முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பிரஜாவுரிமை குறித்த விவகாரங்களை கையாள்வதற்காக முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகாவிற்கு உள்துறை அமைச்சர் பதவியை வழங்குவதற்கு தீர்மானிக்க்ப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற சிரேஸ்ட அமைச்சர்களி;ன் சந்திப்பில் இது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
கோத்தபாய ராஜபக்சவின் பிரஜாவுரிமை குறித்த விவகாரங்களை கையாள்வதற்காகவே சரத்பொன்சேகாவிற்கு உள்துறை அமைச்சர் பதவியை வழங்க ஐக்கியதேசிய கட்சி தீர்மானித்துள்ளது
உள்துறை அமைச்சே பிரஜாவுரிமை குறித்த விபரங்களிற்கு பொறுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் அலுலகம் சரத்பொன்சேகாவிற்கு இது குறித்து அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.