. இதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியடைய, போலீசார் இதை கைப்பற்றி காவல் நிலையத்தில் வைக்கிறார்கள். அங்கிருந்து திருடப்பட்டு சென்னையில் நாயகன் தினேஷ் வேலை செய்யும் இரும்பு குடோனுக்கு வருகிறது. குண்டு திருடு போனதை அறிந்த போலீசார், அதை ஒரு பக்கமும், போலீசுக்கு முன்பு அதை கண்டுப்பிடித்து மக்களிடையே ஆபத்தை நிரூபிக்க சமூக நல மாணவர்கள் ஒரு பக்கமும் தேடுகிறார்கள். ...
Read More »குமரன்
இலக்கின்றி தேர்தலில் போட்டியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
பொதுத் தேர்தலிலும் மாகாணசபைத் தேர்தலிலும் எவ்வித இலக்கும் இன்றி மறைமுகமாக பிரிதொரு வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் நோக்கில் போட்டியிடும் வேட்பாளர், கட்சிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்து வருவதாக அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அத்துடன் கட்டுப்பணத்தை அதிகரிப்பது தொடர்பில் இது வரையில் முடிவெதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மறைமுகமாக பிரிதொரு வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் நோக்கில் பெரும்பாலான வேட்பாளர்கள் செயற்பட்டதாக ஆணைக்குழு இனங்கண்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. அடுத்த ...
Read More »இராணுவ ஆக்கிரமிப்பு எனக்கூறுவது முற்றிலும் பொய்யானதாம்!
இலங்கை இராணுவம் பொதுமக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்கின்றது என சர்வதேச புலம்பெயர் அமைப்புகளும் இலங்கையில் சிலரும் முன்வைக்கும் காரணிகள் உண்மைக்கு புறம்பான முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய கருத்தாகும். அத்துடன் கடந்த ஆட்சிக் காலத்தில் இராணுவ அதிகாரிகளை சிறையில் அடைக்கப்பட்ட காரணிகள் கண்டிக்கத்தக்க காரணிகள் என்கிறார் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன. இஸ்லாமிய மதத்தின் பெயரில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் போன்றதொரு சம்பவம் இடம்பெற இராணுவம் இடமளிக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினர். ஸ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையத்திற்கு பாதுகாப்பு செயலாளரான ஓய்வு ...
Read More »மூச்சுத் திணறலை எதிர்கொண்டுள்ள சிட்னி மக்கள்!
அவுஸ்திரேலியாவில் உண்டான காட்டுத் தீ காரணமாக சிட்னியில் காற்றின் தரமானது பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதுடன், அப் பகுதி புகை மண்டலமாகவும் மாறியுள்ளது. இதனால் சிட்டினியின் பிரபல அடையாளங்களும் மறைக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள மக்கள் மூச்சுத் திணறலை எதிர்கொண்டுள்ளனர். மேலும் சிறுவர்களும், வயோதிபர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்டிருந்த சுமார் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட சிட்னி நகரில் காற்றின் தரம் இன்றைய தினம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் பகல் ...
Read More »யோகிபாபுக்கு குரல் கொடுத்த பூவையார்!
தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள படத்திற்கு பூவையார் பாடல் ஒன்றை பாடியுள்ளார். சமீபத்தில் வெளியான யோகிபாபு மற்றும் சேது நடித்த 50 /50 திரைப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக ஒளித்து கொண்டு இருக்கிறது, படத்தில் மொத்தம் 6 பாடல்கள், அதிலும் குறிப்பாக யோகிபாபு பாடும் கோலமாவ் கோகிலா என்ற பாடலை பூவையார் பாடியுள்ளார். இந்த வருடத்தின் சிறந்த பாடல் வரிசையில் இணைந்துள்ளது, படமும் அதே போன்று சிறப்பாக வந்துள்ளதாக படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சாய் ...
Read More »2,000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் தமிழர் குலம்!
சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சமூகம் இருப்பதாக தமிழர் பாரம்பரியத்தின் அதிகம் அறியப்படாத அம்சங்களை ஆராயும் புதிய புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. உலகம் தோன்றி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகி விட்டன. புற்களும் பூச்சியினங்களும் மட்டுமே முதலில் கிரகத்தில் இருந்தன. பரிணாம வளர்ச்சி அடைய அடைய குரங்கிலிருந்தே மனிதன் வந்தான் என அறிவியலாளர்கள் கூறிவருகின்றனர். ஆனால், கடவுள் மனிதரை படைத்தார், படைத்தவன் ஒருவன் உள்ளான் என்கின்றனர் மற்றொரு சார்பினர். மனித குலம் எங்கே, எவ்வாறு தோன்றியது? எவ்வாறு நாகரீகம் வளர்ந்தது? என்ற ...
Read More »அபிவிருத்தி அரசியல்!
அதிகாரப் பகிர்வு, அரசியல் தீர்வு என்ற வட்டத்தில் இருந்து தமிழ்த்தரப்பு வெளியில் வரவேண்டிய நிர்ப்பந்தம் எழுந்துள்ளது. அரசியல் தீர்வு காண்பது அவசியம்; மிக மிக அவசியம். அந்த வகையில் அரசியல் தீர்வின் மூலம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அரசியல் தீர்வே முடிவானது என்ற வட்டத்தில் தமிழ்த் தலைமைகள் மூழ்கி இருந்தன. இந்த அரசியல் நம்பிக்கையை தமிழ்த் தரப்பு யுத்தத்திற்கு முன்னரும் கொண்டிருந்தது. பின்னரும் பற்றியிருந்தது. இறுக்கமாகப் பற்றியிருந்தது. இந்த நம்பிக்கை மீதான பற்றுதலே, இணக்க அரசியலில் இருந்து விலகி, ...
Read More »ஆஸ்திரேலியாவை எச்சரிக்கிறார் இயன் சேப்பல்!
எங்கள் மண்ணில் இரண்டு பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுங்கள் என கோரிக்கை விடுத்துள்ள ஆஸ்திரேலியாவை எச்சரித்துள்ளார் இயன் சேப்பல். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரண்டு போட்டிகளில் பகல்-இரவு டெஸ்டில் விளையாட வேண்டும் என்று இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பிசிசிஐ தலைவர் கங்குலி பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு ஆதரவு தெரிவித்து வந்தாலும், ஒரே தொடரில் இரண்டு போட்டிகள் என்பது கொஞ்சம் அதிகப்படியானது என்று தெரிவித்திருந்தார். ...
Read More »வெள்ளைத் தீவில் எரிமலை வெடிப்பு – 5 பேர் பலி, பலர் மாயம்!
நியூசிலாந்து நாட்டின் வெள்ளைத் தீவில் எரிமலை வெடித்ததில் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் 5 பேர் உயிரிழந்தனர். நியூசிலாந்து நாட்டின் வகாடனே நகரில் இருந்து கடலுக்குள் சுமார் 50 கி.மீ தொலைவில் வெள்ளைத் தீவு உள்ளது. இந்த தீவில் சில எரிமலைகள் உள்ளன. பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு சுற்றுலாப்பயணிகள் எரிமலையை பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், வெள்ளைத் தீவில் உள்ள எரிமலை திடீரென இன்று வெடித்ததில் அங்கு சென்றிருந்த சுற்றுலாப்பயணிகள் 5 பேர் உயிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். மேலும் சுற்றுலாப்பயணிகள் பலரை காணவில்லை என அதிகாரிகள் ...
Read More »நியூஸிலாந்தில் குமுறத் தொடங்கியுள்ள எரிமலை!- அவசர நிலை பிரகடனம்!
நியூஸிலாந்தின் வடக்கே அமைந்துள்ள ‘White Island’ என்ற தீவிலுள்ள எரிமலையொன்று இன்று அதிகாலை முதல் வெடித்து, குமுறத் தொடங்கியுள்ளமையினால் அப் பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து அந் நாட்டு பிரதமர் ஜசிந்த ஆர்டெர்ன், எரிமலையானது வெடித்து, குமுற ஆரம்பித்த வேளையில் ‘White Island’ இல் அல்லது அதனை அண்மித்த பகுதியில் 100 சுற்றுலாப் பயணிகள் இருந்துள்ளதாகவும் மேலும் பலர் கணக்கெடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். எரிமலை வெடித்து, குமுற ஆரம்பித்த நேரத்தில் ...
Read More »