சைனோஃபாம் தடுப்பூசிகளை 2,000 ரூபாவுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் லுனாவ வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார். 50 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொவிட் தடுப்பூசி செலுத்தும் போது வழங்கப்படும் அட்டையை தயாரிப்பதற்காக பணம் பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணையின்போது தெரியவந்துள்ளது. அத்துடன், குறித்த சந்தேக நபர் மொரட்டுவ காவல்நிலையத்தில ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மொரட்டுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Read More »குமரன்
பசில், பீரிஸ், சுமந்திரன், மிலிந்த கூட்டு ஜெனிவாவுக்கான காய் நகர்த்தலா?
ஜெனிவா பேரவை அமர்வுக் காலங்களில் இவ்வாறான சந்திப்புகள் திடீர் தோசை, திடீர் இட்லி போன்று வெளியில் காட்டப்படும். ஆனால், இவை மூடப்பட்ட கதவுகளின் பின்னால் திட்டமிட்டு நடத்தப்படுபவை என்பதை தமிழ் மக்கள் கடந்த கால அனுபவங்களால் நன்றாகவே கற்றுக் கொண்டுள்ளனர். அடுத்த மாத அமர்வுக்கு முன்னர் எதற்காக இந்த அவசர சந்திப்புகள்? சர்வதேசத்தை எத்திப் பிழைக்க தமிழரைக் கட்டியணைக்கும் அதே நாடகம்தானா? இலங்கை இப்போது இருமுனைப் போரில் ஈடுபட்டுள்ளது. முதலாவது உயிரியலுடன் சம்பந்தப்பட்ட கொரோனாப் பரவல். அடுத்தது, அரசியலுடன் தொடர்புடைய ஜெனிவா நெருக்கடி. இவையிரண்டுமே ...
Read More »பாலா இயக்கத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்?
நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழில் ரஜினியுடன் ‘அண்ணாத்த’, செல்வராகவனுடன் ‘சாணிக்காயிதம்’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான ‘மகாநடி’ படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். தற்போது தமிழில் ரஜினியுடன் ‘அண்ணாத்த’, செல்வராகவனுடன் ‘சாணிக்காயிதம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர மலையாளத்தில் மோகன்லால் உடன் ‘அரபிக்கடலின் சிங்கம்’, தெலுங்கில் மகேஷ்பாபு உடன் ‘சர்காரு வாரி பாட்டா’ போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், சூர்யா தயாரிப்பில் ...
Read More »இந்தியா தனது பலவீனமான அணுகுமுறைகளால் இழந்திருக்கின்றது !
இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டு 34ஆம் ஆண்டு நிறைவையொட்டி யாழ் பல்கலைக்கழக அரசியல் துறைப் பேராசிரியர் கணேசலிங்கம் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வியின் முக்கிய பகுதிகளை இங்கே தருகின்றோம். கேள்வி? இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 34 வருடங்கள் நிறைவடைந்திருக்கின்றது. இந்த உடன்படிக்கை இப்போதும் நடைமுறையில் இருக்கின்றதா? அல்லது அது காலாவதியாகி விட்டதா? பதில்! ஏறக்குறைய இலங்கை இந்திய ஒப்பந்தம் இயல்பான போக்குகள் அல்லது அதனுடைய உள்ளடக்கங்கள், அது தொடர்பான இலங்கை இந்திய அரசுகளின் அணுகுமுறைகளை அவதானிக்கின்ற போது, பெருமளவிற்கு அதனுடைய ...
Read More »‘பாலியல் தொழில் குற்றமல்ல’- விக்டோரியாவில் சட்டம் கொண்டுவரப்படுகிறது!
பாலியல் தொழிலில் ஈடுபடுவது ஒரு குற்றச்செயல் அல்ல என்பதாக விக்டோரியாவில் சட்டமாற்றம் விரைவில் நடைமுறைக்கு வரும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன்படி விக்டோரியாவின் ஏனைய தொழில்துறையைச் சேர்ந்த பணியாளர்களுக்கு இருக்கும் உரிமைகள் பாலியல் தொழிலாளர்களுக்கும் கிடைக்கவுள்ளது. பாலியல் தொழிலாளர்களுக்கான சட்டங்களில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவருதல், பாலியல் தொழில் குறித்த பார்வையை மாற்றுதல், பாலியல் தொழிலாளர்களுக்கான சுகாதார மற்றும் நீதித்துறை சேவைகளை மேம்படுத்தல் போன்ற பணிகள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்படும் என விக்டோரிய அரசு இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. பாலியல் தொழில் ...
Read More »நோய் எதிர்ப்பு மண்டல பிரச்சினை உள்ளவர்களுக்கு கரோனா 3வது டோஸ்
நோய் எதிர்ப்பு மண்டல குறைபாடு உடையவர்களுக்கு மூன்றாவது டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்காவில் கரோனா முதல் அலையின் போது மிகப் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டது. அன்றாடம் ஒரு லட்சம் பேருக்கும் குறையாமல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இரண்டாவது அலையின் போது ஃபைஸர், மாடர்னா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதால் சற்றே பாதிப்பு தாக்குப்பிடிக்கும் அளவுக்கு இருந்தது. இந்நிலையில், மூன்றாவது அலை அங்கே வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது. பெரும்பாலானோருக்கு டெல்டா வேரியன்ட் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால், மக்களுக்கு மூன்றாவதாக கரோனா பூஸ்டர் ...
Read More »சட்டத்தினை முறையாக இயங்கவிடுங்கள்!
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்னாக்கொட குற்றவாளி அல்ல என நீதிமன்றே தீர்மானிக்கவேண்டும். மாறாக சட்டமா அதிபரோ, நீதிஅமைச்சரோ, அரசாங்கமோ தீர்மானிக்கக்கூடாது. இந்த நாட்டிலே சட்டத்தினை முறையாக இயங்கவிடுங்கள் என கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் கனகையா தவராசா தெரிவித்துள்ளார். 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்னாக்கொடவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களைத் தொடரக்கூடாது என்ற சட்டமா அதிபர் திணைக்களத்தின் முடிவைக் கண்டித்துத்து கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் க.தவராசா, கரைதுறைப்பற்று பிரதேசசபையின் ஆகஸ்ட்மாத அமர்வில் கண்டனப் பிரேரணை ...
Read More »யாழ். போதனா வைத்தியசாலையில் நிரம்பும் கொரோனா தொற்றாளர்கள்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை பொறுத்தவரை எமது இக்கட்டான நிலையை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றதென யாழ்.போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். யாழ் போதனா வைத்திய சாலையில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எமது வைத்தியசாலை தற்போதைய நிலவரத்தின்படி வைத்தியசாலையின் விடுதிகள் மற்றும் அதி தீவிர சிகிச்சை பிரிவுகள் எல்லாமே கொரோனா நோயாளிகளால் நிரம்பியிருக்கின்றன. எங்களுக்குரிய மிகக் குறைந்த வளங்களுடன் எமது சேவைகளை நாம் முன் கொண்டு செல்கின்றோம். ...
Read More »படப்பிடிப்பில் காயமடைந்த அருண் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய்க்கு படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டு இருக்கிறது. அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார். AV 33 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின் போது கையில் காயமடைந்துள்ளதாக அருண் விஜய் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருக்கிறார். மேலும் ஒரு மணி நேர ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டதாகவும், காயமடைந்ததால் உடற்பயிற்சியை அடுத்த ஐந்து நாட்களுக்கு ...
Read More »ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் ஒரு வார கால ஊரடங்கு அமல்
ஆஸ்திரேலியாவில் உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் முதல் அலையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய ஆஸ்திரேலியா தற்போது 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது. மக்கள் தொகை அதிகமுள்ள நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, குவின்ஸ்லாந்து ஆகிய மாகாணங்களை டெல்டா வகை கொரோனா வைரஸ் ஆக்கிரமித்துள்ளது. முக்கியமாக, நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னியில் டெல்டா வகை கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவிவருகிறது. அங்கு தொடர்ந்து 7-வது வாரமாக ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் ...
Read More »