பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை சமூக வலைத்தளமான டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 22 மில்லியனாக (இரண்டு கோடியே இருபது லட்சமாக) இன்று(21) உயர்ந்தது.
இதுதொடர்பாக, இன்று பூரிப்புடன் கருத்து தெரிவித்துள்ள அமிதாப் பச்சன், தன்னை பின்தொடரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அமிதாப்புக்கு அடுத்தபடியாக, டுவிட்டரில் ஷாருக்கானை 20.8 மில்லியன் பேரும், சல்மான் கானை 19 மில்லியன் பேரும், அமீர் கானை 18.3 மில்லியன் பேரும், பின்தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் தேதி நிலவரப்படி அமிதாப் பச்சனை டுவிட்டரில் பின்தொடர்ந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே எழுபது லட்சமாக இருந்த நிலையில் 11 மாதங்களில் அவரை சுமார் 50 லட்சம் பேர் புதிதாக பின்தொடர ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal