சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்ப்பதற்கு சிறையிலுள்ளவர்களின் உறவினர்களுக்கு ஐந்து நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறைச்சாலையில் சிறைத்தண்டனை கைதிகளை உறவினர்கள் பார்ப்பதற்கு ஐந்து நாட்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு புத்தாண்டு தினத்தன்றும் அதற்கு அடுத்தநாள் மாத்திரம் உறவினர் கைதிகளை பார்ப்பதற்கு அனுமதி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நாட்களில் ஏற்பட்ட இடையூறு காரணமாக இந்த தீர்மானத்தை எடுத்ததாக சிறைச்சாலை அதிகாரி ஜெனர் ஜயசிறி தெரிவித்துள்ளார்.
இதன்படி இம்மாதம் 13 ஆம் திகதியிலிருந்து 17 ஆம் திகதி வரை உறவினர்கள் சிறைச்சாலை கைதிகளை பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal