சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்ப்பதற்கு சிறையிலுள்ளவர்களின் உறவினர்களுக்கு ஐந்து நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறைச்சாலையில் சிறைத்தண்டனை கைதிகளை உறவினர்கள் பார்ப்பதற்கு ஐந்து நாட்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு புத்தாண்டு தினத்தன்றும் அதற்கு அடுத்தநாள் மாத்திரம் உறவினர் கைதிகளை பார்ப்பதற்கு அனுமதி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த நாட்களில் ஏற்பட்ட இடையூறு காரணமாக இந்த தீர்மானத்தை எடுத்ததாக சிறைச்சாலை அதிகாரி ஜெனர் ஜயசிறி தெரிவித்துள்ளார். இதன்படி ...
Read More »குமரன்
திரிஷாவுக்காக கதை எழுதும் ஏ.ஆர்.முருகதாஸ்!
ரஜினிகாந்த் நடிக்கும் `தர்பார்’ படத்தை இயக்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸ், சரவணன் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவாகும் ஆக்ஷன் படத்திற்கான கதையை எழுதுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எங்கேயும் எப்போதும்‘ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சரவணன் தொடர்ந்து ‘இவன் வேறமாதிரி’, ‘வலியவன்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். பின்னர் கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடித்த ‘சக்ரவியூகா’ படத்தை இயக்கினார். இடையே விபத்து ஏற்பட்டதால் சில காலம் ஓய்வில் இருந்தார். தற்போது மீண்டும் இயக்குனர் பணிக்கு திரும்பி உள்ளார். முழுக்க முழுக்க நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஆக்ஷன் ...
Read More »மகிந்த வடிக்கும் நீலிக் கண்ணீர்!
கூட்டமைப்பு அரசைப் பாதுகாப்பதாகவும் தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு எதையுமே செய்வதில்லையெனவும் முதலைக் கண்ணீர் வடித்திருக்கிறார் எதிர்கட்சித் தலைவரான மகிந்த ராஜபக்ச. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கு அவர் இதுவரை என்ன செய்திருக்கிறார்? என்பதை அவர் ஒரு கணம் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. தமிழர்களுக்கு எதையும் வழங்கி விடக்கூடாது என்பதில் மகிந்த தீவிரமாக உள்ளார். புதிய அரசமைப்பின் உருவாக்கம் அடிப்பட்டுப் போனதற்கும் இவரே முதன்மைக் காரணம். இத்தகைய ஒருவர் தமிழர்களுக்கு அனுதாபம் காட்டுவதைப் போன்று நீலிக் கண்ணீர் வடிப்பதை எவருமே நம்பமாட்டார்கள். கூட்டமைப்பு ...
Read More »கோத்தாவை கையாள்வதற்காக சரத்பொன்சேகாவிற்கு முக்கிய அமைச்சு!
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பிரஜாவுரிமை குறித்த விவகாரங்களை கையாள்வதற்காக முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகாவிற்கு உள்துறை அமைச்சர் பதவியை வழங்குவதற்கு தீர்மானிக்க்ப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்கா பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற சிரேஸ்ட அமைச்சர்களி;ன் சந்திப்பில் இது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன கோத்தபாய ராஜபக்சவின் பிரஜாவுரிமை குறித்த விவகாரங்களை கையாள்வதற்காகவே சரத்பொன்சேகாவிற்கு உள்துறை அமைச்சர் பதவியை வழங்க ஐக்கியதேசிய கட்சி தீர்மானித்துள்ளது உள்துறை அமைச்சே பிரஜாவுரிமை குறித்த விபரங்களிற்கு பொறுப்பு என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் அலுலகம் சரத்பொன்சேகாவிற்கு இது குறித்து ...
Read More »நியூசிலாந்து – துப்பாக்கி சட்ட சீர்திருத்த மசோதா நிறைவேறியது!
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் துப்பாக்கி சட்ட சீர்திருத்த மசோதா நிறைவேறியது. நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த மாதம் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிசூட்டில் இந்தியர்கள் 7 பேர் உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர். உலகையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதலுக்கு பின் நியூசிலாந்தில் துப்பாக்கி பயன்பாடு மற்றும் விற்பனையில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தது. அதன்படி துப்பாக்கி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என பிரதமர் ஜெசிந்தா உறுதி அளித்தார். இதற்கிடையில் அங்கு பாதியளவு தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் தாக்குதல் ...
Read More »ஆஸ்திரேலியாவில் மே 18-ம் திகதி பொதுத்தேர்தல்!
ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 18-ம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டதால், அடிக்கடி பிரதமர்கள் மாற்றப்பட்டனர். கடந்த ஆண்டு மால்கோல்ம் டர்ன்புல் பிரதமராக பதவி வகித்தபோதும் உள்கட்சி பூசல் தொடர்ந்தது. முதலில் நடந்த ஓட்டெடுப்பில் தப்பிய அவருக்கு, மீண்டும் எதிர்ப்பு வலுத்ததால் மீண்டும் ஓட்டெடுப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது பிரதமருக்கான போட்டியில் இருந்து டர்ன்புல் விலகினார். ஸ்காட் மாரிசன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 10 ...
Read More »துறைமுக நகருக்குள் 80 ஆயிரம் வேலைவாய்ப்புகள்!
கொழும்புத் துறைமுக நகரப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதெனத் தெரிவித்துள்ள மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்க, நாட்டை விட்டு வெளியேற உள்ள துறைசார் நிபுணர்கள் 80 ஆயிரம் பேருக்கு அந்நகரில் வேலை வாய்ப்பு வழங்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்துள்ளதோடு, துறைமுக நகரப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளது. அதனை நிர்வகிக்க கொழும்பு மாநகர சபையல்லாத ஒரு தனி அமைப்பு அமைக்கப்படும். அதற்கான சட்ட மூலங்கள் தயாரிப்பு பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார். இதன்போது மேலும் ...
Read More »பிரான்ஸ் படவிழாவில் பரியேறும் பெருமாள்!
பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் பிரான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகும் வெளிநாடுகளில் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. பல விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுவரும் நிலையில், பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் திரைப்பட திருவிழாவில் திரையிடப்படுகிறது. புதிய படங்கள் தியேட்டரில் வெளியாவதற்கு முன்பே இந்த விழாவில் படங்கள் திரையிடுவது வழக்கம். ஆனால் பரியேறும் பெருமாள் படம் வெளியாகி பல மாதங்களுக்குப்பிறகு இவ்விழாவில் ...
Read More »அவுஸ்திரேலியாவில் ஊதிய உயர்வு கேட்டு பேரணி !
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள், ஊதிய உயர்வும் வேலையிடப் பாதுகாப்பும் கோரி பேரணி நடத்தியுள்ளனர். அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல் நடைபெறுவதால் பேரணி பல எதிர்பார்ப்புகளை எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சியினர் தங்களது தேர்தல் பிரசாரத்தில் ஊதிய உயர்வு, மக்களின் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தவிருப்பதாகக் கூறியுள்ளனர். “விதிகளை மாற்றவும்” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் ஊர்வலமாகச் சென்றனர். பெரும் எண்ணிக்கையில் அவர்கள் திரண்டதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
Read More »நுண்கடன் பொறிக்குள் சிக்கித்தவிக்கும் மலையகப்பெண்கள்!
இன்று பல குடும்பங்களில் பாரிய பிரச்சினைகளை உருவாக்கி விட்டிருக்கும் ஒரு திட்டமாக நுண்கடன் விளங்குகிறது. இலங்கையைப் பொறுத்தவரை சுமார் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த நுண்கடன் பிரச்சினைகளில் சிக்கி தவித்து வருகின்றன. பல குடும்பப்பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. கடந்த வருடத்திலிருந்து இது வரை இந்த நுண்கடன் திட்டத்தோடு தொடர்புடைய 170 தற்கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மலையகமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அரசாங்கம் கூடுதலாக பெரும்பான்மையினர் வசித்து வரும் மாவட்டங்களிலேயே தனது கவனத்தை திருப்புவதுடன் இதில் பாதிக்கப்பட்ட ...
Read More »