நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் டிராம் வண்டியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் காயம் அடைந்துள்ளனர்.
நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் இன்று காலை வேலைக்கு செல்ல டிராம் வண்டியில் பலர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, டிராம் வண்டிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார். அதன்பின் அங்கிருந்து தப்பிச்சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த காவல் துறை காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal