நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழில் ரஜினியுடன் ‘அண்ணாத்த’, செல்வராகவனுடன் ‘சாணிக்காயிதம்’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான ‘மகாநடி’ படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.
தற்போது தமிழில் ரஜினியுடன் ‘அண்ணாத்த’, செல்வராகவனுடன் ‘சாணிக்காயிதம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர மலையாளத்தில் மோகன்லால் உடன் ‘அரபிக்கடலின் சிங்கம்’, தெலுங்கில் மகேஷ்பாபு உடன் ‘சர்காரு வாரி பாட்டா’ போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், சூர்யா தயாரிப்பில் பாலா இயக்க உள்ள புதிய படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் அவர் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal