குமரன்

கூகுள் அரபு மொழியை மேம்படுத்தும் திட்டம்

அரேபிய மொழியை மேம்படுத்தும் திட்டமொன்றினை கூகுள் முன்னெடுக்கவுள்ளது.  இணையத்தில் அரபு மொழியின் உபயோகத்தினை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் பெயர் “Arabic Web Days” என்பதாகும். உலக சனத்தொகையில் 5% அதிகமானோர் அரேபிய மொழியை பேசுகின்ற போதிலும் இணையத்தில் வெறும் 3% குறைவான டிஜிட்டல் உள்ளடக்கங்களே ( Digital content) அரேபிய மொழியில் காணப்படுவதாகவும் கூகுள் சுட்டுக்காட்டுகின்றது. இதனால் அரேபிய மொழிப் பாவனையை அதிகரிக்க கூகுள் இத் திட்டத்தினை கூகுள் முன்னெடுக்கவுள்ளது. பல்வேறு பங்காளர்களுடன் இணைந்தே கூகுள் இதனை முன்னெடுத்து வருகின்றது. இதற்கென பல விசேட ...

Read More »

குவின்ஸ்லாந்து – தமிழ் எழுத்தாளர் விழா -2016

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை முதல் தடவையாக குவின்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்ட்கோஸ்டில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் மெல்பன், சிட்னி, கன்பரா ஆகிய நகரங்களில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர் விழா இந்த ஆண்டு 27 – 08 – 2016 இல் கோல்ட்கோஸ்டில் நடைபெறும். நடைபெறும் இடம்:   Auditorium, Helensvale Library, Helensvale Plaza Helensvale 4212, Gold coast, QLD இவ்விழாவில் கண்காட்சிகள், கவியரங்கு, கருத்தரங்கு, பட்டி மன்றம், வாசிப்பு அனுபவப்பகிர்வு, ...

Read More »

அமிதாப் பச்சனை டுவிட்டரில் பின்தொடர்வோர் 22 மில்லியனாக உயர்ந்தது

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை சமூக வலைத்தளமான டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 22 மில்லியனாக (இரண்டு கோடியே இருபது லட்சமாக) இன்று(21) உயர்ந்தது. இதுதொடர்பாக, இன்று பூரிப்புடன் கருத்து தெரிவித்துள்ள அமிதாப் பச்சன், தன்னை பின்தொடரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அமிதாப்புக்கு அடுத்தபடியாக, டுவிட்டரில் ஷாருக்கானை 20.8 மில்லியன் பேரும், சல்மான் கானை 19 மில்லியன் பேரும், அமீர் கானை 18.3 மில்லியன் பேரும், பின்தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் தேதி நிலவரப்படி அமிதாப் பச்சனை ...

Read More »

ஆஸ்திரேலிய கடற்கரையில் கரை ஓதுங்கிய அதிசய கடல்வாழ் உயிரினம்

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் எனும் இடத்திலுள்ள கடற்கரையை அண்டிய பகுதியில் அரியவகை கடல் உயிரினம் ஓன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இது  Final Fantasy எனும்  video gameல் வரும் ஒரு உருவத்தை ஒத்ததாகக் கானப்படுகிறது. ஆய்வாளர்களின் கூற்றுப்படி, உலகில் அரிய கடல் உயிரினமான Glaucus Aflanticus எனும் இவ் உயிரினம் பொதுவாக Blue Dragon எனவும் அழைக்கபடுகின்றது. இவ் உயிரினம் தென் ஆபிரிக்க மற்றும் ஆஸ்திரேலிய கடற்பரப்புகளில் இதற்கு முன்னரும் தோன்றியுள்ளது. இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள இந்த Blue Dragonஐ தொடுவதை தவிர்த்துக்கொள்ளும்படி உயிரியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Read More »

அவுஸ்திரேலியா மெல்பேணில் தியாகி திலீபன் நினைவு நிகழ்வு – 2015

பாரததேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, 15 – 09 – 1987முதல் சாகும் வரையிலான உண்ணாநோன்பிருந்து 26 – 09 – 1987 அன்று, ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின், 28-வது ஆண்டு நினைவான “தியாகதீபம் கலைநிகழ்வு” 26 – 09 – 2015 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு ஒஸ்ரேலியாவில் மெல்பேண் நகரின் சென் ஜூட் மண்டபத்தில்  சிறப்பாக நடைபெற்றது. திருமதி தமயந்தி சுபாஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஒஸ்ரேலியத் தேசியக்கொடியை மூத்த தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் ...

Read More »

Two Nation One Country – தமிழரசுக்கட்சி விளக்கம்!

தந்தை செல்வநாயகம் அவர்களின் 38 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழரசு கட்சியால் அனுப்பிவைக்கப்பட்ட கட்டுரை: தமிழரசுக்கட்சியின் மதிப்பார்ந்த தலைவனாக விளங்கிய தந்தை செல்வநாயகம் அவர்களது சிரார்த்த தினத்தையொட்டி இந்த விடயத்தை ஆராய்வது காலப் பொருத்தமானது எனக் கருதப்படுகிறது. தமிழ்பேசும் மக்களின் அரசியல் வரலாற்றில் ‘தமிழ்த் தேசிய இனம்’ என்ற வார்த்தைப் பிரயோகம், தமிழரசுக்கட்சியின் அங்குரார்ப்பண நாளில் இருந்தே பாவனையிலிருந்து வருகின்றது. 18.12.1949அன்று நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் முதலாவது கூட்டத்தில் கட்சியின் அமைப்புத் தீர்மானத்தை பிரேரித்துப் பேசிய தந்தை செல்வநாயகம் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ”நாட்டின் ஒற்றுமைக்குப் ...

Read More »

அவுஸ்திரேலியா மெல்பேணில் “தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் – 2015” நினைவு நிகழ்வுகள்

அவுஸ்திரேலியா மெல்பேணில் “தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் – 2015” நினைவு நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை 19 – 04 – 2015 அன்று எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. மெல்பேணில் ஹைடில்பேர்க் இல் அமைந்துள்ள சென்ற்.ஜோன்ஸ் நிகழ்ச்சி மண்டபத்தில் சரியாக மாலை 6 மணிக்கு தேசியக் கொடியேற்றலுடன் நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வு ஆரம்பமாகியது. அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் திரு. குணரட்ணம் அவர்களும், தமிழீழத் தேசியக்கொடியை நாடுகடந்த தமிழீழ அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு மாணிக்கவாசகர் அவர்களும், ஏற்றியதைத் தொடர்ந்து நாட்டுப்பற்றாளர்கள் மாமனிதர்களுக்கான ஈகச்சுடரேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. ...

Read More »

வெளிநாட்டு அமைச்சர் யூலி பிசப் சென்னையில்!!

இந்தியாவுக்கான தனது வெளிநாட்டுப்பயணத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சர் யூலி பிசப் இந்தியாவில் அகதிகளாக தங்கியுள்ள தமிழர் பிரதிநிதிகளையும் சந்தித்துள்ளார். தற்போது இலங்கைத்தீவில் தமிழ்மக்களுக்கான புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்கம் (Rehabilitation and Reconciliation) என்பவற்றை ஏற்படுத்துதல் தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அகதிகளாக அவுஸ்திரேலியாவுக்கு வருவதை மனிதகடத்தல் என்ற ரீதியில் எவ்வாறு தொடர்ந்தும் தடுக்கப்படலாம் என்பதுபற்றியும் தமிழ்நாடு முதல்வருடன் அவர் கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போதைய இந்திய – அவுஸ்திரேலிய நெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் சென்னையிலும் தனது இந்தியாவுக்கான அவுஸ்திரேலியாவின் துணைத்தூதரகத்தையும் திறந்துவைத்தார். மும்பாயில் ஏற்கனவே ...

Read More »

புலத்துதமிழரை வழிக்கு கொண்டுவரும் சிங்கப்பூர் பேச்சுவார்த்தை பின்னனிகள்!!

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றிற்கும் தென்னிலங்கைக் கட்சிகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் நடக்கும் பேச்சுவார்த்தைகள் எதனைப் பற்றியவை? குறித்த பேச்சுவார்த்தைகளின் பின்னனி என்ன? என்பது பற்றி தமிழ்ச்சிவில் சமூக அமையத்தின் பேச்சாளர் குருபரன் கனேடிய தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணலில் பல்வேறு விடயங்களை பகிர்ந்துகொள்கின்றார். சிங்கப்பூர் கூட்டம் தொடர்பாக உலகத் தமிழ்ப் பேரவையின் ஊடக அறிக்கை: நேர்காணலில் குறிப்பிடும் தமிழ்நெட் செய்தி நேர்காணலில் குறிப்பிடும் In Transformation Initiatives பணிப்பாளரின் நேர்காணல் நேர்காணலில் குறிப்பிடும் ட்விட்டர் உரையாடல் மூலம் – https://rkguruparan.wordpress.com/2015/04/15/singaporeprocess/

Read More »

அஞ்சலிக்கு அனுமதிக்கப்படுமா முள்ளிவாய்க்கால்?

2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த முல்லைத்தீவின், முள்ளிவாய்க்கால் கரையோரத்தில், முதல் முறையாக ஒரு சர்வதேசப் பிரமுகர், போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார். இம்மாதம் முதல்வாரம், இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கியே, முள்ளிவாய்க்காலில் மலர் அஞ்சலி செலுத்திய முதல் சர்வதேசப் பிரமுகராவார். இவர் முள்ளிவாய்க்கால் கரையோரமாக நடந்து சென்று, விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு, தரைதட்டி நின்ற பாரா-–3 என்ற கப்பலின் எச்சம் இன்னமும் காணப்படும், பகுதியை அண்டிய கடற்கரையில் ...

Read More »