குமரன்

அவுஸ்திரேலிய தீவிரவாதியின் தாய் தலைமறைவு!

நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதியின் தாயும் சகோதரியும் தலைமறைவானதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், முதன்முறையாக அவனது தாயின் புகைப்படம் வெளியாகியுள்ளது. பிரெண்டன் என்னும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தீவிரவாதி, நியூஸிலாந்து மசூதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்திய செய்திகள் அவனது தாயாராகிய ஷாரனுக்கு தெரிவிக்கப்பட்டபோது, அவர் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். உடனடியாக பள்ளியை விட்டு புறப்பட்ட அவர், தனது மகளுடன் மறைவிடம் ஒன்றிற்கு சென்றுவிட்டதாக தெரியவந்தது. பின்னர் அவரும் பிரெண்டனின் சகோதரியான லாரனும் வசித்த வீடுகளில் பொலிசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது உடனிருப்பதற்காக ...

Read More »

இன்று முன்னாள் கடற்படைத் தளபதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்…!  

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, வாக்குமூலம் வழங்குவதற்காக சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். மார்ச் மாதம் 11 ஆம் திகதி அவரிடம் சுமார் 8 மணி நேர விசாரணை இடம்பெற்றிருந்த நிலையில் மார்ச் மாதம் 13 ஆம் திகதி இரண்டாவது நாளாகவும் அவரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டது. இந்நிலையில் இன்று (19) மூன்றாவது தடவையாக வாக்கு மூலம் வழங்குவதற்காக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு ...

Read More »

சுவரொட்டிகள் ஒட்டுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் – கட்டடங்களின் மதில்களில் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் அறிவித்துள்ளார். விளம்பர சுவரொட்டிகளை விளம்பரப் பலகைகளில் மட்டுமே ஒட்ட முடியும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், மேலதிகமாக விளம்பரப் பலகைகள் தேவைப்படுவோர் விண்ணப்பத்தால் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: யாழ்ப்பாண மாநகர எல்லைக்குள் விளம்பரங்களை காட்சிப்படுத்தும் நிறுவனங்கள், பொது அமைப்புக்கள், தனியார் வர்த்தக ...

Read More »

மசூதிகளில் மக்களை கொன்ற பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன் – நியூசிலாந்து பிரதமர்

மசூதிகளில் பயங்கரவாத தாக்குதலை நடத்திய பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா கூறியுள்ளார். நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 49 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலையடுத்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக பிரதமர் ...

Read More »

பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனாகும் கார்த்தி

மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, விஜயசேது பதி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய் என பல நடிப்ப தாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், கார்த்தி நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இப்படத்தில் பொன்னியின் செல்வனான ராஜராஜ சோழன் வேடத்தில் நடிக்கப்போவது விக்ரம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது வந்தியத் தேவன் வேடத்தில் கார்த்தி நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களுக்குமே சரித்திர ...

Read More »

புற்றுநோயில் இருந்து மீண்ட வைஷ்ணவி பூவேந்திரன்

பட்டுப்புடவை, அலங்காரம், நெற்றிச்சூடி, ஆரம் நெக்லஸ் என நகைகள் அணிந்து முகத்தில் நாணச் சிரிப்புடன் புகைப்படத்தில் மணப்பெண் இருப்பார். இந்த மணப்பெண்ணும் இதுபோன்ற எல்லா அலங்காரங்களுடன் காணப்பட்டாலும் தலையலங்காரம் மட்டும்தான் இல்லை. நாணச் சிரிப்புக்கு பதிலாக தன்னம்பிக்கையுடன் கூடிய புன்னகை, கை கால்களில் மருதாணி சிவப்பு, உதட்டில் லிப்ஸ்டிக் சிவப்பு, செந்நிறப் புடவை என அழகாக தோற்றமளித்தாலும், தலையில் முடி இல்லாதது ஒரு குறையாக தெரிகிறதா? இந்த மணப்பெண்ணின் தலையில் மட்டும் மலர்கள் இல்லை என நினைக்கவேண்டாம், இந்தப் பெண் கடந்து வந்த பாதையும் ...

Read More »

நெதர்லாந்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலர் காயம்!

நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் டிராம் வண்டியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் காயம் அடைந்துள்ளனர். நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் இன்று காலை வேலைக்கு செல்ல டிராம் வண்டியில் பலர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, டிராம் வண்டிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார். அதன்பின் அங்கிருந்து தப்பிச்சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த காவல் துறை  காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள ...

Read More »

எமது விருப்பத்திற்கு மாறாக நாம் ஆளப்படுகிறோம்!

பிரிக்க முடியாத, பிரிபடாத ஒருமித்த நாட்டிற்குள் நியாயமான ஒரு அரசியல் தீர்வினையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழ் மக்கள் தமது சொந்த வரலாற்றையும் பாரம்பரியங்களையும் கொண்ட தனித்துவமான மக்கள் என்றும், நாங்கள் கேட்பது எமது அடிப்படை உரிமைகளையே என்றும் இன்று இந்த நாட்டில் எமது விருப்பத்திற்கு மாறாக நாம் ஆளப்படுகிறோம் என்பதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கை வந்துள்ள ஐ.நா.வுக்கான முன்னாள் அரசியல் பிரிவின் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மனிடம் எடுத்துரைத்துள்ளார்.   சிறிலங்கா  வந்துள்ள ஐ.நா.வுக்கான முன்னாள் அரசியல் பிரிவின் ...

Read More »

தனியார்த் துறையினருக்கும் ரூ.2,500!

தனியார்த் துறையில் பணிபுரிவோருக்கும் 2,500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும்,  வரவு செலவு திட்ட குழு​நி​லை விவாதத்திலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More »

சர்வதேச தீர்ப்பாயத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும்!

இலங்கை அரசாங்கத்தினை பொறுப்புக்கூறலைச் செய்வதற்காக பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அல்லது சர்வதேச தீர்ப்பாயத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற எமது கோரிக்கையை கைவிடுமாறு மேற்குல நாடுகள் அழுத்தமளிக்கின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜெனீவாவில் இருந்தவாறே வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் தாங்கள் பங்கேற்றுள்ள நிலையில் இலங்கை தொடர்பில் சர்வதேச நாடுகள் நிலைப்பாடுகள் எவ்வாறாகவுள்ளன? பதில்:- இலங்கை தொடர்பான ...

Read More »